இரத்தம் என்றாலே அநேகமானோர் ஒருகணம் கலங்கித்தான் போவார்கள். அதுவும் நமது இரத்தத்தை நாமே பார்க்கும் போது ஏற்படுகின்ற உணர்வு இன்னும் கொஞ்சம் பயங்கரமானது நிறையப் பேருக்கு.
நமது உடலில் இருந்து அளவுக்கதிகமான இரத்தம் வெளியேறுவதனாலேயே சில மரணங்கள் நிகழ்கின்றன .குறிப்பாக விபத்துக்களுக்கு உள்ளான ஒருவர், யுத்த வெடி குண்டுகளிலே சிக்கிய ஒருவர், அல்லது குழந்தை பிறப்புக்கு பின் அதிகம் ஏற்படும் ரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறப்பதற்கு முக்கிய காரணம் இந்த இரத்தப்போக்காகும்.
இவ்வாறு இரத்தம் போவது ஆங்கிலத்திலே கீமரேஜ்(haemorrahage) எனப்படுகிறது.இந்த இரத்தப்போக்கு சாதாரணமாக ஒரு காயத்தினால் வெளியிலே எமக்கு தெரியும் படி நடைபெறும் போது வெளிப்புற இரத்தப் போக்கு (external haemorrahage)எனப்படுகிறது. இதுவே எமது கண்களுக்குத் தெரியாமலும் நடைபெறலாம்.
உதாரணமாக வயிற்றிலே பலமாக அடிபட்ட ஒருவருக்கு வெளியில் காயம் இல்லாவிட்டாலும் உள்ளே இருக்கும் சில உறுப்புக்களில் சிதைவு அல்லது காயம் ஏற்பட்டு நமது கண்களுக்குப் புலப்படாமல் இரத்தப் போக்கு ஏற்படலாம்.
இது உட்புற இரத்தப்போக்கு(internal haemorrahage எனப்படுகிறது.
வயிற்றினுள்ளே இலகுவாக பாதிக்கப்பட்டு நமது கண்களுக்குத் தெரியாமலே இரத்தக் கசிவுகளை பொதுவாக ஏற்படுத்தும் உறுப்புக்கலாவன, ஈரல்(liver) , சதையிpancrease) , மண்ணீரல்(spleen),கீல்வாய்ப் பெருனாளம்(inferior vena cava) எனும் குருதிக் குழாய்.
இந்த உட்புற ரத்தப்போக்கினை உடனடியாக இனங்கண்டுகொள்ள , ஒரு வைத்தியரினாலேயே முடியும். ஆனாலும் எதோ ஒரு விதத்தால் வயிற்றிலே தாக்கப்பட்ட அல்லது தாக்கப் பட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ள ஒருவர் சடுதியாக மாற்றங்களை காட்டுவாரானால், அதாவது, உணர்வு நிலை
குறைதல், கைவிரல்கள் நீல நிறமாதல் , கை கால் போன்றவை குளிர் நிலையை அடைதல் , வயிற்றிலே தொடர்ந்தும் நோ இருத்தல் போன்ற குனங்குறிகளைக் காட்டுவாரானால் அவர் யாருக்கும் தெரியாமல் இரத்தத்தை இழந்து கொண்டிருக்கலாம் என்பதை நீங்களும் ஊகித்து உடனடியாக வைத்தியரின் ஆலோசனை நாடுவது உகந்தது.
நான் மேலே சொன்ன படி வெளியில் அடையாளம் இல்லாமல் உட்புற பகுதிகளை மட்டும் பாதிக்கும் காயங்களை அல்லது தாக்குதல்களை ஆங்கிலத்திலே blunt trauma என்கின்றோம்.
மேலும் நான் சொன்னது வயிற்றிலே ஏற்படும் பாதிப்பை மட்டுமே , ஆனாலும் இந்த உட்புற இரத்தப்போக்கு நெஞ்சு, தலை போன்ற பகுதிகளையும் மட்டுமல்ல, கை கால் போன்ற உறுப்புக்களிலும் கூட ஏற்படலாம். இதுபற்றி தொடராக அடுத்துவரும் பதிவுகளிலே குறிப்பிடுகிறேன்....

2 comments:
அன்பின் துமிழ்
பயனுள்ள தகவல்கள்
நல்வாழ்த்துகள்
அண்ணே படிக்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு.. இதுக்கு எல்லாம் பயந்தா விஷயம் தெரிஞ்சக்க முடியாது என்பதால் படிச்சு இருக்கேன்.
நன்றி.
Post a Comment