Wednesday, December 16, 2009

ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்

ஆண்கள் பிழையாக புரிந்து கொண்டு அச்சப்படும் விடயங்களில் ஒன்று அதிகாலை நேரத்தில் அவர்களின் ஆணுறுப்பில் இயல்பாக ஏற்படுகின்ற விறைப்புத் தன்மை ஆகும்.

அதாவது அதிகாலை வேலை அவர்கள் விழித்துக் கொள்ளும் போது எந்த வித பாலியல் உணர்ச்சியும் இல்லாமல் தாமாகவே விறைத்திருக்கும் ஆணுறுப்பைப் பார்த்து தங்களுக்கு ஏதோ நோய் இருப்பதாய் கற்பனை செய்து , வெளியில் சொல்லவும் வெடகப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் .

உண்மையில் இது வெட்கப் பட வேண்டியதோ அல்லது அச்சப்பட வேண்டிய விடயம் அல்ல. சாதாரணமாக இது எல்லா ஆண்களிலும் காணப்படும் உடற் தொழிற்பாட்டு மாற்றமாகும்.

அதிகாலை நேரத்தில் ஆணுறுப்புக்கு அதிகம் ரத்தம் போவதாலே இது ஏற்படுகின்றது.

இந்த விறைப்புத் தன்மையுட சில வேளைகளில் விந்து நீர் வெளியேற்றமும் இயல்பாக ஏற்படலாம்.

இந்த அதிகாலை விறைப்பு மருத்துவ ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதாவது தங்களால் உடலுறவின் போது சரியான விறைப்பினை அடையமுடியவில்லை எனும் ஆண்களிலே உண்மையான காரணத்தை கண்டு பிடிப்பதற்கு இது உதவுகின்றது.

அதாவது ,நான் ஏற்கனவே ஒரு இடுகையில் கூறிய படி ... எனப்படும் சரியான விறைப்பினை அடையா முடியாதத்திற்கு முக்கிய காரணம் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

இவ்வாறு தங்களால் சரியான விரைப்புத்தன்மையை அடைய முடியவில்லை எனும் ஆண்களின் ஆணுறுப்புக்கள் மற்ற ஆண்களைப் போல அதிகாலையில் தானாக விறைககுமானால் , அதன் அர்த்தம் அவர்களின் உடலிலோ அல்லது ஆணுருப்பிலோ எந்த விதமான பிரச்சினையும் இல்லை , உளவியல் பிரச்சினைகளாலே உடலுறவின் போது அவர்களின் ஆணுறுப்புக்கள் விறைக்க மறுக்கின்றன என்பதாகும்.

அதைவிடுத்து உடலுறவின் போது ஆணுறுப்பு விரிக்கவில்லை எனும் ஆனில் இந்த அதிகாலை விறைப்பும் ஏற்பட வில்லை என்றால உளவியல் பிரச்சினைக்கு அப்பால் அவரின் உடலிலே வேறு பிரச்சினை இருக்கலாம் .

ஆகவே ஆண்களே உங்களுக்கு அதிகாலை விறைப்பு மற்றும் விந்து நீர் வெளியேற்றம் ஏற்பட்டாலோ அச்சப்பட வேண்டாம் , சந்தோசப்படுங்கள் நீங்கள் ஆண்மைத்தன்மையானவர் என்று.


உடலுறவின் போது ஆணுறுப்பு சரியான முறையில் விறைக்க மறுக்கிறது எனும் ஆண்களே , சற்று அவதானித்துப் பாருங்கள், உங்களின் ஆணுருப்புக்களிலே அதிகாலை நேரத்தில் விறைப்பு ஏற்படுமானால் உங்களின் உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை , உளவியல் ரீதியான உங்கள் அச்சமே உடலுறவின் போது ஆணுறுப்பு விறைக்க மறுப்பதற்கான காரணமாகும்.


17 comments:

அண்ணாமலையான் said...

”உண்மையில் இது வெட்கப் பட வேண்டியதோ அல்லது அச்சப்பட வேண்டிய விடயம் அல்ல.” தொடரட்டும் தங்கள் விழிப்புணர்வு பதிவுகள்..

சுடுதண்ணி said...

மிகவும் பயனளிக்கும் பதிவுகள் மற்றும் பொதுவாக இருக்கும் பல சந்தேகங்களுக்குத் தெளிவளிக்கும் தகவல்களை வழங்கும் உங்களுக்கு ஒரு
"விறைப்பான" சல்யூட் ;) :)

கோவி.கண்ணன் said...

இது ஆண்களுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே நடைபெறும் நிகழ்வுதான்.

Anonymous said...

Thanks for your useful post. Your blog is treasure for tamil users to clarify their doubts.

நாஞ்சில் பிரதாப் said...

இதுபோன்ற விழிப்புணர்வு பதிவகுள் வரவேற்கப்படுகிறது. உறக்கத்தில் விந்து வெளியாவது கூட பலபேருக்கு பிரச்சனையாக உள்ளது. அதைப்பற்றி கூறுங்களேன் டாக்டர்.

Anonymous said...

முதுகெலும்பிலேந்து விந்து உருவாகுதா டாக்டர்

Jawahar said...

உபயோகமான, தைரியமளிக்கும் தகவல். ஆனால், சர்க்கரை அல்லது கொலஸ்ட்ரால் இருக்கிறவர்களுக்கு காலை நேரத்தில் நீங்கள் சொல்லும் இந்த நிகழ்வு நடந்தாலும், தேவையான போது soft erection தான் ஆகும் என்று ஒரு சிலர் சொல்வது குறித்து?

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

If erection problem is due to nervous system,please follow the the test.
Insert a left hand finger in anus.
squeeze bulb of penis with right hand.if your anus shrinks there is no
nervous problem.other wise it is. please consult a neurologist for erectile dysfunction

G VARADHARAJAN said...

சபாஷ் துணிச்சலான அலசல் வெட்கப்பட் வேண்டியதில்லை இனி அதிகாலை விரைப்பைக் கண்டு தொடரட்டும் இது போன்ற ஆய்வுக் கட்டுரைகள்

ரோஸ்விக் said...

அய்யய்ய... இதுக்கு ஏன் வெக்கப்படனும். நல்லா விஷயம் தானே!?

தொடர்ந்து எழுதி எல்லோருக்கும் விழிப்புணர்வு கொடுங்கள். மிக்க நன்றி.

D.R.Ashok said...

ஆண்களுக்கு மிகவும் தேவையான பதிவு

சுப.நற்குணன் said...

இனிய நண்பர் துமில்,

பாலியல் விடயங்களை கொஞ்சமும் விரசம் இல்லாமல், இயல்பாகப் படிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதுகிறீர்கள்.

தொடர்க உங்கள் பணி.

RAJESH said...

உங்கள் பதிவுகள் அணைத்தும் அருமை
தொடருட்டும் உங்கள் பணி

arivu said...

idhu thinamum nadaiparum nigalvaa....

Anonymous said...

1) "மிகவும் பயனளிக்கும் பதிவுகள்"

2) "இதுபோன்ற விழிப்புணர்வு பதிவகுள் வரவேற்கப்படுகிறது."

3) "உபயோகமான, தைரியமளிக்கும் தகவல்."

Please continue your excellent and useful post to avoid SHYNESS. Your blog is important and essential for all Indian teenage individuals and adults, who is having lots and lots of doubts in the sex relationship.

thanjai gemini said...

மிக்க நன்றி, சிறந்நத பதிவு,
பல ஆண்களின் மனதில் உள்ள குழப்பங்களை பயங்களை போக்கும் உங்கள் பணி தொடரட்டும்,

தோழி said...

சிறந்நத பதிவு,