Showing posts with label வயாக்கிரா. Show all posts
Showing posts with label வயாக்கிரா. Show all posts

Tuesday, June 1, 2010

வயாக்கிரா பற்றி சில தகவல்கள் !

கேள்வி

மதுரை சரவணன் //
நல்ல பாலியல் கருத்துக்களை கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

என் நண்பர் உடலுறவை நீடிக்க , மேன் பவர் 50 கிராம் பயன்படுத்துகிறார். இது இதய நோய் உண்டாக்கும் என்றால் இல்லை என்கிறார். தங்கள் மேலான கருத்து கூறவும் ,என் நண்பணுக்கு எடுத்து சொல்ல உதவும்.//


பதில்


நல்லது சரவணன்.
உங்கள் நண்பன் பாவிக்கும் மாத்திரையின் பெயர் மேன் பவர் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். மேன் பவர் என்பது கம்பனி பெயராக உள்ளது (Brand name). அதாவது விஞ்ஞான ரீதியான பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை இருந்தாலும் அவர் 50mg எனும் அளவிலே பாவிக்கிறார் என்பதை வைத்துக் கொண்டு பார்க்கும் போது இது சில்டனபில் (Sildanafil) எனப்படும் மாத்திரை என்றே நினைக்கிறேன். இந்த மாத்திரை வேறு ஒன்றுமில்லை வயாக்கிரா எனப்படும் மாத்திரையாகும். இந்த மாத்திரை வேறு ஒரு கம்பனியால் உற்பத்தி செய்யப் பட்டு விற்கப்படும் போது மேன் பவர் என்று விற்கப்படுகிறது .

சரி இந்த வயாக்கிரா பற்றி நான் ஏற்கனவே ஒரு இடுகையில் பதிவு இட்டு இருக்கிறேன் .

உங்களுக்காக அந்த இடுகையை  மீள் பதிவு செய்கிறேன்.
நன்றி




வயாகரா பாவிப்பவர்களுக்காகவும் பாவிக்க நினைப்பவர்களுக்காகவும்
வயாகரா எனப்படுவது உண்மையில் சில்டநேபில் (SILDANAFIL) என்ற பதார்த்தத்தைக் கொண்ட மாத்திரையின் உற்பத்திப் பெயராகும்.
இது ஆணுறுப்பில் ரத்தத்தை தேக்கி வைப்பதன் மூலம் அதிக நேரம் விறைப்புத் தன்மையை பேண உதவுகிறது.
வயாக்ரா ஆனது 25mg, 50mg, 100mg என்ற அளவுகளிலே கிடைக்கப் படுகிறது.

வயாகரா மாத்திரை உட்கொண்டு அரை மணிநேரத்திலேயே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை அடைந்து விடும். இதனால்தான் இந்த மாத்திரை உடலுறவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளப் பட வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.

ஆனால் இந்த மாத்திரை கொழுப்பு நிறைந்த உணவுகளோடு உட்கொள்ளப் பட்டால் இது உறிஞ்சப்பட்டு ரத்தத்தை அடைவது தாமதமாகும்.

இதய நோயாளிகள் , குறிப்பாக அவர்கள் அவர்களுடைய இதய நோய்க்கு மாத்திரைகள் பாவிப்பவர்களேயானால் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்.

இதய நோய்க்கு உட்கொள்ளும் சில மாத்திரைகளோடு வயாகரா உட்கொள்ளப் பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். குறிப்பாக ISMN /ISDN எனப்படும் மாத்திர வகை இருதய நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மாத்திரையாகும் இதனோடு வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அமுக்கம் குறைந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.


வயகரா மாத்திரை உட்கொள்ளுபவர்கள் கீழ்வரும் பக்க விளைவுகளைக் கூட அனுபவிக்கலாம்,

  1. தலையிடி
  2. வயிற்று நோ
  3. வாந்தி
  4. வாந்தி வரும் உணர்வு
  5. வயிற்றோட்டம்
  6. பச்சை மற்றும் நீல நிறங்களை வேறுபிரிக்க முடியாமை

போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
பி.கு- மேன் பவர் எனப்படுவது வயாக்கிரா எனப்படும் மாத்திரை என்ற ஒரு அனுமானத்திலே இந்தப் பதிலை அளித்துள்ளேன். அவ்வாறு இல்லாமல் அது வேறு மாத்திரையாக இருக்குமானால் அதன் விஞ்ஞானப் பெயரை சொல்லுங்கள் தெளிவாக விளக்கம் அளிக்கிறேன்.

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் பதில் அளிக்கிறேன்.