Saturday, April 17, 2010

பிறப்புறுப்பில் ஏற்படும் உண்ணிகள்(பாலியல் நோய்கள்-4)

பாலியல் நோய்கள் -1

பாலியல் நோய்கள் 2 

பாலியல் நோய்கள்-3

 

 

பிறப்புறுப்பில் ஏற்படும் உண்ணிகள் (Genital Warts)

 இது ஹியுமன் பப்பிலோமா எனும் வைரசினால் ஏற்படுகின்ற நோயாகும்.

தொற்ற ஏற்பட்டு இரண்டு வாரமளவில் நோய் வெளிக்காட்டப்படும்.

அறிகுறிகள்

பாலுறுப்புக்களில் உண்ணிகள் வளர்த்தல்-
சிறிய பூக்கோவா போன்ற இளம் சிவப்பு அல்லது செந்நிற உண்ணிகள்.  இவை நோவை ஏற்படுத்த மாட்டாது .

பாலியல் உறுப்பில் ஏற்பட்ட  நோய்களின் படங்கள்


வாய்ப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் தொற்றின் படங்கள்

இந்த உண்ணிகள் பாலியல் தொடர்புக்கு உள்ளாகும் இடங்களான பெண்ணுறுப்பு, ஆணுறுப்பு, குதம் (மல வாயில்) , வாய் போன்ற இடங்களில் ஏற்படும்.
தொடுகை காரணமாக இவற்றில் இருந்து சிலவேளை இரத்தம் வெளிவரலாம்.

இந்த வைரஸ் கருப்பைக் கழுத்திலும் தொற்றை ஏற்படுத்தலாம். இவ்வாறு கருப்பைக் கழுத்திலே தோற்று ஏற்பட்டவர்களுக்கு பிற்காலத்தில் கருப்பைக் 
கழுத்து புற்று நோய் கூட ஏற்படலாம். பப் சோதனை (PAP)எனப்படும் சோதனை மூலம் வைரசு தோற்றி உள்ளதா என்று துரிதமாக அறிந்து  கொள்ள முடியும்.

கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் பிறப்பின் போது தொடுகை ஏற்படுவதால் குழதைகளுக்கும் இந்த நோய் ஏற்படலாம்.


இப்போதைய வைத்திய வசதிகள் மூலம் இந்த நோயும் முற்றாக குணமாக்கப் படலாம்.


Wednesday, April 14, 2010

உடலுறவில் ஏற்படும் பிரச்சினைகள்,!தீர்வுகள்!

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் !

டாக்டர் , வணக்கம்.  தங்களின் தன்னலமில்லா இந்த முயற்சிக்கு என் நன்றி.
எனக்கு வயது 34 , என்  மனைவிக்கு 27 . திருமணமாகி 2 .2  வருடங்கள் ஆகிறது.
இருவருக்குள்ளும்  எந்த வித பிரச்னையும் இல்லை. மிக சந்தோஷமாக இருக்கின்றோம்.
சில காரணங்களுக்காக முதல் வருடத்தில் குழந்தை பிறப்பை தள்ளி  போட
முடிவு செய்தோம். கருத்தடை சாதனம் எதுவும் பயன்படுத்தவில்லை..  4  - 5
முறை மட்டுமே முழு  உறவில் ஈடு பட்டோம். ஏன் என்றெல்லாம் புரியவில்லை..
ஆனால் தொடர்ந்து foreplay மட்டுமே செய்து வந்தோம் ..

4 - 5 முறை முழு உடலுறவில்  ஈடுபட்டோம் அதில் 1 அல்லது 2  முறை தான்
penetration  உணரமுடிந்தது.. மற்ற  சமயங்களில்  penetration முடியவில்லை.
1 வருடத்திற்கு குழந்தை வேண்டாம் என்ற முடிவெடுத்ததால் , இதனை பெரியதாக
எடுத்துக்கொள்வில்லை.  இதுவே பிரச்னையாகும் என்று அப்போது உணரவில்லை.

கடந்த ஒரு வருடமாக குழந்தை வேண்டும் என்று முயற்சிக்கின்றோம் ஆனால்  இந்த
பிரச்னை உள்ளது. penetration  செய்ய இயலவில்லை.  1  வருடத்துக்கு பிறகு
முயற்சி செய்த போது ..  penetration  முடியவில்லை..  ஒரு 2 , 3 மாதங்கள்
போன பிறகு இர்வருக்கும் மனதளவில் ஒரு வித பயம் வந்து விட்டது..  முன்பே
கவனிக்காமல் தவறு செய்து விட்டோமோ என்ற பயம் வந்தது..  வீட்டிலும்
அனைவரும் கேட்க ஆரம்பித்து.. மருத்துவரிடம் போக சொல்லிவிட்டார்கள்.

ஒரு மருத்துவரை அணுகினோம்.. அவர்கள் இருவருக்கும் டெஸ்ட் செய்து விட்டு ,
மனைவிக்கு  உடளவில் / எனக்கு விந்து அனாலிசிஸ் ல்  எந்த குறையும் இல்லை
என்று கூறிவிட்டார்.
ovulation கு சில மாத்திரை மட்டும் கொடுத்தார். 3  மாதங்கள் முயற்சித்து
விட்டு வரும்படி கூறினார்.  அவரிடம் இது பற்றி கூறினோம்.  மனசை ரிலாக்ஸ்
பண்ணுங்க என்பது போன்ற சில அறிவுரை கூறினார்.

என் மனைவியும் நானும் இது பற்றி ஓப்பனாக பேசுகிறோம், ஏன் முடியவில்லை
என்று இருவருக்கும் புரியவில்லை. இருவரும் மனம் விட்டு பேசினாலும் , மனசு
என்னவோ போலுள்ளது.. இப்போது எல்லாம் உடலுறவில் ஈடுபடவே ஒரு தயக்கம்
உள்ளது.. ஒரு வேலை இப்போதும் penetrate  செய்ய முடியாமல் போய் விடுமோ
என்ற தயக்கம்  மட்டுமே மேலோங்கிவுள்ளது.. (இருவருக்கும்)

ஒரு விஷயம்.. !  சில மாதங்களாகவே எனக்கு விறைப்பு தன்மையில் கொஞ்சம்
மாற்றம் உள்ளது . விறைப்பு இருக்கிறது .. ஆனால் 1  வருடத்துக்கு முன்பு
இருந்தது போல "அதிக" விறைப்பு இல்லாதது போல உணர்கிறேன்.. ஒரு 20  - 25
சதகிவிதம் குறைந்தது போல் உள்ளது.

இது மனதளவு ஏற்பட்ட பாதிப்பின் விளைவா என்பதும் புரியவில்லை.

இப்போதெல்லாம் வீட்டில், உறவினர்களில் என்று அனைவரும் குழந்தை பற்றி
கேட்க கேட்க , இருவருக்குமே மனம் சஞ்சலபடுகிறது
சற்று மனச்சுமை அதிகமாக உள்ளது. non -penetration ல் ஏற்பட்ட
மனச்சோர்வோடு இதுவும் சேர்ந்து விட்டது இன்னும் அதிகமாக உள்ளது

விறைப்பு தன்மை எவ்வளவு இருக்கவேண்டும்? ஆணுறுப்பு அளவில் எதுவும் இல்லை
என்று உங்களின் ஒரு பதிவில் படித்தேன்..  விறைப்பு தன்மை பற்றி தெளிவு
வேண்டும்.. உங்களின் ஆலோசனையும் வேண்டும்.
சைடு எப்பக்ட் இல்லாத மாத்திரை எடுத்துக்கொள்ளலாமா

மிக்க நன்றி
(அந்தரங்கம் கருதி பெயர் வெளியிடப்படவில்லை )
...........................

பதில்

நல்லது நண்பரே!
இது உங்களுக்கு மட்டுமல்ல பொதுவாக காணப்படும் ஒரு பிரச்சினையாகும். ஆனாலும் இது பாலியல் சம்பந்தமாக போதிய அறிவு இல்லாதவர்களுக்கே அதிகம் ஏற்படுகின்ற பிரச்சினை ஆனால் நீங்களோ நிறைய விடயங்களை தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி ஒரு பிரச்சினையில் உள்ளீர்கள் எனும்போதுதான் ஆச்சரியமாக உள்ளது.

சரி இனி விடயத்திற்கு வருவோம் !

முதலில் நீங்கள் குழந்தைப் பிறப்பை பிற்போடுவதற்காக உடலுறவைத் தவீர்த்தது உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.குழந்தை பிறப்பை பிற்போட எவ்வளவோ வழிமுறைகள் இருக்கும் போது நீங்கள் உடலுறவைத் தவிர்த்து குழந்தைப் பிறப்பை பிற்போட நினைத்திருப்பதை வைத்துப் பார்க்கும் போது , உண்மையில் உங்கள் இருவருக்குமே உடலுறவு முக்கியமாக penetration   ( புணர்ச்சி ) சம்பந்தமாக அப்போதே நிறைய அச்சம் இருந்திருக்க வேண்டும். இருவரும் அதை வெளிக்காட்டாமல் குழந்தைப் பிறப்பைக் காரணம் காட்டி உடலுறவைத் தவிர்த்து வந்துள்ளீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

மற்றது நீங்கள் இப்போதும் penetrtion செய்ய (புணர்ச்சி) முடியாமல் இருப்பதாக கூறுகிறீர்கள்.

புணர்ச்சியில் ஈடுபட முடியாததிற்கு பல காரணங்கள் மருத்துவ ரீதியாக இருந்தாலும் , நீங்கள் ஏற்கனவே சில முறை புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளதை வைத்துப் பார்க்கும் போது இலகுவாக சொல்லி விடலாம் அப்படியான மருத்துவ நோய்கள் உங்கள் இருவருக்கும் இல்லை என்று.

இப்போது உங்கள் ஆணுறுப்பின் விறைப்பும் குறைந்து வருவதாக கூறுவதை வைத்து பார்க்கும் போது தெரிகிறது நீங்கள் மனதளவிலே தளர்ந்து வருகிறீர்கள்.

வெளிப்படையாகச் சொல்வதானால் உங்கள் இருவருக்கும் உடல் அளவிலே எந்தப்பிரச்சினையும் இல்லை .
உடலுறவு என்பது இயற்கையான ஒரு நிகழ்வு இதற்காக எந்த அச்சமும் படவேண்டிய அவசியமில்லை. அதற்காக எந்த மருந்துகளும் உட்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

மனச் சஞ்சலத்தை தவிர்த்து உங்கள் இல்லறத்தை இனிதாக அமைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இணைப்புக்கள் உங்களுக்கு பயனளிக்கலாம்.

ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்

இந்தப் பிரச்சினையில் இருந்து உங்களால் மீளவே முடியவில்லை என்றால் உங்களுக்குத் தேவை மருந்துகள் அல்ல . மாறாக செக்ஸ் தெரப்பி எனப்படும் பயிற்ச்சியே. இதற்கான பயிற்சி பெற்ற நபர்கள் நீங்கள் இருக்கும் நாட்டில் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து விஞ்ஞான ரீதியான அந்தப் பயிற்சி ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன் உங்கள் மன பயத்தை நீக்கி வையுங்கள் எதுவுமே தேவை இல்லை !

Monday, April 12, 2010

பாலியல் நோய்கள்-3(பொது இடத்தில் தவிர்க்கவும்)

பாலியல் நோய்கள் -1
பாலியல் நோய்கள் -2
மேலே சொடுக்கி இந்த தொடர் இடுகையின் முந்திய இடுகைகளை பாருங்கள்சிபிலிசு (Syphillis)


இது ட்ரிபோனாமா பாலிடம்(Treponema pallidum )எனும் பக்டீரியாவால் ஏற்படுகின்றது.


இது தனது அறிகுறிகளை மூன்று பருவங்களாக வெளிக்காட்டும்.


முதற் பருவத்திலே பிறப்பு உறுப்புக்களைச் சுற்றி காயங்கள் ஏற்படும். அவை சற்றி தடிப்பான காயங்களாக இருந்தாலும் அவை நோவினை ஏற்படுத்தாது.                                    பிறப்பு உறுப்புக்களிலே ஏற்படும் ஆரம்ப நிலை 
                                                          படம் -1
                                                          படம் -2
                                                          படம் -3


இந்த பருவத்தில சுகமாக்கப்படா விட்டால் அந்தக் கிருமி பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களில் இருந்து குருதியை அடைந்து உடலின் ஏனைய பகுதிகளுக்கு சென்று அறிகுறிகளை ஏற்படுத்தும்.இது இரண்டாவது  பருவம் எனப்படுகிறது.

அதாவது இரண்டாம் பருவத்தில் கிருமிகள் உடலின் மற்றைய பாகங்களுக்கு பரவுவதால் உள்ளங்கை , கால் , முகம் போன்ற பகுதிகளில் சிரங்குகள் ஏற்படும். இதன் பொது காய்ச்சல் , மூட்டு வலி , தலை வலி போன்றவையும் ஏற்படலாம்.


 


                                இரண்டாம் பருவத்தில் ஏற்படும் பாதிப்புக்கள்


இந்த இரண்டாவது பருவமும் சரியாக குனமாக்கப்படா விட்டால் அடுத்த பருவமான மறை பருவம் என்ற நிலை ஏற்படும். அதாவது இரண்டாவது பருவத்தில் ஏற்படும் அறிகுறிகளான சிரங்கு, காய்ச்சல், மூட்டு வலி போன்றவை மறைந்து நோய் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாத நிலையை அடையும். 
இவ்வாறு அறிகுறிகள் மறைந்தாலும் நோய் மற்றவர்களுக்கு தொற்றிக் கொண்டேதான் இருக்கும்.

இந்த மறை பருவமும் சரியான மருத்துவச் சிகிச்சை அளிக்கப் படா விட்டால் நரம்புத் தொகுதி , இதயம் என்பவை பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் இந்த நோய் முற்றாக குணமாக்கப் படலாம்.

கர்ப்ப காலத்தில் இந்த நோய் ஏற்படுமானால் கருப்பையில் உள்ள குழந்தைக்கு பல பாதிப்புக்கள் ஏற்படலாம்.

அவையாவன...

 1. கருச் சிதைவு
 2. குழந்தை செத்துப் பிறத்தல்
 3. குறைபாடுள்ள குழந்தைகள்
 4. சிபிலிசு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்றவை.

தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து பெண்களும் கர்ப்பம் தரித்தவுடன் VDRL என்ற சோதனை செய்து தங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவது உகந்தது.இலங்கையில் உள்ள அனைத்துப் கர்ப்பிணிகளுக்கும் அரசினாலேயே இலவசமாக இந்தச் சோதனை செய்யப் படுகிறது.Sunday, April 11, 2010

பாலியல் நோய்கள் 2 (பொது இடத்தில் தவிர்க்கவும் )

இது ஒரு தொடர் இடுகையாகும் . இடுகை முந்திய இடுகையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
 


பாலியல் தொற்று நோய்கள் சம்பந்தமான அடிப்படை விளக்கங்களை முந்திய இந்த இடுகையில் பார்த்தோம்.இனி ஒவ்வொரு பாலியல் தொற்று நோய்கள் பற்றியும் சற்று விளக்கமாக பார்ப்போம்.

கொனோரியா(Gonorrhea)

இது நிஸ்சோரியா கொனோரியா(Nisseria gonorrhea) எனப்படும் பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும். தொற்று ஏற்பட்டு .. தொடக்கம் .. நாட்களில் இந்த நோய் வெளிக்காட்டப்படும்.

இது ஆண் பெண் என இரு பாலாரையும் பாதித்தாலும் பிரதானமாக் குணங்குறிகளை வெளிக்காட்டுவது ஆணில் ஆகும்.


ஆண்களில் ஏற்படும் அறிகுறிகள்.

 1. ஆண் உறுப்பில் இருந்து மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
 2. சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
 3. அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்

பெண்களிலே ஏற்படும் அறிகுறிகள்

பெண்களின் கருப்பைக் கழுத்துப் பகுதியே தொற்றுக்கு உள்ளாகும்.
அநேகமான பெண்களில் நோய் தோற்றி இருந்தாலும் அதன் அறிகுறிகள் வெளிக்காட்டப்படுவதில்லை.


சில பெண்களில் சில அறிகுறிகள் ஏற்படலாம். அவையாவன.

 1. பிறப்புறுப்பின் ஊடாக மஞ்சள் நிறப் பாயம் வெளிவருதல்
 2. சிறுநீர் கழிக்கும் போது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
 3. அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படுதல்
 4. மாதவிடாய் ஒழுங்கின்றி நடைபெறுதல்
 5. அடிவயிற்றில் நோவு ஏற்படுதல்இது தவிர வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு தொண்டைக் கரகரப்பும் , தொண்டையில் தோற்றும் ஏற்படும்.

குதவழிப் புணர்ச்சியில் ஈடுபடுவோருக்கு குடல் தொற்று ஏற்படலாம்.

கர்ப்ப காலத்திலேயே இந்த நோய் ஏற்படுமானால் பிறக்கின்ற குழந்தையின் கண்களிலே தொற்றுக்கள் ஏற்படலாம். இவ்வாறு கண்களிலே தொற்று ஏற்பட்ட குழன்ற்ஹைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை நிரந்திரமாக பாதிக்கப்படலாம்.                       
நோயுள்ள தாய்க்கு பிறந்த குழந்தை
 

இந்த நோயினை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இப்போது எல்லா இடங்களிலேயும் கிடைக்கின்றன. அவை சில நாட்களுக்கே பாவிக்கப்படவும் வேண்டும்.
ஆகவே மேலே சொன்ன அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரைச் சந்தித்து மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பாலியல் நோய்கள் -1

பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடு படும் போது நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து நோய் இல்லாத ஒருவருக்கு தொற்றிக் கொள்ளும் நோய்களே பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன(sexully transmitted disease0. அதாவது பாலியல் உறவினால் தொற்றக்கூடிய நோய்கள் பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன.

இந்த நோய்கள் பாலியல் தொடர்புக்கு அப்பால் வேறு முறைகள் மூலமும் தொற்றிக் கொள்ளலாம்.

பாலியல் தொற்று நோய்கள் கடத்தப் படக்கூடிய முறைகள்....

தொற்று அடைந்த ஒருவருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உறவில் ஈடுபடுதல்
தொற்று அடைந்த ஒருவரின் குருதியை பாய்ச்சும் போது
தொற்றுள்ள ஒருவருக்கு பயன் படுத்திய ஊசியை கிருமியழிக்காது மற்றவர்கள் பாவித்தல்
பச்சை குத்துதல்
அக்குபங்க்ச்சர் முறையில் ஊசியை கிருமியழிக்காது பயன் படுத்துதல்
தாய்ப்பாலின் ஊடாக
கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு இரத்தம் மூலமாக

பொதுவான அனைத்து முறைகளையும் மேலே கூறியுள்ளேன் . எல்லா நோய்களும் எல்லா விதமாகவும் கடத்தப் படுவதில்லை.

இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் பொதுவாக காணப்படும் பாலியல் தொற்று நோய்கள்...

 1. கொனேரியா(gonorrhoea)
 2. சிபிலிசு(syphilis)
 3. பாலுறுப்பு ஹேர்பீஸ்(Genital Herpes)
 4. பாலுறுப்பு உண்ணிகள்(Genital Warts)
 5. கிளமிடியா(Clamydia)
 6. எயிட்ஸ்(Aids)
 7. ஈரல் அழற்சி B(hepatitis B)
   


எந்த விதமான செய்கைகளில் ஈடுபடுவோருக்கு இந்த நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
,
 1. ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணையை
  கொண்டவர்கள்
 2. விபச்சாரத்தொடர்பில் ஈடுபடுவோர்
 3. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோர்
 4. ஊசி மூலம் போதைப் பொருளை பாவிப்பவர்கள்
 5. பாலுறுப்புக்களில் காயம் உள்ளவர்களோடு உறவில் ஈடுபடுதல்
இந்த நோய்களின் குணங்குறிகள் பெரும்பாலும் பாலுறுப்பு பிரதேசத்திலேயே ஏற்பட்டாலும், சில நோய்களின் குனக்குரிகள் வேறு விதமாகவும் , வேறு இடங்களிலும் வெளிக்காட்டப் படலாம்.

சில பேரில் இந்த நோய்கள் நீண்ட காலத்திற்கு அறிகுறிகளை வெளிக்காட்டாமல் இருந்துகொண்டு , அவர்களோடு உறவில் ஈடுபடுவோருக்கு தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.

பாலியல் தொற்றாக இருக்கக் கூடிய சில குணங்குறிகள்!

 1. பாலுறுப்பு பிரதேசத்தில் கொப்புளங்கள் தோன்றுதல்
 2. பாலுறுப்பு பிரதேசத்தில் காயங்கள் ஏற்படுதல்
 3. பிறப்பு வழியின் ஊடாக சீழ் வெளியேறுதல்
 4. சிறுநீர் கழிக்கும் பொது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
 5. உடலுறவின் போது வலி ஏற்படுதல்
 6. அடிவயிற்று நோவு
 7. பாலுறுப்பு பிரதேசத்தில் அரிப்பு(கடி) ஏற்படுதல்
 8. பாலுறுப்பு பிரதேசத்தில் உண்ணிகள் வளருதல்
 9. விதைப் பைகளில் வீக்கமும் நோவும்

மேலே உள்ள அறிகுறிகள் வெறுமனே பாலியல் சம்பந்தமான நோய்களில் மட்டும் ஏற்படுவதில்லை வேறு பல நோயகளிலும் இந்த அறிகுறிகள் ஏற்படலாம். ஆகவே மேற்சொன்ன அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால உடனேயே அது ஒரு பாலியல் நோய் என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்.
தகுதியான வைத்திய ஆலோசனை பெற்று சரியான வைத்தியத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

மேலே சொல்லப்பட்ட பொதுவான் பாலியல் நோய்களைலே எயிட்ஸ் மற்றும் ஈரல் அழற்சி தவிர்ந்த ஏனைய அனைத்து நோய்களையும் பூரணமாக சுகமாக்குவதற்கான மருந்துகள் உள்ளதால் உங்களுக்கும் சந்தேகம் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்று உங்களை சுகமாக்கி  கொள்ளுங்கள்.

பி கு- அடுத்து வரும் இடுகைகளில் தொடர்ச்சியாக ஒவ்வொரு பாலியல் நோயாக விளக்கவிருக்கிறேன்!
            ஒவ்வொரு நோய் சம்பந்தமான படங்கள் இடுவது (பாலியல் உறுப்பின்) பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
            மறக்காமல் உங்கள் வாக்குகளை தமிழ் மனத்திலும் ,தமிளிஷிலும் அளித்துச் செல்லுங்கள்.
Saturday, April 10, 2010

ஆண்களுக்கான கர்ப்பத்தடை (வீடியோவுடன்)

முன்னைய இந்தப் பதிவிலே பெண்களுக்கு எப்படி கருத்தடை செய்யப்படுகிறது என்று விளக்கி இருந்தேன். பெண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது அந்தப் பெண்ணை முற்று முழுதாக மயக்கி , ஒரு சத்திர சிகிச்சை கூடத்திலே செய்யப்படும் ஒரு சத்திர சிகிச்சையாகும். இதனால் அந்தப் பெண்ணுக்கு பல பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
உதாரணமாக மயக்க மருந்தினால் ஏற்படும் பாதிப்பு , வயிற்றை வெட்டி செய்யும் சத்திர சிகிச்சை என்பதால் தொற்றுக்கள் , இரத்தப் போக்குகள் என்பவை ஏற்படவும் சாத்தியம் உள்ளது.

ஆனால் இந்த பாதிப்புகள் மிகவும் குறைந்த முறையில் ஆண்களிலே மிகவும் இலகுவாக கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப் படலாம்.

ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது Vasectomy எனப்படுகிறது.

பெண்களிலே நடைபெறும் சத்திர சிகிச்சையில் முட்டை கருப்பை நோக்கி நகரும் பலோப்பியன்(fallopian) குழாய் வெட்டித் தைக்கப்படும்.
ஆண்களிலே கூட அதற்கு நிகராக விந்துகள் பயணிக்கும் குழாயான Vas deferens எனப்படும் குழாய் வெட்டித்தைக்கப்படும்.

பெண்களிலே பலோப்பியன் குழாய் வயிற்றின் உள்ளே இருப்பதால் வயிற்றை வெட்டியே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படவேண்டும்.

ஆனால் ஆண்களிலே இந்த குழாயானது விதைப்பையினுள் ஆரம்பித்து வயிற்றின் அடிப்ப்குதயின் ஊடாக ஆணுறுப்பை அடைந்து விந்துகளை வெளியேற்றும்.

இவ்வாறு இந்தக் குழாய் விதைப் பையினுள் இருப்பதால் இலகுவாக விதைப் பையில் சிறிய துளை போட்டு அந்தக் குழாய்களை வெட்டித் தைத்துவிடுவதன் மூலம் விந்துகள் வெளியேறுவது தடைப்பட்டு கர்ப்பம் உருவாகுவது தடைப்படும்.

இதற்காக எந்த மயக்க மருந்துகளும் தேவை இல்லை , சத்திர சிகிச்சை கூடமும் தேவை இல்லை.

வெறுமனே வெட்டப்படும் இடத்தை மட்டும் விறைக்கச் செய்யும் மருந்துகளை பாவித்து சத்திர சிகிச்சை கூடம் இல்லாத வைத்திய சாலைகளில் கூட இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படலாம்.

இதற்காக வெட்டப் படும் துளையும் மிகவும் சிறிய(ஒரு சில cm)  காயமே.

இந்த சத்திர சிகிச்சை செய்த பின்பு தடைப்படுவது விந்துகளின் வெளியேற்றம் மட்டுமே . ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும்   போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

இந்தச் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுவதால் ஆண்மை குறையும் என்ற மூட நம்பிக்கையே ஆண்கள் கர்ப்பத்தடை செய்யாமல் பெண்கள் மட்டும் கர்ப்பத்தடை செய்து கொள்ளும் அவலம் எம் சமூகத்தில் இருப்பதற்கானகாரணமாகும்.


ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ! மிகவும் எளிமையாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நீங்கள் கருத்தடை செய்யும் வசதி இருக்கும் போது என் உங்கள் மனைவியை மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துகிறீர்கள். 
நீங்கள் உங்கள் மனைவியை உண்மையில் நேசிப்பவர் என்றால் நீங்களே கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.


      
    எவ்வளவு இலகுவாக இந்த சத்திர சிகிச்சை நடைபெறுகிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள் !கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது !

நிரந்தரமான கருத்தடை முறையாக பெண்களிலே LRT எனப்படும் சத்திர சிகிச்சை செய்யப்படுவதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

இந்த சத்திர சிகிச்சையின் போது பலோப்பியன் குழாய்  எனப்படும் இரண்டு குழாய்கள் வெட்டித் தைக்கப்படும். இந்தக் குழாயே பெண்ணின் முட்டை கருப்பையின் உள்புறம் நோக்கி நகர வழி செய்வது. இவ்வாறு நகரும் முட்டை ஆணின் விந்தைச் சந்தித்தால் இந்தக் குழாயின் உள்ளே கருக்கட்டல் நடந்து உருவாகும் சிசு கருப்பையை வந்து சேரும்.

இந்தக் குழாயை வெட்டி தைத்து விடுவதன் மூலம்  முட்டை விந்தனுவைச் சந்திப்பது தடைப்படுவதால் கருக்கடல் நடைபெறுவது தடுக்கப்படுகிறது.
                                                      பலோப்பியன் குழாய் வெட்டி அகற்றப்படும் முறை

இந்த சத்திர சிகிச்சை பெண்ணின் வயிற்றிலே சிறு வேட்டுக்கள் போடுவதன் மூலம் மேற்கொள்ளப் படலாம் அல்லது சிறிய கமராவை வயிற்றின் உள்ளே செலுத்தி அந்த கமராவினால் பார்த்தபடி சத்திர சிகிச்சையை முடிக்கலாம்.

ஒரு பெண் தனது குடும்பத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின்பே இந்த சத்திர சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின் குழந்தை பெறுவதென்பதுசாத்தியமற்றது.

Friday, April 9, 2010

அவசர கருத்தடை

குடும்பக் கட்டுப்பாடு (family planing)என்பது ஒரு தம்பதியினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானித்துக்  கொள்ளுவதற்கும் , ஒவ்வொரு குழந்தைகளுக்குமானஇடைவெளியைத்  தீர்மானித்துக்
கொள்ளுவதற்கும் பயன்படுத்தும் முறைகளாகும்.பல்வேறு விதமான முறைகள் மூலம் இது மேட்கொள்ளப் படலாம்.

இது அவசர குடும்பக் கட்டுப் பாடு(Emergency contraception) எப்படி மேற்கொள்ளப் படலாம் என்பது பற்றிய இடுகையாகும்.

நீங்கள் அவசரப் பட்டு எந்த பாதுகாப்பும் இல்லாமல் உறவில் ஈடுபட்டு விட்டு குழந்தை பொருத்தமற்ற நேரத்த்தில் பிறந்து விடுமோ என்று அஞ்சும் நேரத்திலே மட்டும் பயன் படுத்தப் பட வேண்டிய முறையாகும்.அதாவது தொடர்ச்சியாக ஒவ்வொரு உறவின் பின்னும் பாவிப்பதற்கு இந்த முறை உகந்ததல்ல. அவ்வாறு தொடர்ச்சியாக பாவிப்பதற்கு வேறு முறைகள் உள்ளன.

சரி எப்படி இந்த அவசர குடும்பக் கட்டுப் பாடினை மேற்கொள்ளுவது என்று பார்ப்போம்.

இதற்காக பாவிக்கப் படும் மாத்திரைகளும் , தொடர்ச்சியான குடும்பக் கட்டுப் பாடு மாத்திரை போல ஹார்மொங்கலைத்தான்(Hormon) கொண்டுள்ளது. ஆனால் உறவின் பின் பாவிக்கும் அவசர கட்டுப்பாட்டுக்கு இந்த மாத்திரைகள் சற்று அதிகமான அளவிலே உட்கொள்ளப் பட வேண்டும்.

இந்த மாத்ஹ்டிரைகள் கொண்டிருப்பது  புரஜெஸ்ரோன் (progestron) ஈஸ்ரேஜென் (Estrogen) எனப்படும் ஹோர்மொன்களை ஆகும்.

அவசர கட்டுப் பாட்டுகாகவென விசேடமாக தயாரிக்கப் பட்ட மாத்திரைகள் இருக்கின்ற போதிலும் , தொடர்ச்சியான கட்டுப் பாட்டுக்கு நீங்கள் பாவிக்கும் மாத்திரைகளையும் நீங்கள் உட்கொள்ள முடியும்.

இந்த மாத்திரைகள் உறவில் ஈடுபட்டு 72 மணி நேரத்தினுள் உட்கொள்ளப் பட வேண்டும். அதுவும் 12 மணித்தியால இடைவெளியில் இரு முறை உட்கொள்ளப் பட வேண்டும்.

அதாவது உறவில் ஈடுபட்டு எவ்வளவு விரைவாக இந்த மாத்திரைகளை பாவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக உட்கொள்ள வேண்டும்.  முதற் தடவை மாத்திரை எடுத்து 12 மணி நேரத்தில் இரண்டாவது மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

இதற்க்கான மாத்திரைகளை நீங்கள் வைத்தியரின் ஆலோசனை இல்லாமலேயே பார்மசிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்களிடம் தொடர்ச்சியாக பாவிக்கும் குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள் இருக்குமானால் அவற்றையும் நீங்கள் பாவிக்க முடியும். அந்த மாத்திரைகளில் நான்கினை ஒருவேளை உட்கொண்டு மீண்டும் 12மணி நேரத்தில் நான்கு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகளில் நான் மேலே சொன்ன இரண்டு ஹோர்மோன்களும் உள்ளன.

அது தவிர புரஜெஸ்ரோன் என்ற ஹோர்மோனை மட்டும் கொண்ட மாத்திரைகளும் பாவிக்கலாம். அதன் அளவானது ஒவ்வொரு மாத்திரை 12மணி நேர இடைவெளியில்.

குறிப்பாக பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட பெண்கள் யாரையாவது தெரிய வரும் பட்சத்தில் உடனடியாக இந்த மாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்....
Thursday, April 8, 2010

சிசுவின் இதயத்துடிப்பைக் கேட்க உதவும் கருவி

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்பதற்கு உதவுகின்ற கருவியே பீட்டஸ் கோப்(fetoscope) எனப்படுகிறது.இது வெறுமனே ஒரு ஒலியை சிறப்பாக கடத்தும் படியாக உருவமைக்கப்பட்ட குழாயாகும்.இதன் மூலம் வெறுமனே குழதையின் இதயம் துடிப்பதைக் கேட்கவும் அது எத்தனை முறை துடிக்கிறது என்பதை எண்ணுவதற்குமே உதவுகின்றது.
பீட்டஸ் கோப்(Fetescope)


 Fetescope மூலம் குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கப்படுகிறது


மற்றும் படி இது இதயத்தின் சப்த  வேறுபாடுகளையோ அல்லது இதய நோய்களையோ அறிவதற்கு உதவுவதில்லை.

மாறாக stethescope  எனப்படும்  உபகரணகங்கள் இதயத் துடிப்பின் சப்த்தங்கள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் என்பவரை  வைத்து பல்வேறுபட்ட இதா நோய்களை அறிந்து கொள்ள உதவும்.

stethescope
Wednesday, April 7, 2010

மாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள்(sexual deviation)

பாலியல்சந்தோசம் பெரும் முறைகளாக நீங்கள் அனைவரும் அறிந்திருக்கும் முறைகளாவன ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (heterosex), ஆணும் ஆணும் அல்லது  பெண்ணும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (homo sex)அல்லது சுய இன்பம்(masturbation) பெறுதல். இவற்றிற்கு அப்பாலும் மனிதர்களின் மனதிலே வித்தியாசமான பாலியல் சந்தோசம் முறைகள் ஏற்படலாம். இவற்றிலே சில பயங்கரமானவை சில சாதாரண மனிதர்களாலே நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை.இவை பற்றி அறிந்து கொள்வது இப்படி வித்தியாச மனநிலை கொண்டவர்களிடம் இருந்து தங்களைப் பாது காத்துக் கொள்ளவும் , இப்படிப் பட்டவர்களை இனங்கண்டு தகுந்த தீர்வை வழங்குவதற்கும் அவசியமாகும்.

ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுவதன் மூலம் பாலியல் திருப்தி அடைய நினைப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும் . அவ்வாறு அல்லாமல் வேறு முறைகள் மூலம் பாலியல் இன்பம் பெற நினைப்பது மாற்று வழிப் பாலியல் முறை (sexual deviation) எனப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில வேளை அது ஒரு மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். சில முறைகள் பாதிப்பு அற்றவை. உதாரணத்திற்கு சுய இன்பம் என்பது பாதிப்பு அற்ற ஒரு மாற்று வழி பாலியல் சந்தோஷ நாடும் முறையாகும்.

இனி இப்படி மாற்று வழி பாலியல் முறை தேடும் நபர்களின் மாறுபட்ட முறைகள் பற்றி பார்ப்போம்!

                                                                Homosex


ஆணும் ஆணும் உறவில் ஈடுபடல்

பெண்ணும் பெண்ணும் உறவில் ஈடுபடல்  Incest

உறவு முறையான பாலியல் தொடர்பு. அப்பா மகள் இடையே ,சகோதரங்கள் இடையே  , சித்தப்பா மாமா போன்றோர்களால் மருமகள் முறையாநோர்களோடு ஏற்படும் உறவுகள் எம் சமூகத்திலும் இருக்கின்றன.


சிறு குழந்தைகளோடு உறவு கொள்ளுதல்(pedophilia)


-சின்ன குழந்தைகலோடே உறவு வைக்க விருப்பம் கொண்ட கொடுமையான மனநிலை கொண்டவர்கள். .இப்படியானவர்கள் உங்களுக்குத் தெரிந்தால் உடனே மனநல வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்க.

நிர்வாண வெளிக்காட்டல் முறை(Exibitionism)

இவர்கள் திடீரென பெண்கள் முன் அல்லது சனக் கூட்டங்களிடையே தன் உடைகளை களைந்து நிர்வாணம் ஆக நிற்பதன் மூலம் தங்களை திருப்தி படுத்திக் கொள்வார்கள். நிறைய பெண்கள் இந்த சந்தர்ப்பத்தை சந்தித்து இருப்பார்கள். இது எம்மிடையேயும் மிக பொதுவாக இருக்கும் பிரச்சனை. இவ்வாறு செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே ! இவர்களுக்கு நிச்சயமாக ஒரு மனநிலை வைத்தியரின் ஆலோசனை தேவை.


பிணத்தோடு உறவு கொள்ளுதல(Necrophilia)


இது மிகவும் கொடுமையான ஒன்று பிணங்களோடு உறவு கொள்ளுதல். இது மிகவும் குறைவு என்றாலும் பிரேத அறையில் வேலை செய்பவர்கள் இவ்வாறு பாதிக்கப் பட சந்தர்ப்பம் உள்ளது. சில பேர் உயிரோடு ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு போய், அவளை கொலை செய்த பின் உறவை வைத்துக் கொள்வார்கள்.இவர்கள் நிச்சயமாக வைத்தியர்களிடம் அழைத்துப் போகப் பட வேண்டியவர்கள்.
                        திருட்டுத் தனமாய் ரசிக்கும் முறை (Voyeurism )

இதிலே மற்ற பாலரை மறைவாக நின்று நிர்வாணமாக ரசிப்பதே அவர்களின் இன்பம். இவ்வாறானவர்கள் எப்போதும் மறைவாக ரசிப்பதையே விரும்புவார்கள்,

மாற்று பாலாரின் பொருள் மூலம் சந்தோசம் அடைபவர்கள் (Transvestism)

இவர்கள் மற்ற பாலாரின் உடைகளை அணிவதிலேயே திருப்தி கொள்வார்கள். இவர்கள் ஆடைகளை திருடுவதில்லை , மற்ற பாலாரின் ஆடைகளை தனக்கென வங்கி அதை அணிந்து கொண்டு வெளியில் செல்பவர்கள்.

                               

Masochism

தன்னை தானே வருத்தி இன்பம் பெறுதல்

saddisam

மற்றவர்களை வருத்தி  இன்பம் பெறுதல்