Showing posts with label பாலியல். Show all posts
Showing posts with label பாலியல். Show all posts

Friday, November 26, 2010

செயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் முறை(வீடியோவுடன்)

ஒரு குழந்தை எப்படி உருவாகிறது என்று முன்னைய இந்த இடுகையில் பதிவிட்டிருந்தேன்.ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.

ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRA UTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.

இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )

இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.

கருப்பையினுள் விந்துகளை செலுத்த பயன்படும் குழாய்

இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.

கருப்பையினுள் செலுத்தப்படுவதை விளக்கும் படம்.


சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.

ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.

இது பற்றி ஒரு வீடியோ



Thursday, November 25, 2010

ஆணுறுப்பிலே துர் நாற்றம் வீசுதல் சம்பந்தமாக...

கேள்வி

Dear Sir,

How are you? I am ... and am 27 years of age..I am worrying very much on following problems,

I will come to the matter directly,

I am feeling that I have yeast (fungus) infection on my penis..

Symptoms are,
1. Bad smell
2. Kind of white solid liquid (not much) on Penis -  I have to clean it everyday
3. Itching (rarely)

Due to this I am put on hold on my marriage. So please advice me how to cure this and what kind of medicine I have to take.

Regards,//
(டாக்டர் எனக்கு ஆணுறுப்பிலே பங்கசு தொற்று இருப்பதாக உணர்கிறேன்.எனக்கு ஆணுறுப்பிலே வெள்ளை
நிரவத் திரவம் வெளியேறுவதுடன் அரிதாக கடித்தன்மையும் உள்ளது?


பதில்

நண்பரே உங்களுக்கு பங்கசுத் தொற்று இருப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீகள் ஆனால் பங்கசுக்களின்வீரியத்தன்மை சாதாரனமானவர்களில் அவ்வளவு எளிதாக நோயினை ஏற்படுத்தப் போதுமானதல்ல.அது வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் , மற்றும் வேறு நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களிலேயே நோயினை ஏற்படுத்தும் .மேலும் பங்கசுக்களால் துர் நாற்றம் ஏற்படுவதுமில்லை.

துர் நாற்றம் ஏற்படுவது பாக்டீரியாக்களின் தொற்றுக்களால் ஏற்படலாம்.

எல்லாவிதமான பக்டீரியாக்களும் பூரணமாகக் குணப்படுத்தப்படலாம்.

நீங்கள் உங்கள் ஆணுறுப்பிலே காயங்கள் அல்லது தழும்புகள் மற்றும் வலி உள்ளதா என்று கூறாதபடியால் என்னால் உறுதியாக எதுவும் கூற முடியாமல் உள்ளது.

ஆனாலும் நீங்கள் மனதளவிலே இது காரணமாக உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாகஒரு வைத்தியரை நாடுவது உகந்தது.
நீங்கள் நாட வேண்டியது ஒரு பொது சத்திர சிகிச்சை நிபுணரை.

அச்சப்படாமல் ஒரு வைத்தியரை நாடுங்கள்.
அப்படி உங்களுக்குத் தொற்று இருந்தாலும் சில வாரங்களிலே அவை பூரணமாகக் குணப்படுத்தப்பட்டு நீங்கள் திருமண பந்தந்தத்தில் இணைந்து கொள்ளலாம்.

கட்டாயமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் வைத்தியரிடம் செல்லுங்கள். உங்களுக்கு அப்படியான தொற்றுக்கள் இருப்பின் அவை உங்கள் துணைக்கும் தொற்றிக் கொள்ளலாம்.

Wednesday, November 24, 2010

ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்?

கேள்வி 

வணக்கம் டாக்டர். 
உங்கள் அறிய சேவைக்கு நன்றி.நான் திருமணம் முடித்து ஒரு வருட காலமாகிறது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும்.ஆனால் மனைவிக்கு அதில் இஷ்டமில்லை.
இதற்கு நான் என்ன செய்ய முடியும்.
(தமிழாக்கம்)

பதில்.

ஒரு நாளைக்கு எத்தனை தடவை உறவில் ஈடுபட வேண்டும் என்று நிர்ணயிக்கப்படவில்லை..ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமனவானவர்களில் நான்கு வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் 
உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது.அதேபோல் அமெரிக்காவில் அவரேஜாக திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள்
வருடத்திற்கு .150  முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது. 
இது பற்றி எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் லிங்க் ஏதாவது இருந்தால் தெரிந்த நண்பர்கள் தயவு செய்து சொல்லவும்.

நண்பரே உங்கள் கேள்விக்கு பதிலாக சொல்வது..

நாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது வைத்தியர் தீர்மானிப்பதல்ல. காரணம் உங்கள் மனைவியோடுஉறவு கொள்வதென்பது சாதாரண உடற் தொழிற்பாடு..இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை.
நீங்கள் எத்தனை ,முறை உறவு கொள்ள வேண்டும் என்பது உங்கள் மனைவியோடு சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது.

ஆண்களின் உடலைப்போல அல்ல பெண்களின் உடல்..மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபாடும்.இதனால் அவர்களின் உடல் நிலையம் உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே  இருக்கும்.

ஆண்களில் அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் இலகுவாகஉறவில் ஈடுபட்டு விட முடியும்.ஆனால் பெண்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை..(இருந்தாலும் விதிவிலக்கான பெண்களும் உள்ளார்கள்)

பெண்களின் இந்த உடல் நிலை/ மனநிலை மாற்றம் கடவுள்/ இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.

அதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை  வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.இது கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும்.

அதே போல் சில நாட்களில் அவர்களின் மனநிலை உறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும்.

இது பெண்ணுக்கு பெண் வேறுபடுவதால் ,கணவன் மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமானதாகும்.

இயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மன நிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு  உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும்.
..
அவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை  ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது சட்டப்படி கூட கற்பழிப்புக்குஒப்பானது..
ஏனென்றால் சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம்  இல்லாமல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு ஒப்பான குற்றமாகவே கருதப்படும்.

Monday, September 6, 2010

படுக்கையில் விந்து வெளியேறுதல்

கேள்வி 

நான் இன்னும் திருமணமாகாத 24 வயதானவன்.எனக்கு இரவில் படுக்கும்போது சிலநாட்களில் தானாக விந்து வெளியேறி விடுகிறது .இது எதனால் ஏற்படுகின்றது ?இதனால் எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

பதில்...

படுக்கையில் விந்து வெளியேறுவது என்பது சாதாரண ஒரு செயலாகும்.

ஒவ்வொரு வயதுக்கு வந்த ஆணிலும் விந்து உருவாகிக் கொண்டே இருக்கும். அதாவது பெண்களில் முட்டை உருவாகுவதைப்போல. பெண்களிலே உருவாகும் முட்டை மாதவிடாயாக வெளியே வருவதைப்போல, ஆண்களில் உருவாகும் விந்துவும் தானாக வெளியேறும்.

இது அனேகமாக படுக்கையின் போது அதுவும் அதிகாலைவேலையிலேயே அதிகமாக வெளியேறும். இதனால் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை .

இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த இடுகையை வாசிக்கவும்.

ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்

 உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

 

Friday, June 18, 2010

உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்

உடலுறவு என்ற உன்னதமான ஒரு நிகழ்வின் போது , சில பெண்களுக்கு வலி ஏற்படும் போது அவர்களின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் தோன்றுகிறது.

உடலுறவின் போது பெண்கள் தன் பெண் உறுப்பிலே வலியை உணர்வது மருத்துவ ரீதியாக dysparunia எனப்படுகிறது.

இந்த வழியானது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
ஒன்று superficial dysparunia அதாவது புணர்வின் ஆரம்பத்திலேயே ஏற்படுகிற வலி, அடுத்தது deep dysparunia புணர்வின் உச்சத்தில் ஏற்படுகின்ற வலி.


இந்த வலி ஏற்பட்டாலும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் தங்கள் வாழ்க்கையே நாசமாக்கி விட வேண்டிய நிலையில் இருக்கும் எம் பெண்களுக்கு சில அடிப்படை அறிவினை வழங்கவே இந்த பதிவு.

இந்த வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ?

நேர்த்தியற்ற பாலியல் உறவு. அதாவது உடலுறவில் ஈடுபடும் இருவரின் பிறப்பு உறுப்புக்களிலும் உடலுறவின் போது நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களில் அவர்களின் ஆணுறுப்பு விறைப்படையும் , பெண்களிலோ அவர்களின் பெண் குறி விறைப்படைவதோடு உறுப்பின் மற்றைய பகுதிகளிலும் சில திரவங்கள் சுரக்கப்பட்டு அவளின் பெண் உறுப்பை இலகுவானதாக்கும். இந்த மாற்றங்கள் ஒரு பெண்ணின் உறுப்பிலே ஏற்படாமல் இருக்கும் போது ஆண் புணர்விலே ஈடுபட்டால் இலகு தன்மையற்ற அந்த பெண் உறுப்பிலே வலி ஏற்படும். இதற்கு முழுப் பொறுப்புமே அந்த ஆணே! அதாவது தன் துணை உடலுறவுக்குத் தயாரா என்று அறியாமலேயே அவசரப்பட்டு புணர்வில் ஈடுபடுவது அந்த பெண்ணுக்கு வலியை ஏற்படுத்தும்.

இதற்காக புணர்வில் ஈடுபடும் போது ஆண்கள் தங்கள் மனைவி அதற்குத் தயாரா என்று அறிந்து கொண்டு புணர்வில் ஈடுபட வேண்டும், அப்படி தயாராகாத போது எடுத்த எடுப்பிலே புணர்வில் ஈடுபடாமல் சற்று பொறுத்து அவள் புணர்வுக்குத் தயாராகும் வரை வேறு விதமான நடவிக்கைகள் மூலம் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டி அவளை தயார் படுத்திய பின் புணர்வில் ஈடுபட வேண்டும். இவ்வாறு புணர்ச்சிக்கு முன்பு நடை பெறுகின்ற விடயங்களே foreplay எனப்படுகிறது.

இது தவிர வேறு சில காரணங்களும் புணர்வின் போது வலியை ஏற்படுத்தலாம் .
அவையாவன ,
1.பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற தொற்றுக்கள்.
2.மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற உலர்ந்த தன்மை.
3.உளவியல் சம்பந்தப் பட்ட பிரகுச்சனைகள் .
4.பெண் சிறு நீர் வாயில் ஏற்படும் தொற்றுக்கள்.
5.கருப்பைக்கு வெளியே ஏற்படும் மாதவிடாய்

எதோ ஒரு வகையில் பாலியல் ரீதியாக துஷ் பிரயோகம் செய்யப் பட்ட பெண்களுக்கு சில வேளைகளில் பாலியல் என்பது வாழ்க்கை முழுவது வலியானதாகவே அமைந்து விடலாம். அதாவது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறுப்பு தன் கணவனின் புணர்தலின் போது தானாகவே எதிர்ப்பைக் காட்டலாம் அதாவது , உடலுறவுக்கு உகந்த முறையில் இசைவாகாமல் சுருங்கிய படியே இருக்கலாம். இது vaginusmus எனப்படும்.

Wednesday, March 17, 2010

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா?

மாதவிடாய் என்பது பெண்களிலே  சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

உண்மையில் மாதவிடாயின் போது உடலுறவு  கொள்வது ஒரு தகாத செயலா?
 

இல்லை 
.
உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்படலாம். குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று நோ , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். இதுபற்றி மாதவிடாய்  காலத்து வலிகள் என்ற இடுகையில் பதிவிட்டிருந்தேன்.இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறையலாம்.அதாவது மாதவிடாய் நேரத்து அசௌகரியங்கள் உடலுறவில் ஈடுபடும் போது குறையலாம்.

மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நேரங்களை விட பெண்ணுக்கு அதிகம் திருப்தி ,கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.காரணம் மாதவிடாய் நேரத்தில் அவளது உறுப்புக்கள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் மகிழ்ச்சியைக் கூட்டலாம்.

மேலும் நம் சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.

மற்றும் இந்தக் காலத்தில் உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும் கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவே குழந்தை பிறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை பாவிக்கவேண்டும்.

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடுவதால் எந்த மாதிரியான தீங்குகள் ஏற்படலாம்?
மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.அதாவது ஆனிலோ அல்லது பெண்ணிலோ எயிட்ஸ்(Aids) ,சிபிலிஸ்(SYPILLIS) , ஈரழ் அலர்ச்சி B(hEPATITIS B) போன்ற நோய்கள் இருந்தால் இது மற்றவருக்குத் தொர்ருவதகான சந்தர்ப்பம் அதிகமாகலாம்.

மேலும் கொண்டம் பாவிப்பது இந்த நோய்களின் தொற்றைக் குறைப்பதால் இந்த நேரத்தில் தவறாமல் கொண்டம் பாவிப்பது உகந்தது.

அதானால் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு மட்டும் உறவு வைத்துக் கொண்டால் மாதவிடாய் காலத்திலும் உறவு வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு மற்றைய நாட்களை விட இதன்போது அதிக சந்தோசம் கிடைக்கலாம்.





Sunday, March 14, 2010

செயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் முறை(வீடியோவுடன்)

ஒரு குழந்தை எப்படி உருவாகிறது என்று முன்னைய இந்த இடுகையில் பதிவிட்டிருந்தேன்.ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.

ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRA UTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.

இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )

இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.


கருப்பையினுள் விந்துகளை செலுத்த பயன்படும் குழாய்

இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.


கருப்பையினுள் செலுத்தப்படுவதை விளக்கும் படம்.


சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.

ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.

இது பற்றி ஒரு வீடியோ

Tuesday, March 9, 2010

கர்ப்பமான பெண்ணில் ஏன் மாதவிடாய் ஏற்படுவதில்லை?

மாதவிடாய் என்பது மாதா மாதம் ஒரு பெண்ணின் யோனிவழியே ரத்தம் வெளிவருகின்ற ஒரு செயன்முறை என்றே அநேகம் பேர் தெரிந்து வைத்து இருப்பீர்கள்.

உண்மையில் மாதவிடாய் என்றால் என்ன ?

கருத்தரிப்பதற்கு ஒரு பெண்ணை தயார் செய்யும் ஒரு செயமுறையின் விளைவே மாதவிடாய். கருத்தரித்தல் என்பது ஆண்களின் விந்து எனப்படும் உயிரணுவும் , பெண்களின் முட்டை எனப்படும் உயிரணுவும் ஒன்று சேரும் செயன்முறையாகும்.

ஆண்களைப் பொறுத்தவரை எந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போதும் விந்துகள் வெளியேறும்.

பெண்களிலே முட்டை உருவாகுவது உடலுறவின் போதல்ல. அவர்கள் பூப்படைந்த காலத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை (அநேகமாக மாதம் ஒருமுறை ) இந்த முட்டைகள் உருவாகும்.

ஆண்களிலே விதைகள் விந்துகளை உருவாக்குவதைப்போல பெண்களிலே சூலகம் என்ற உறுப்பு இந்த முட்டைகளை உருவாக்கி வெளிவிடும். இந்த முட்டை வெளிவந்து மூன்று நாட்களுக்குள் ஒரு பெண் உடலுறவில் ஈடுபட்டு அவளின் யூனிவழியே விந்து உட்செலுத்தப்ப்படுமானால் அந்த முட்டை கருக்கடப்பட்டு குழந்தையாக விருத்தி அடையும்.
அவ்வாறு கருக்கட்டல் நடைபெற்றால் அந்தக் குழந்தையை தாங்கிக் கொளவதற்காக அவளின் கருப்பை சில ஆயத்தங்களை செய்யும். கருப்பையின் உடபகுதி நன்கு விருத்தியடைந்து ரத்த ஓட்டம் அதிகரித்து கருக்கட்டிய குழந்தை விருத்தியடையக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்படும்.

இது மாதாமாதம் முட்டை வெளியேறும் போதெல்லாம் நடைபெறும். ஆனால் அந்தப்பெண் உடலுறவில் ஈடுபட்டு கருக்கட்டல் நடைபெறா விட்டால் விருத்தியடைந்த இந்த கருப்பையின் பகுதி பிரிந்து யோனிவழியே வெளியேறும்.
அப்போது உருவாகிய முட்டையும் வெளியேறும்.
இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.

மாறாக கருக்கட்டல் நடைபெற்றால் அந்த கரு விருத்தியடைந்த கருப்பையின் உடப்குதியில் ஒட்டிக்கொண்டு குழந்தையாக வளரத்தொடங்கும், இதனால் கர்ப்பமான பெண்ணில் மாதவிடாய் ஏற்படுவது தடைப்படும்.

Wednesday, December 16, 2009

ஆணுறுப்பின் அளவிலா ஆண்மை உள்ளது ?

ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கும் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற்றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்கின்றான்.
தன்னுடைய ஆணுறுப்பு அவனுக்கு ஒரு முக்கிய விடயமாகிப் போகின்றது.

அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவு சம்பந்தமாக சந்தேகங்கள் எழத் தொடங்குகிறது. குறிப்பாக பெரியவர்களின் அல்லது தன் வயதினையுடைய இன்னொரு நண்பனின் ஆணுறுப்பைப் பார்க்க நேரும் போது அவன் தன்னுடைய உறுப்பின் அளவை மற்றவர்களின் அளவோடு ஒப்பிட முனைகின்றான்.

அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவே ஒருவரின் ஆண்மைத்தன்மையினை தீர்மானிக்கிறது என்ற பிழையான எண்ணம் உருவாகத் தொடங்குகிறது. தன் ஆணுறுப்பின் அளவு சிறியது என்ற தாழ்வு மனப் பான்மை கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவன் பாலியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.

உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை.


விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக 15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும்.
விரைப்படையாத நிலையில் சிறிதாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்படையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்தட்ட அடையும்.

அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது , சற்று பெரிய ஆணுறுப்பு பருமனிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே பருமனில் அதிகரிக்கும்.

ஆகவே தங்கள் ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்று யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பெண்களின் பிறப்புறுப்பின் அளவினை (ஆழம்) எடுத்தோமானால் 8CM நீளம் உடையதாகவே இருக்கும்.

ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தாலும் , உடலுறவின் போது பெண்ணுறுப்பின் விரிந்து கொடுக்கும் தனமையினால் அவர்களால் உறவில் ஈடு பட முடிகிறது.

அதாவது பெண்ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இருக்கும் , ஆணுறுப்பு சிறிதென்றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதேவேளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறு பெண்ணுறுப்பு சற்று தளர்ந்து கொடுத்து உறவில் ஈடுபட உதவும்.இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கிடைக்கிறது.

ஆக ஆணுறுப்பு பெரிதோ சிறிதோ என்பதை வைத்தல்ல உறவில் ஈடு படும் போது இன்பம் கிடைக்கிறது.












ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்

ஆண்கள் பிழையாக புரிந்து கொண்டு அச்சப்படும் விடயங்களில் ஒன்று அதிகாலை நேரத்தில் அவர்களின் ஆணுறுப்பில் இயல்பாக ஏற்படுகின்ற விறைப்புத் தன்மை ஆகும்.

அதாவது அதிகாலை வேலை அவர்கள் விழித்துக் கொள்ளும் போது எந்த வித பாலியல் உணர்ச்சியும் இல்லாமல் தாமாகவே விறைத்திருக்கும் ஆணுறுப்பைப் பார்த்து தங்களுக்கு ஏதோ நோய் இருப்பதாய் கற்பனை செய்து , வெளியில் சொல்லவும் வெடகப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் .

உண்மையில் இது வெட்கப் பட வேண்டியதோ அல்லது அச்சப்பட வேண்டிய விடயம் அல்ல. சாதாரணமாக இது எல்லா ஆண்களிலும் காணப்படும் உடற் தொழிற்பாட்டு மாற்றமாகும்.

அதிகாலை நேரத்தில் ஆணுறுப்புக்கு அதிகம் ரத்தம் போவதாலே இது ஏற்படுகின்றது.

இந்த விறைப்புத் தன்மையுட சில வேளைகளில் விந்து நீர் வெளியேற்றமும் இயல்பாக ஏற்படலாம்.

இந்த அதிகாலை விறைப்பு மருத்துவ ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதாவது தங்களால் உடலுறவின் போது சரியான விறைப்பினை அடையமுடியவில்லை எனும் ஆண்களிலே உண்மையான காரணத்தை கண்டு பிடிப்பதற்கு இது உதவுகின்றது.

அதாவது ,நான் ஏற்கனவே ஒரு இடுகையில் கூறிய படி ... எனப்படும் சரியான விறைப்பினை அடையா முடியாதத்திற்கு முக்கிய காரணம் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

இவ்வாறு தங்களால் சரியான விரைப்புத்தன்மையை அடைய முடியவில்லை எனும் ஆண்களின் ஆணுறுப்புக்கள் மற்ற ஆண்களைப் போல அதிகாலையில் தானாக விறைககுமானால் , அதன் அர்த்தம் அவர்களின் உடலிலோ அல்லது ஆணுருப்பிலோ எந்த விதமான பிரச்சினையும் இல்லை , உளவியல் பிரச்சினைகளாலே உடலுறவின் போது அவர்களின் ஆணுறுப்புக்கள் விறைக்க மறுக்கின்றன என்பதாகும்.

அதைவிடுத்து உடலுறவின் போது ஆணுறுப்பு விரிக்கவில்லை எனும் ஆனில் இந்த அதிகாலை விறைப்பும் ஏற்பட வில்லை என்றால உளவியல் பிரச்சினைக்கு அப்பால் அவரின் உடலிலே வேறு பிரச்சினை இருக்கலாம் .

ஆகவே ஆண்களே உங்களுக்கு அதிகாலை விறைப்பு மற்றும் விந்து நீர் வெளியேற்றம் ஏற்பட்டாலோ அச்சப்பட வேண்டாம் , சந்தோசப்படுங்கள் நீங்கள் ஆண்மைத்தன்மையானவர் என்று.


உடலுறவின் போது ஆணுறுப்பு சரியான முறையில் விறைக்க மறுக்கிறது எனும் ஆண்களே , சற்று அவதானித்துப் பாருங்கள், உங்களின் ஆணுருப்புக்களிலே அதிகாலை நேரத்தில் விறைப்பு ஏற்படுமானால் உங்களின் உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை , உளவியல் ரீதியான உங்கள் அச்சமே உடலுறவின் போது ஆணுறுப்பு விறைக்க மறுப்பதற்கான காரணமாகும்.






Tuesday, December 15, 2009

மாதவிடாய் காலத்து வலிகள்

மாதவிடாய் காலத்தில் வயிற்றில் நோ ஏற்படுவது பெண்களில் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இது ஆங்கிலத்திலே DYSMENORRHEA எனப்படும். இந்த வலியானது சில பெண்களுக்கு அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடியாதளவுக்கு பெரிய பிரச்சனையாக கூட இருக்கலாம்.

அமெரிக்காவிலே நடத்தப்பட்ட ஒரு ஆய்விலே பாடசாலைப் பெண்களில் 95 வீதமானோர் இந்த வலியினை அனுபவிப்பவர்களாக அறியப்பட்டது.



இந்த மாதவிடாய் கால வலியானது இரண்டாக பிரிக்கப்படலாம் .

பூப்படைந்த காலத்தில் இருந்தே ஏற்படுகிற வலி.

நான் மேலே சொன்ன விடயங்கள் இந்த வகையான வலியைப் பற்றியாகும். அதாவது பூப்படைந்த காலத்தில் இருந்தே உங்களுக்கு வலி ஏற்படுமானால் , இந்த வலியினால் எந்த விதமான விளைவுகளும் ஏற்படாது. நீங்கள் அதைப்பற்றி அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

இருந்தாலும் இந்த வலியானது மாதவிடாய் ஆரம்பித்து முதல் 2 தொடக்கம் 3 நாட்களுக்கே இருக்கும். அதற்கு அதிகமாகவும் வலி இருந்தால் வைத்திய ஆலோசனையைப் பெறுவது உகந்தது.


வலி இல்லாமல் இருந்து பிற்காலத்தில் ஏற்படுகிற வலி.

அதாவது ஆரம்பத்தில் வலியில்லாத மாதவிடாய்களைத் தொடர்ந்து இடையில் வலி ஆரம்பிக்குமானால் இந்த வலியானது வேறு சில நோய்களால் ஏற்பட்டதாக இருக்கலாம். வைத்திய ஆலோசனை பெறுவது உகந்தது.

*************************************************************************************

மாதவிடாய் காலத்து வலி கடுமையாக இருப்பவர்கள் சிறிய ரக வலிநிவாரணிகளை வாங்கி பாவிக்கலாம்.
உதாரணத்திற்கு பரசிட்டமோல் (PARACETAMOL) இரண்டு மாத்திரைகள் 8 மணிநேரத்திற்கு ஒருதடவை

அல்லது மேபினாமிக் அசிட்(MEFENAMIC ACID) எனப்படும் மாத்திரை இரண்டு 8 மணி நேரத்திற்கு ஒரு தடவை.


இந்த இடுகை பயனுள்ள இடுகை என்று நீங்கள் நினைத்தால் மறக்காமல் வாக்களித்து மேலே சென்று வாக்களித்து மற்றவர்களுக்கும் போய்ச் சேரச் செய்யுங்கள் அப்படி இல்லாவிட்டால் பிழைச் சுட்டிக் காட்டுங்ககள் பயனுள்ள இடுகைகளை எழுதுவதற்கு வழிகாட்டியாக அது அமையும் .






Saturday, December 12, 2009

உடலுறவுக்கு பாதுகாப்பான காலம்

எந்த விதமான பாதுகாப்பு( கர்ப்பத்தடை) முறைகளும் பாவிக்காமல் உடலுறவு கொண்டாலும் குழந்தை உருவாக்குவதற்குரிய சந்தர்ப்பம் குறைந்த காலம் SAFE PERIOD எனப்படும். இந்தக் காலம் என்ற சொல் குறிப்பது பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரத்தில் இருக்கின்ற காலமாகும்.

ஒரு பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரமானது , எத்தனை நாட்களுக்கொருமுறை அவளின் மாதவிடாய் அடைகிறாள் என்பதாகும்.

அதாவது ஒரு தடவை மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் அடுத்தமுறை மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் இடையே உள்ள மொத்த நாடகளுமே அவளின் மாதவிடாய்க் காலமாகும்.

இன்னும் இலகுவாகச் சொல்வதானால் ஒரு பெண்ணின் இரண்டு மாதவிட்டய்களை எடுத்துக் கொண்டோமானால் அந்த இரண்டு மாதவிடாய்களும் தொடங்கிய முதல் நாட்களுக்கிடையே இருக்கும் காலம் அவளின் மாதவிடாய்க் காலமாகும். ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குரிய இந்தக் காலப் பகுதியை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்தக் காலப்பகுதி பெண்களுக்கு பெண்கள் வேறுபடலாம். பொதுவாக இந்தக் காலப்பகுதி 21 - 31நாட்களுக்கிடையே இருக்கும்.

இந்தக் காலப்பகுதியின் குறிப்பிட்ட நாட்களே ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு தயாரான நிலையில் இருப்பாள் , இதைத் தவிர்த்து மற்றைய நாட்களில் உடலுறவில் ஈடுபட்டாலும் அவளால் கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.

இந்தக் கர்ப்பம் தரிக்கக் குறைவான காலமே safe period எனப்படுகிறது. இதை எப்படிக் கணிக்கிறது என்று பார்ப்போம்.

இதற்கு முதலில் அந்தப் பெண் தனக்கு ஏற்படுகின்ற மாதவிடாய்களின் தினங்களை சில மாதங்களுக்கு குறித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒவ்வொரு மாதவிடாய்க்களுக்கும் இடைப்பட்ட நாட்களை கணித்துக் கொள்ள வேண்டும். எல்லா மாதவிடாய்களுக்கும் இடையேயான காலம் நிச்சயமாக ஒரே அளவாக இருக்காது.

இந்த காலப்பகுதிகளின் ஆகவும் குறைந்த நாட்களைக் கொண்ட காலப் பகுதிகளில் உள்ள நாட்களில் இருந்து 18 நாட்களைக் கழித்து வைத்துக் கொள்ளுங்கள் .
உதாரணத்திற்கு அவளின் இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட குறைந்த இடைவெளி 26 நாட்கள் எனில் இந்த 26 யில் இருந்து 18 யை கழித்துக் கொள்ள வருவது 8.

அடுத்து அவளின் மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட அதி கூடிய காலத்தில் இருந்து 10 நாட்களைக் கழித்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு அவளின் மாதவிடாய்களுக்கிடையே உள்ள அதி கூடிய காலம் 31 நாட்கள் என்றால் அதிலிருந்து 10 நாட்களைக் கழித்துக்கொள்ள வருவது 21.


இனி வரப்போகின்ற மாதவிடாய் தொடங்கும் நாளை முதல் நாளாகக் கொண்டால் அவளுக்கு அந்த முதல் நாளில் இருந்து 8 வது நாளுக்கும் 21வது நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் அதிகம் கொண்ட நாடகளாகும். இது தவிர்ந்த மற்ற நாட்களில் எந்தப் பாதுகாப்பும் இன்றி உடலுறவு கொண்டாலும் கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.

இந்த 8 தொடக்கம் 21 நாட்களுக்கிடைப்பட்ட காலம் fertile period எனப்படும்.
அதாவது கர்ப்பம் தரித்தளுக்கு தயாரான காலம். மீதமிருக்கும் காலம் safe period எனப்படும்.


குழந்தை உருவாக தாமதமாகும் தம்பதியினர் இந்தக் காலப்பகுதியில் அதிகம் உறவில் ஈடு படும் போது அவர்களுக்கு குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகமாகும்.

குழந்தை வேண்டாம் அல்லது பிற்போட வேண்டும் என்று நினைக்கும் தம்பதியினர் இந்தக் காலப் பகுதியை தவிர்த்து மற்றைய காலப் பகுதிகளில் உறவில் ஈடுஇவ்வாறு உங்களுக்குரிய கர்ப்பம் கர்ப்பம் தரிக்கும் காலம் மற்றும் பாதுகாப்பான காலத்தை உங்கள் மாதவிடாய்க் காலப்பாதியை சரியான முறையில் குறித்து மேலே சொன்ன முறையில் கணித்துக் கொள்ளுங்கள் .
படலாம்.

பி .கு- இது மாதாமாதம் சரியாக மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இப்படியான இடுகைகள் தொடர்வது நல்லது என்று நினைத்தால் மேலே சென்று வாக்களித்துச் செல்லுங்கள்.



Thursday, December 10, 2009

பூப்படைதல் ஒரு நாள் நிகழ்வா ?

வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக் கறையை வைத்துக் கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார்களா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தன் பிள்ளை பூப்படைந்து விட்டதா என்று 12 அல்லது 13 வயதில்தான் சிந்திக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. முதன் முதலாய் மாதவிடாய் ஏற்படுவதல்ல பூப்படைதல். முதன் முதலாக மாதவிடாய் ஏற்படுவது மெனார்க்கே(menarche) எனப்படுகிறது, இது பூபடைதலின் ஒரு அங்கமே. இந்த menarche எனப்படுவது நாம் அறிந்தது போல11-12 வயதளவில்தான் ஆரம்பிக்கிறது.
ஆனாலும் பூப்படைதல் என்ற செயற்பாடு பெண்களிலே 8 வயதிலேயே தொடங்கி விடுகிறது.

நாம் நம் குழந்தைகள் இன்னும் பூப்டையவில்லை என்று வைத்தியரிடம் அழைத்துச் செல்வது பெரும்பாலும் 15 வயதுக்குப் பிறகுதான். பாருங்கள் 8வயதில் நிகழவேண்டிய ஒரு நிகழ்வு நிகழவில்லை என்று நாம் அறிந்து கொள்வது 15 வயதில்.

இன்னும் நாம் பின்னுக்கு நிற்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆக பூப்படைதல் என்பது ஒருநாளில் நடந்து முடியும் நிகழ்வல்ல. இது பெண்களிலே 8 வயதில் தொடங்கி 14 வயதில் முடிவடையும் ஒரு நீண்ட கால தொடர் நிகழ்வாகும்.

பூப்படைதல் நிகழ்வில் என்ன நடைபெறுகிறது?

பூபடைதலின் போது ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து இளமுதிர் பருவத்திற்குச் செல்கிறாள். அப்போது அவள் உடல் மற்றும் உளம் என்பவை பக்குவப்பட்ட முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாற்றப் படுகிறது.

இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்வது ஹார்மோன்களால்.

பூப்படைதல் என்ற செயற்பாடு முதலில் ஆரம்பிப்பது மார்பக வளர்ச்சியோடு.
இது ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட எட்டு வயதில் ஆரம்பிக்கும். அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணில் உடல் வளர்ச்சி சடுதியாக ஏற்படத் தொடங்கும் தொடங்கும். அதைப்போல உடற் பருமனும் சற்று முதியவருக்கு உரிய வகையில் மாறும். குறிப்பாக இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கும்.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முதியவர்களில் காணப்படுவது போன்ற மயிர் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக பெண் உறுப்புக்கு மேல் , மற்றும் அக்குள் பகுதிகளிலே. ஆரம்பத்தில் இந்த மயிர்கள் செறிவு குறைந்ததாக மெல்லியதாக இருந்தாலும் போகப் போக முதிர் நிலையை அடையும்.

இவ்வாறு 8 வயதில் ஆரம்பிக்கும் பூப்படைதலின் முக்கிய நிகழ்வான முதல் மாதவிடாய் பூப்படைதல் ஆரம்பித்து கிடத்தட்ட 2 வருடங்களின் பின்பே நிகழும். இந்த ஒரு தனி நிகழ்வைத்தான் நாம் பூப்படைதல் என்று கொண்டாடுகிறோம்.

மாதவிடாய் ஏற்படுவதோடு பூப்படைதல் நின்று விடுவதில்லை. நான் மேலே சொன்ன நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று பூப்படைதல் நிறைவு பெறுவது 14 வயதில்.

அனேகமாக ஆரப்பத்தில் மாதவிடாய் ஒழுங்கு அற்றதாகவே இருக்கும் . இது ஒழுங்க்காவதற்கு சில காலங்கள் செல்லாலாம். இது பற்றி பூரண அறிவு அந்தப் பிள்ளைக்கு தெளிவு படுத்தப் படவேண்டிய ஒன்று. இது பெற்றோரின் கடமையாகும்.
இது தவிர முதன் முதலாக அந்தப் பிள்ளை செக்ஸ் பற்றி சிந்திக்கத்தொடங்கும். சுய இன்பம் போன்ற செயற்பாடுகளும் ஆரம்பிக்கலாம்.

மேலே சொன்னது எல்லாம் வெறும் உடலியல் மாற்றங்களே . உளவியல் மாற்றங்களை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.

அடுத்த பதிவு- ஆண்கள் பூப்படைவது எப்படி.


உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னியா?

ஒரு பெண் முதன் முதலில் இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விடயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் பயன்படுத்துகிறது.


நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனித்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறு நீர் துவாரம்( urethral opening). மற்றது மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் துவாரம்vaginal opening).
இரண்டாவதாக உள்ள மாதவிடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் கைமண் (hymen)எனப்படும் ஒரு மென்சவ்வினால் சூழப் பட்டிருக்கும். அந்த மென்சவ்வின் நடுவிலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும்.





முதன் முதலில் உடலுறவில் ஈடு படும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தப் போக்கு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை.

சில பெண்களுக்கு இந்த கைமண் இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம்

சில பெண்களுக்கு இந்த கைமண் உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் உடைந்து போகலாம்.அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங் ,போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த கைமண் பாதிக்கப் படலாம்.

சுய இன்ப செயற்பாட்டில் ஈடு படும் பெண்களிலும் இந்த கைமண் உடைந்து விடலாம்.

சில பெண்களிலே இந்த கைமண் இளாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் கைமண் அப்படியே பாதிக்கப் படாமல் இருக்கலாம்.

ஆகவே கைமண் மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபித்து விட முடியாது.







Friday, December 4, 2009

உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்

உடலுறவு என்ற உன்னதமான ஒரு நிகழ்வின் போது , சில பெண்களுக்கு வலி ஏற்படும் போது அவர்களின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் தோன்றுகிறது.

உடலுறவின் போது பெண்கள் தன் பெண் உறுப்பிலே வலியை உணர்வது மருத்துவ ரீதியாக dysparunia எனப்படுகிறது.

இந்த வழியானது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
ஒன்று superficial dysparunia அதாவது புணர்வின் ஆரம்பத்திலேயே ஏற்படுகிற வலி, அடுத்தது deep dysparunia புணர்வின் உச்சத்தில் ஏற்படுகின்ற வலி.


இந்த வலி ஏற்பட்டாலும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் தங்கள் வாழ்க்கையே நாசமாக்கி விட வேண்டிய நிலையில் இருக்கும் எம் பெண்களுக்கு சில அடிப்படை அறிவினை வழங்கவே இந்த பதிவு.

இந்த வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ?

நேர்த்தியற்ற பாலியல் உறவு. அதாவது உடலுறவில் ஈடுபடும் இருவரின் பிறப்பு உறுப்புக்களிலும் உடலுறவின் போது நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களில் அவர்களின் ஆணுறுப்பு விறைப்படையும் , பெண்களிலோ அவர்களின் பெண் குறி விறைப்படைவதோடு உறுப்பின் மற்றைய பகுதிகளிலும் சில திரவங்கள் சுரக்கப்பட்டு அவளின் பெண் உறுப்பை இலகுவானதாக்கும். இந்த மாற்றங்கள் ஒரு பெண்ணின் உறுப்பிலே ஏற்படாமல் இருக்கும் போது ஆண் புணர்விலே ஈடுபட்டால் இலகு தன்மையற்ற அந்த பெண் உறுப்பிலே வலி ஏற்படும். இதற்கு முழுப் பொறுப்புமே அந்த ஆணே! அதாவது தன் துணை உடலுறவுக்குத் தயாரா என்று அறியாமலேயே அவசரப்பட்டு புணர்வில் ஈடுபடுவது அந்த பெண்ணுக்கு வலியை ஏற்படுத்தும்.

இதற்காக புணர்வில் ஈடுபடும் போது ஆண்கள் தங்கள் மனைவி அதற்குத் தயாரா என்று அறிந்து கொண்டு புணர்வில் ஈடுபட வேண்டும், அப்படி தயாராகாத போது எடுத்த எடுப்பிலே புணர்வில் ஈடுபடாமல் சற்று பொறுத்து அவள் புணர்வுக்குத் தயாராகும் வரை வேறு விதமான நடவிக்கைகள் மூலம் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டி அவளை தயார் படுத்திய பின் புணர்வில் ஈடுபட வேண்டும். இவ்வாறு புணர்ச்சிக்கு முன்பு நடை பெறுகின்ற விடயங்களே foreplay
எனப்படுகிறது.

இது தவிர வேறு சில காரணங்களும் புணர்வின் போது வலியை ஏற்படுத்தலாம் .
அவையாவன ,
பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற தொற்றுக்கள்.
மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற உலர்ந்த தன்மை.
உளவியல் சம்பந்தப் பட்ட பிரகுச்சனைகள் .
பெண் சிறு நீர் வாயில் ஏற்படும் தொற்றுக்கள்.


எதோ ஒரு வகையில் பாலியல் ரீதியாக துஷ் பிரயோகம் செய்யப் பட்ட பெண்களுக்கு சில வேளைகளில் பாலியல் என்பது வாழ்க்கை முழுவது வலியானதாகவே அமைந்து விடலாம். அதாவது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறுப்பு தன் கணவனின் புணர்தலின் போது தானாகவே எதிர்ப்பைக் காட்டலாம் அதாவது , உடலுறவுக்கு உகந்த முறையில் இசைவாகாமல் சுருங்கிய படியே இருக்கலாம். இது vaginusmus எனப்படும்.





Tuesday, November 10, 2009

மார்பு முளைத்த ஆண்கள்

Breasts (முலைகள் ) பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இருக்கின்ற ஒரு உறுப்பாகும். ஆனால் இது பூப்படைதலைத் தொடர்ந்து பெண்களில் விருத்தியடையத் தொடங்க ஆண்களில் விருத்தியடையாமல் அப்படியே இருந்துவிடுகிறது.

ஆண்களிலும் சில வேளைகளில் இவை விருத்தியடைந்து பிரச்சினைகளைக் கொடுக்கலாம். குறிப்பாக வலியினைக் கொடுக்கலாம்.

ஆண்களில் மார்பகம் விருத்தியடைதல் gynacomastia எனப்படும்.




பொதுவாக பெண்களில் காணப்படும் சில ஹார்மோன்களே இந்த மார்பக விருத்திக்கு காரணமாகும், இந்த ஹார்மோன்கள் சில ஆண்களிலும் சாதரண அளவை விட அதிகமாக சுரக்கும் போது அவர்களின் மார்பகமும் விருத்தியடையலாம். குறிப்பாக ஆண்கள் பூப்படையும் காலத்தில், வயது முதிர்ந்த காலத்தில்.

இவ்வாறன நிலைகளில் இந்த நிலைக்கு எந்த சிகிச்சையும் அவசியமில்லை.




இது தவிர சில வேறு காரணங்களுக்காகவும் இந்த மார்பக விருத்தி ஏற்படலாம்.

அவையாவன,

சிறுநீரக நோய்கள்
ஈரல் பாதிப்பு
சில வகையான புற்று நோய்கள்
தைரோய்ட் நோய்

இப்படி பல மோசமான நோய்களில் இந்த மார்பக விருத்தி ஏற்பட்டாலும் , மார்பக விருத்தியை விட வேறு அறிகுறிகளும் அந்த ஆண்களில் காணப்படும். அதாவது உங்களுக்கு மார்பகம் வளர்ந்திருக்கிறது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இந்த நோய்கள் உள்ளதோ என்று அச்சப் படத்தேவையில்லை.

மேலும் சில வகையான மாத்திரைகளை தொடர்ந்து பாதிப்பதாலும் இவை ஏற்படலாம். இவர்கள் இந்த மாத்திரைகளை பாவிப்பதை நிறுத்தும் பட்சத்தில் சாதரண நிலையை அடைந்து விடலாம்.

சந்தேகங்களைக் கேளுங்கள் !