Wednesday, November 11, 2009

மருத்துவர் எப்படி உங்கள் நோயை இனங்காண்கிறார் ?உண்மைத் தகவல்

ஒரு வைத்தியரிடம் நீங்கள் செல்லும் போது அவர் முதலில் உங்களோடு உரையாடுவார் , பின்பு உங்களை சோதித்துப் பார்ப்பார்,பின்பு சில மருத்துவச் சோதனைகள் செய்யும் படி கேட்பார், பின்பு உங்களுக்குரிய மருந்துகளை கொடுப்பார்.

என்ன அடிப்படியில் மருத்துவர் உங்கள் நோயை இனங்காண்கிறார் என்பதைப்பற்றி ஒரு அடிப்படை அறிவைத் தருவதற்காகவே இந்தப் பதிவு.

முதலில் உங்களோடு உரையாடும் போது வித்தியர் உங்கள் நோயின் அறிகுறிகளை மனதிலே குறித்துக் கொள்வார். அந்த அறிகுறிகளின் அடிப்படையில் உங்களுக்கு இருக்கக் கூடிய சாத்தியமான நோய்களை மனதிலே பட்டியல் இட்டுக் கொள்வார்.

இந்தப் பட்டியலில் உள்ள நோய்களில் உள்ள நோய்களின் போது உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களைச் சோதிக்கும் போது அப்படி ஏதாவது அவர் பட்டியல் இட்ட நோய்களுக்குரிய அடையாளங்கள் உள்ளத என்று அவதானிப்பார். இப்போது உங்களுக்குத் சாத்தியமான நோய்களின் பட்டியல் சிறிதாகிவிடும். அதாவது நீங்கள் சொன்ன அறிகுறிகளை வைத்து அவர் மனதிலே உருவாகியஅந்த பட்டியல் உங்களை சோதித்த பின்பு இன்னும் சிறிதாகி இப்போது உங்களுக்கு சாத்தியமான ஒரு சில நோய்களில் உங்களுக்கு உண்மையில் என்ன நோய் இருக்கினறது என்று உறுதிப் படுத்திக் கொள்ள அவருக்கு குறிப்பிட்ட மருத்துவச் சோதனைகள் தேவைப் படலாம்.

உதாரணமாக ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனை , எக்ஸ்ரே பரிசோதனை போன்றவை.சில நோய்கள் வெறுமனே உங்கள் அறிகுறிகள் மற்றும் வைத்திய உங்களைச் சோதிக்கும் போது காணும் அடையாளங்களை வைத்தே அறியப் பட்டு விடலாம்.அந்த நேரத்தில் எந்த விதமான மருத்துவப் பரிசோதனைகளும் இல்லாமலேயே உங்களுக்கு மருந்து வழங்கப் படலாம்.

இறுதியாக உங்கள் நோய் நிச்சயமாக உறுதிப் படுத்தப் பட்ட பின்பு, உங்கள் வயது, பால் , பொருளாதார நிலைக்கு ஏற்ப உங்களுக்குரிய மருந்துகளை வழங்குவார்.

அதாவது ஒரே நோய்க்கு பல விதமான மருந்துகள் இருக்கின்றன , சில சிருவர்கலிலே பாவிக்க முடியாது, சில கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க முடியாது , சில மருந்துகள் விலை உயர்ந்தவை எல்லோருக்கும் கொடுக்க முடியாது, சில பாலூட்டம் கொடுக்கும் அன்னையருக்கு கொடுக்க முடியாது, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே வைத்தியர் ஒருவருக்குரிய மாத்திரைகளை நிர்ணயிப்பார்.

1 comment:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமையான இடுக்கை! தொடரட்டும் உங்கள் பணி!!!