Tuesday, December 8, 2009

வெட்டப்படும் பிறப்புறுப்பு(வீடியோ) - ஒரு மருத்துவத் தகவல்

குழந்தை பிறக்கும் போது பிறப்பு வழி சரியாக விரிந்து கொடுக்காத போது குழந்தைப் பிறப்பை இலகுவாக்குவதற்காக தாயின் பிறப்பு உறுப்பின் ஓரம் வெட்டப்படும்.
இது எபிசியோட்டமி(Episiotomy) எனப்படும்.

இந்த செயமுறையானது அநேகமாக முதல் பிரசவத்தின் போது தேவைப்படும்.

உண்மையில் வெட்டப்படும் பகுதிக்கு விறைப்பு ஊசி போடப்பட்டே வெட்டப்பட வேண்டும் என்றாலும் எமது நாடுகளிலே எந்த விதமான ஊசிகளும் போடபபடாமலேயே வெட்டப்படுகின்றன. அவ்வாறு விறைப்பு ஊசி போடாமல் வெட்டினாலும் பிரசவ வேதனையில் இருக்கும் அந்த தாய்க்கு வெட்டப்படும் வேதனை மிகவும் குறைவாகவே உணரப்படும். ( அதாவது வெட்டப்படும் வலியை விட பிரசவ வேதனை அதிகம் என்பதால் மூளை பிரசவ வேதனையையே அதிகமாக உணரும்)

குழந்தையின் தலை பிறப்பு வழியினூடாக தெரியத் தொடங்கும் போதே பிறப்புறுப்பு வெட்டப்படும்.( பிரசவத்தின் இறுதிப் பகுதி)

குழந்தை பிறந்த பின் வெட்டிய பகுதி தைக்கப்படும்.

இதன் பின் விளைவுகளாக வெட்டிய இடத்தில் இரத்தப் போக்கு , கிருமித் தொற்று போன்றவை ஏற்படலாம் .

நேர்த்தியாக வெட்டப் பட்டு , தைக்கப் பட்ட பெண்களிலே இதனால் தழும்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

இனி இந்த வீடியோவைப் பாருங்கள் இன்னும் கொஞ்சம் விளங்கும்( படத்தை கிளிக்குங்கள்)...







இந்த இடுகை மற்றவர்களையும் போய்ச் சேர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தமிழ் மணத்தில் வாக்களித்துச் செல்லுங்கள்...

6 comments:

Anonymous said...

good article

நிகழ்காலத்தில்... said...

முதன் முதலாக தாய்மை அடையும் மகளிருக்கான தகவல்..

வாழ்த்துகள்

cheena (சீனா) said...

சிவசு கூறியது போல இத்தகவல்கள் தாய்மை அடையும் மகளிர்க்குப் பயன்படும்.

நல்வாழ்த்துகல் திமிழ்

Anonymous said...

All of you are wishing the article?? I'm getting scared like nothing while reading this...

pirassath said...

துமிழ் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளவை. வாழ்த்துக்கள்.... தைரோயிட் பற்றி உங்களுக்கு ஏதும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்

ரோஸ்விக் said...

சிலருக்கு இதனால் பயன் வரும். சிலருக்கு பயம் வரும்.

கட்டுரையை குறைவாக மதிப்பிடவில்லை. :-) மக்களின் மன தைரியம் இன்னும் பலப்படவேண்டும்.