Friday, December 18, 2009

நீங்கள் கர்பமாகி இருப்பதை நீங்களே உறுதிப் படுத்திக் கொள்வது எப்படி ?

(மீள் பதிவு )
மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.
இந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது.

உண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும்.

பொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும் ஹார்மோன் இருப்பதை வைத்தே கர்ப்பம் ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது. இந்த ஹார்மோனைக் கண்டு பிடிப்பதற்காக இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய குச்சிகள் (STRIPS) இப்போது எல்லா பார்மசிகளிலேயும் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தியே பெரும்பாலும் வைத்தியர்களும் உங்கள் கர்ப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகிறார்கள்.

இதை நீங்களும் இலகுவாகக் வீட்டில் இருந்தே செய்யலாம். முதலில் பார்மசியில் இருந்து அந்தக் குச்சி (STRIP) ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வாங்குவதற்கு எந்த வைத்தியரின் பரிந்துரையும் தேவை இல்லை. வெறுமனே கர்ப்பம் சோதிக்கும் குச்சி(PREGNACY TESTING STRIPS) அல்லது URINE hcG STRIP என்று கேட்டாலே பார்மசி வேலை ஆட்களுக்குத் தெரியும். அதன் விலையும் வெறும் 50 ரூபாய்க்கும் குறைவுதான்.

அந்த குச்சி அனேகமாக வெள்ளை நிறமாக இருக்கும் அதன் ஒரு எல்லையில் ஒரு சிவப்பு நிறக் கோடு இருக்கும்.( நிறக் குறியீடு சில குச்சிகளிலே வேறுபடலாம்.)

நீங்கள் செய்ய வேண்டியது அந்தக் குச்சியின் குறிப்பிட்ட முனையை உங்கள் சிறுநீரில் அமிழ்த்திப் பிடிக்க வேண்டியதுதான். பிடிக்க வேண்டிய நேரமும் நீங்கள் வாங்கிய குச்சியைப் பொறுத்து வேறுபடலாம். பொதுவாக 1-2 நிமிடங்கள்.

பின்பு குச்சியை வெளியில் எடுத்து பாருங்கள், அந்தக் குச்சியில் ஏற்கனவே இருந்த சிவப்பு நிறக் கோட்டுக்குப் பக்கத்தில் இன்னுமொரு கோடு புதிதாக தோன்றி இருந்தால், உங்கள் சிறுநீரில் hcG என்ற ஹார்மோன் இருக்கிறது அதாவது நீங்கள் கர்ப்பம் தரித்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.




4 comments:

cheena (சீனா) said...

இவ்வளவு எளிதான சோதனை இருக்கிறதா - பரவாய் இல்லையே

நல்வாழ்த்துகள் திமிழ்

push said...

Very useful information, thanks

push said...

how write in tamil language

push said...

very very thanks for your useful information