Thursday, December 10, 2009

உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னியா?

ஒரு பெண் முதன் முதலில் இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விடயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் பயன்படுத்துகிறது.


நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனித்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறு நீர் துவாரம்( urethral opening). மற்றது மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் துவாரம்vaginal opening).
இரண்டாவதாக உள்ள மாதவிடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் கைமண் (hymen)எனப்படும் ஒரு மென்சவ்வினால் சூழப் பட்டிருக்கும். அந்த மென்சவ்வின் நடுவிலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும்.

முதன் முதலில் உடலுறவில் ஈடு படும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தப் போக்கு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை.

சில பெண்களுக்கு இந்த கைமண் இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம்

சில பெண்களுக்கு இந்த கைமண் உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் உடைந்து போகலாம்.அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங் ,போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த கைமண் பாதிக்கப் படலாம்.

சுய இன்ப செயற்பாட்டில் ஈடு படும் பெண்களிலும் இந்த கைமண் உடைந்து விடலாம்.

சில பெண்களிலே இந்த கைமண் இளாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் கைமண் அப்படியே பாதிக்கப் படாமல் இருக்கலாம்.

ஆகவே கைமண் மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபித்து விட முடியாது.11 comments:

ராஜவம்சம் said...

ரைட் சார்!!!

cheena (சீனா) said...

ஆம் ஆம் உண்மை

நல்வாழ்த்துகள் துமிழ்

துமிழ் said...

thanks

ராஜவம்சம்
cheena (சீனா) sir

துளசி கோபால் said...

நல்ல இடுகை.

ஆனால் இந்த 'கைமண்' படுத்துதே!

ஹைமன் ன்னு சொல்லி இருக்கக்கூடாதோ????


சமீபகாலமா புதுசா ஒரு ரிப்பேர் நடக்குதுன்னு கேள்வி.

(புத்தியில்)வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு!

Sathish said...

பெண்களின் உடல் பற்றி தெரியாத மூடர்களுக்கு..நல்ல ஒரு கருத்தான.. பக்கம் இது..?!
ஆணுக்கு எது கன்னித்தன்மை?

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

தம்பீ !
வாழ்க வளர்க ! இது போன்ற தவறான எண்ணங்களை ஒழிக்க தொடர்ந்து பதிவுகள் போடவும்

Anonymous said...

Nalla Pathivu Vazhthukkal.
Nanri
Syed
Abu Dhabi UAE

நாஞ்சில் பிரதாப் said...

நல்ல பதிவு. இதுபோன்ற வக்கிரம் இல்லாத அறிவியில் ரீதியான பாலியல் அறிவை வளர்க்கும் பதிவுகள் வரவேற்கப்படவேண்டிய விசயம். இன்னும் இதுபோன்ற பிரச்சனைகள் சமூகத்தல் சில மடையர்களால் நடக்கிறது.

வாழ்த்துக்கள்.

Thekkikattan|தெகா said...

good one! keep up the spirit.

Muhammad Ismail .H, PHD, said...

அன்பின் துமிழ்,

மிக அருமையான, விஞ்ஞானப்பூர்வமான விளக்கம். நீங்கள் சொன்ன இதையே ITZ நண்பர்கள் இப்படி சொன்னார்கள். அது என்னாவென்றால் !

" a 'BIG' issue on a 'small' tissue"

இது எப்படி இருக்கு ?

தொடர்ந்து எழுதுங்கள். எங்களைப்போன்றவர்களின் நிறைந்த ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து எந்த இடுகையின் தரத்தையும் கணக்கிடதீர்கள். அது 5 பாண்டவர்களை விட 100 கௌரவர்களே நல்லவர்கள் என்பது போன்ற முட்டாள்தனம். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.


with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

Anonymous said...

very good