Tuesday, December 15, 2009

மாதவிடாய் காலத்து வலிகள்

மாதவிடாய் காலத்தில் வயிற்றில் நோ ஏற்படுவது பெண்களில் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இது ஆங்கிலத்திலே DYSMENORRHEA எனப்படும். இந்த வலியானது சில பெண்களுக்கு அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடியாதளவுக்கு பெரிய பிரச்சனையாக கூட இருக்கலாம்.

அமெரிக்காவிலே நடத்தப்பட்ட ஒரு ஆய்விலே பாடசாலைப் பெண்களில் 95 வீதமானோர் இந்த வலியினை அனுபவிப்பவர்களாக அறியப்பட்டது.இந்த மாதவிடாய் கால வலியானது இரண்டாக பிரிக்கப்படலாம் .

பூப்படைந்த காலத்தில் இருந்தே ஏற்படுகிற வலி.

நான் மேலே சொன்ன விடயங்கள் இந்த வகையான வலியைப் பற்றியாகும். அதாவது பூப்படைந்த காலத்தில் இருந்தே உங்களுக்கு வலி ஏற்படுமானால் , இந்த வலியினால் எந்த விதமான விளைவுகளும் ஏற்படாது. நீங்கள் அதைப்பற்றி அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

இருந்தாலும் இந்த வலியானது மாதவிடாய் ஆரம்பித்து முதல் 2 தொடக்கம் 3 நாட்களுக்கே இருக்கும். அதற்கு அதிகமாகவும் வலி இருந்தால் வைத்திய ஆலோசனையைப் பெறுவது உகந்தது.


வலி இல்லாமல் இருந்து பிற்காலத்தில் ஏற்படுகிற வலி.

அதாவது ஆரம்பத்தில் வலியில்லாத மாதவிடாய்களைத் தொடர்ந்து இடையில் வலி ஆரம்பிக்குமானால் இந்த வலியானது வேறு சில நோய்களால் ஏற்பட்டதாக இருக்கலாம். வைத்திய ஆலோசனை பெறுவது உகந்தது.

*************************************************************************************

மாதவிடாய் காலத்து வலி கடுமையாக இருப்பவர்கள் சிறிய ரக வலிநிவாரணிகளை வாங்கி பாவிக்கலாம்.
உதாரணத்திற்கு பரசிட்டமோல் (PARACETAMOL) இரண்டு மாத்திரைகள் 8 மணிநேரத்திற்கு ஒருதடவை

அல்லது மேபினாமிக் அசிட்(MEFENAMIC ACID) எனப்படும் மாத்திரை இரண்டு 8 மணி நேரத்திற்கு ஒரு தடவை.


இந்த இடுகை பயனுள்ள இடுகை என்று நீங்கள் நினைத்தால் மறக்காமல் வாக்களித்து மேலே சென்று வாக்களித்து மற்றவர்களுக்கும் போய்ச் சேரச் செய்யுங்கள் அப்படி இல்லாவிட்டால் பிழைச் சுட்டிக் காட்டுங்ககள் பயனுள்ள இடுகைகளை எழுதுவதற்கு வழிகாட்டியாக அது அமையும் .


6 comments:

cheena (சீனா) said...

அன்பின் துமிழ்

பிழைகளைச் சுட்டிக்காட்ட மருத்துவ அறிவு வேண்டும் - அது இயலாத செயல். பயனுள்ள இடுகையா - ஆம் தேவைப்படுபவர்களுக்கு. எத்தனை விழுக்காடு ....

எதனையும் எதிர்பாராமல் - கடமையாக - அறிந்ததை பிறர் அறியச் செய்வது ந்ல்ல செயல். இதனை மனதில் கொண்டு மறுமொழிகளோ ஊக்கமோ பாராட்டுகளோ எதிர்பாராமல் எழுதிக் கொண்டே செல்லுங்கள்

நல்வாழ்த்துகள்

chillsam said...

"மாதவிடாய்" காலத்தில் வலி நிவாரணி மாத்திரையினைப் பயன்படுத்துவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல;

ஆனால் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கலாம்; உஷ்ணமான சமாச்சாரங்களைத் தடுக்கலாம்;

முக்கியமாக கணவனார் உடலுறவின் போது எப்போதுமே ஆணுறையினைப் பயன்படுத்துவது மனைவிக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும்;

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நாட்களில் பெண்ணை தன் தோழியாக பாவித்து கரிசனையுடன் நடந்துக் கொள்ளவேண்டும்;

மாதுளை பழம் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்;வயிற்றின் மேற்புரத்தில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவலாம்;

இப்படியாக‌ பெண்களை நேசிப்பவர்களுக்கு ஐடியா வந்துகொண்டே இருக்கும்..!

kasbaby said...

நல்ல குறிப்பு.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

\\அன்பின் துமிழ்

பிழைகளைச் சுட்டிக்காட்ட மருத்துவ அறிவு வேண்டும் - அது இயலாத செயல். பயனுள்ள இடுகையா - ஆம் தேவைப்படுபவர்களுக்கு. எத்தனை விழுக்காடு ....

எதனையும் எதிர்பாராமல் - கடமையாக - அறிந்ததை பிறர் அறியச் செய்வது ந்ல்ல செயல். இதனை மனதில் கொண்டு மறுமொழிகளோ ஊக்கமோ பாராட்டுகளோ எதிர்பாராமல் எழுதிக் கொண்டே செல்லுங்கள்

நல்வாழ்த்துகள்\\

நண்பர் சீனாவின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கென்றே தனிப்பட்ட முறையில் பொருந்ததக்கூடியதாக இருப்பதால் அவர் கூறியதை நானும் வழிமொழிகிறேன்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

நிலாமதி said...

மிக நல்ல நோக்கம் மிக தேவையான் பதிவு. வாழ்த்துக்கள் தொடருங்கள்.

push said...

பரசிட்டமோல் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா, தங்கள் பதிலுக்கு காத்திருக்கும் அன்பு தோழி துமிழ்