Saturday, December 5, 2009

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய உயிர்காக்கும் செய்முறை -நேரடி வீடியோவுடன்

அருகிலே இருப்பவரோ அல்லது நாமோ மயக்கமடைவது என்பது நாம் எப்போதாவது சந்திக்கின்ற ஒரு நிகழ்வு.

அநேகமான இந்த மயக்க நிகழ்வுகள் இடம் பெறுவது தற்காலிகமாக மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவதினால் ஆகும். உதாரணத்திற்கு ஒருவர் நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்கும் போது அல்லது இருக்கும் போது குருதி புவி
ஈர்ப்புக் காரணமாக கால்களிலே தேங்கும் போது மூளைக்குச் செல்லும் ஒட்சிசன் மற்றும் குளுக்கோஸின் அளவு குறைவதினால் தற்காலிக மயக்கம் ஏற்படலாம்.

இவ்வாறன சந்தர்ப்பத்தில் மயக்கமனவர் தரையில் நேராக கிடத்தப்படும் போது கால்களும் தலையும் ஒரே மட்டத்திலே வருவதனால் கால்களில் குருதித் தேக்கம் குறைந்து மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு அதிகரித்து அவர்கள் சுயநினைவை எந்தப் பிரச்சினையும் இன்றி பெற்றுக் கொள்வார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது இவர்களின் மயக்கத்திகு காரணம் உடலின் வேறு பகுதியில் குருதி தேங்குவதால் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவதே. மற்றுப் படி இவர்களின் இதயம் மற்றும் சுவாசத் தொழிற் பாடுகளில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

ஆனால் சில மயக்க நிலைகள் இதய மற்றும் சுவாச தொழிற் பாடுகளின் நிறுத்தத்தினால் ஏற்படும். இந்த சந்தர்ப்பம் cardio respiratory arrest எனப்படும்.

பல்வேறு பட்ட நோய்கள் / காரணங்கள் இவ்வாறு இதயம் மற்றும் சுவாச நிறுத்தத்திற்கு காரணமாக அமையலாம்.
இதற்கான காரணங்களை நான் பட்டியல் இட்டால் நிச்சயமாக மருத்துவ அறிவு இல்லாத ஒருவரினால் புரிந்து கொள்ள முடியாது.

ஆனாலும் இவ்வாறு இதய மற்றும் சுவாச தொழிற்பாடு நின்று போன ஒருவருக்கு உடனடியாக ( சில நிமிடங்களுக்குள்ளேயே ) மருத்துவ உதவி வழங்கப் படா விட்டால் அவரின் உயிர் நிரந்தரமாகவே பிரிந்துவிடும்.

அதாவது வீதியிலோ அல்லது வீட்டிலோ ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டால் அவர் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப் படுவதற்கு முன்னமே நிரந்தரமாக உயிர் இழந்து விடுவார்.

ஆகவே இந்த நிலை ஏற்பட்ட ஒருவர் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லும் முன்னமே அவருக்குரிய தகுந்த மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு நபரும் இதய மற்றும் சுவாசம் நின்ற ஒருவருக்கு எப்படியான முதலுதவி வழங்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது முக்கியமாகும்.

இதயம் மற்றும் சுவாசம் நின்ற ஒருவருக்கு கொடுக்கப் படும் முதலுதவி CPR(cardio pulmonary resuscitation எனப்படும்.

வெறுமனே எழுத்துக்களால் மற்றும் இந்த செய்முறையை நீங்கள் படித்து அறிந்து கொள்ள முடியாது, நேரடியான செயன்முறை பயிற்சி மூலமே இதை நீங்கள் நேர்த்தியாகப் பழகலாம். இதற்காக நீங்கள் சில மணி நேரங்களை செலவழித்தாலே போதும்.

நீங்கள் சிலபேர் ஒரு குழுவாகச் சேர்ந்து உங்களுக்கு அண்மையில் இருக்கும் ஒரு வைத்தியரை நாடி அல்லது செஞ்சிலுவைச் சங்கம் போன்ற முதலுதவி நிலையங்களின் உதவியைப் பெற்றுக் கற்றுக் கொள்ளலாம்.

சில அடிப்படை விடயங்களை மட்டும் நான் சொல்லி விடுகிறேன்.

முதலில் மயக்கமானவ்ரின் இதய சுவாச தொழிற்பாடுகள் நின்று விட்டதை உறுதிப் படுத்த வேண்டும். அவரின் நாடித்துடிப்பை(pulse)பிடித்துப் பார்ப்பதன் மூலம் இதய பாதிப்பு உள்ளதை அறியலாம்.

மற்றும் அவரின் நெஞ்சுப் பகுதி சுவாச அசைவுகளை காட்டுகிறதா ? மற்றும் மூக்கின் அருகே உங்கள் கையை வைத்து சுவாசக் காற்று வெளிவருகின்றதா என்று அறிவதன் மூலம் சுவாச பாதிப்பை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு இதயம் சுவாச தொழிபாடு நின்று போன ஒருவருக்கு அடுத்ததாக நாம் உடனடியாக உயிர் காக்கும் செயன் முறையை (CPR) வழங்க வேண்டும்.

முதலாவதாக சம தரையில் கிடத்தி அவரின் காற்று வழி பாதையை சரி செய்ய வேண்டும். அவர் பொய்யான பற்கள் கட்டிய ஒருவரானால் அந்த பற்கள் அவரின் சுவாசப் பாதையை அடைக்கலாம் அவற்றை நீக்க வேண்டும்.
மற்றும் உணர்வற்ற ஒருவரின் நாக்கு பின் புறமாக சரிந்து காற்றுப் பாதையை அடைக்கலாம். இதைத் தவிர்ப்பதற்கு அவரின் நாடியைச் சற்றுத் தூக்கிப் பிடித்தல் உகந்தது.

இவ்வாறு அவரின் சுவாசப் பாதையை சரியாக்கிய படி அவருக்கு இதய அழுத்தங்கள் கொடுக்கப் பட வேண்டும். இதய அழுத்தம் எனப்படுவது(CARIDAC MASSAGE ) நின்று போன இதயத்தை உங்கள் கைகளால் அழுத்துவதன் மூலம் மீண்டும் இயங்கத் தூண்டுதல். உங்கள் இரண்டு கைகளையும் பயன் படுத்தி நெஞ்சுப் பகுதியிலே அழுத்தமாக அழுத்த வேண்டும். நிமிடத்திற்கு நூறு தடவை என்ற வீதத்தில் அழுத்த வேண்டும்.

அதே நேரம் இன்னுமொருவர் பாதிக்கப் பட்டவருக்கு செயற்கையான சுவாசத்தினை வழங்க வேண்டும். இதற்காக் அவர் தன் உதட்டை பாதிக்கப் பட்டவரின் உதட்டோடு வைத்து தன் மூச்சை பாதிக்கப் பட்டவரின் வாய்க்குள்ளே ஆழமாக விட வேண்டும்(MOUTH TO MOUTH BREATHING).
அண்ணளவாக முப்பது இதய அழுத்தத்திற்கு இரண்டு மூச்சு என்ற வீதத்திலே வழங்கப் பட வேண்டும்.இதன் போது பாதிக்கப்பட்டவரின் மூக்கினைப் பொத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதலுதவி வழங்கிய படியே நோயாளி வைத்திய சாலைக்கு எடுத்துச்
செல்லப் பட வேண்டும்.

இங்கே நான் குறிப்பிட்டவை சில அடிப்படை தகவல்களே . சரியான முறையில் இந்த முதலுதவியை நான் முன்பே சொன்ன படி தகுந்த ஒருவரிடம் இருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ளுங்கள்.

கீழே உள்ள வீடியோ எப்படி இதய அழுத்தம் கொடுக்கப் பட வேண்டும் என்பதை விளக்குகிறது.


இந்தச் செயற் பாட்டினை விளக்கும் ஒரு வீடியோவைப் கீழே பாருங்கள்.

பி.கு-இந்த இடுகையை மற்ற நண்பர்களுக்கும் கொண்ட சேர்க்க உங்கள் வாக்கினை தமிழ் மணத்தில் அளித்துச் செல்லுங்கள்
5 comments:

malar said...

ஏன் உங்கள் பதிவின் முடிவில் ஒட்டு பட்டை இல்லை

cheena (சீனா) said...

அன்பின் துமிழ்

நல்ல பயனுள்ள தகவல் -

நல்வாழ்த்துகள்

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

துமிழ் அவர்களே,

நல்ல தகவல்.நன்றி உங்கள் பணி பாராட்டத்தக்கது. வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

துமிழ் said...

thanks ..
malar
cheena
muththukkumar

நிமல்-NiMaL said...

மிகவும் பயனுள்ள பதிவு.