Tuesday, November 30, 2010

மாதவிடாய் நோய் -பெண்கள் பக்கம்

....................................................................................................................................................................
முந்திய தொடர்கள் ....

பெண்கள் பக்கம் !( பெண்களுக்கோர் வேண்டுகோள்)


பூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ( பெண்கள் பக்கம்)

....................................................................................................................................................................
Premenrual syndrom(PMS) எனப்படுவது பெண்களை வாட்டி எடுக்கும் மாதவிடாயோடு சம்பந்தப்பட ஒரு நோயாகும்.இந்த நோயின் இயல்பானது ஒவ்வொருமுறை மாதவிடாய் ஏற்படுவதற்கு இரண்டு வார காலத்தில் ஆரம்பித்து மாதவிடாய் ஆரம்பித்தவுடன் மறைந்துவிடும்.

அறிகுறிகள்

 1. அதிகரித்த முகப்பரு
 2. மலச்சிக்கல்(CONSTIPATION)
 3. மன உளைச்சல்(ANXIETY)
 4. மனத்தாழ்வு(DEPRESSION)
 5. நாரி நோ
 6. வயிறு ஊதிய உணர்வு
 7. வயிற்றுக்குள் ஏதோ செய்வது போன்ற உணர்வு(BLOATING)
 8. அதிகமான களைப்பு
 9. இதயம் அதிகமாக துடிக்கும் உணர்வு(PALPITATION)
 10. தலையிடி
 11. மூட்டு நோ
 12. உடலுறவில் நாட்டம் குறைதல்
 13. தூக்கமின்மை
 14. வெளியில் கவனம் செலுத்தமுடியாமை
 15. மார்பக வலி
 16. மார்பகம் வீங்கிய உணர்வு
 17. கைகால் வீங்கிய உணர்வு
 18. உடல் நிறை அதிகரித்தல்
 19. பசிக்குறைவு/சில உணவுகளில் மட்டும் அதிக நாட்டம் 

மேலே சொன்ன அறிகுறிகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன் தொடங்கி மாதவிடாய் ஆரம்பிப்பதோடு மறைவதோடு அவை அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலேயே அவை Premenstrual syndrome எனப்படும்.

இந்த நிலையை பூரணமாக இல்லாமல் செய்ய முடியாது. ஆனாலும் குழந்தை பிறந்தவுடன் இதன் தாக்கம் குறைவதாக சொல்கிறார்கள்.

இந்தப் பாதிப்பு ஏற்படும் காலத்தில் வைத்தியரின் அறிவுரை இல்லாமலேயே பெறக்கூடிய சில வலி நிவாரணிகளை நீங்கள் பாவிக்கலாம்.
அவை- பரசிட்டமோல், ப்புருபான்(Ibrufan),மேபினாமிக் அசிட்(mefenamic acid) போன்ற மாத்திரைகள்.

அதுதவிர கீழே உள்ள நடவடிக்கைகள் மூலமும் அதன் பாதிப்புக்களைக் குறைக்கலாம்.
கடலை தானிய உணவுகளை அதிகாமக் உண்ணுதல்
கொழுப்பு கலந்த உணவுகளைக் குறைத்தல்(முக்கியமாக எண்ணெய்)
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணுதல்
மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் உப்பைக் குறைத்தல்
கோப்பி , மது அருந்துதலை தவீர்த்தல்
உடற்பயிர்ச்சியில் ஈடுபடல்
போதியளவு தூங்குதல்
மூன்று பிரதான உணவுகளை தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறுமுறை சாப்பிடுதல்

மேலே சொன்ன நடவடிக்கைகளை இந்த பாதிப்பு ஏற்படும் காலத்தில் மட்டும் மேற்கொண்டாலே போதும்.
(அதாவது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன் மாத்திரம்)

இவற்றின் மூலம் இந்தப் பிரச்சினை குறையாவிட்டால் வைத்தியரை சந்தித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடரும் ....

.பி.கு-
பெண்களே இது முற்று முழுதாக உங்களுக்கான தொடர்...
தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் முன் வையுங்கள் .

நாம் எப்படி வளர்கிறோம் ?

மனிதனின் வளர்ச்சி(Growth) எனப்படுவது` தொடர்ச்சியான உடலியல் மாற்றங்கள் மூலம் ` உயரத்தில் ஏற்படுகிறஅதிகரிப்பாகும். உடல் நிறை அதிகரித்தல்,நகம் வளர்தல்,மயிர் வளர்தல் என்பவை உடற் றொழிப் பாடு ரீதியாகவளர்ச்சி என்ற பதத்துக்குள் உள்ளடக்கப் படவில்லை . .


வளர்ச்சி பல ஹார்மோன்களின் ஒருங்கினைந்த தொழிற் பாடாலே ஏற்படுகிறது.

ஒருவரின் வளர்ச்சி அவர் உட் கொள்ளும் உணவின் அளவு, பிறப்புரிமைக் காரணி(genetic factor), சிறுவயதில் ஏற்படும் மன /உள நோய்கள் என்பவற்றினால் தீர்மானிக்கப்படும்.

மனிதனின் வளர்ச்சியில் உச்சக்கட்ட வளர்ச்சி மூன்று நிலைகளில் ஏற்படும்.
அதாவது ஒரு குழந்தை உருவானதில் இருந்து வளர்ந்து கொண்டிருந்தாலும் அதன் வாழ்வின் மூன்று கட்டங்களில் வளர்ச்சி வீதமானது உச்சமாக இருக்கும்.அதுவே Growth spurt. எனப்படும்.

அதிகளவான வேகத்தில் ஒரு மனிதன் வளரும் கட்டங்கள்(growth spurt).

1. கருப்பையின் உள்ளே - கண்ணுக்குத் தெரியாத கலமாக உருவாகி சில மாதங்களிலேயே 50cm வரை குழந்தை வேகமாக வளர்ந்துவிடும்.

2.பிறந்ததிலிருந்து முதலிரு வருடங்கள் - இதற்குப் பிறகும் தொடர்ந்து குழந்தை வளர்ந்து கொண்டே இருக்குமானாலும் அதன் வளர்ச்சி வேகம் குறைவானதாகவே இருக்கும்.

3.பூப்படையும் காலத்தில் ஏற்படும் வளர்ச்சி  இருபாலாரிலும் பூப்படையும் காலத்தில் மீண்டும் வளர்ச்சிவேகம் சடுதியாக அதிகரிக்கும். குழந்தைகள் பூப்படையும் பருவத்தில் சடுதியாக உயரத்தில் அதிகரிப்பதை எல்லோரும் அனுபவத்திலேயே பார்த்திருப்போம்..

பூப்படையும் பருவத்தில் ஏற்படும் வளர்ஹ்சி அதிகரிப்போடு ஒரு மனிதனின் உயர வளர்ச்சி முற்றுப் பெற்றுவிடும். எலும்புகளின் வளர்ச்சிக்குப் பொறுப்பாக இருக்கும் அமைப்பு செயல் இழந்து எலும்போடு  கலந்துவிடுவதால் 
அதற்கப்புறம் யாராலும் உயரத்தில் வளர முடியாது.

பூப்படைதல் செயற்பாடு முடிவடைவதோடு வளர்ச்சியும் முடிவடைந்து விடும்.

பெண்களிலே பூப்படைதல் 8 வயதளவிலே ஆரம்பித்து 14 -15 வயதளவிலே முற்றுப் பெற்று விடும்.
ஆண்களிலே பூப்படைதல் 9  வயதிலே ஆரம்பித்து  15-16வயதளவில் முடிவடைந்திவிடும்.
அத்தோடு அவர்களின். வளர்ச்சியும் முடிவடைந்துவிடும்.

இதுவே பொதுவாக  சாதாரனமானவர்களில் நடைபெறும் செயற்பாடாகும்.

பி.கு- எனது முன்னைய   இந்தப் பதிவிலே பின்னூட்டம் இட்ட நண்பர்களின் சந்தேகம்  இப்போது தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அங்கு பின்னூட்டம் இட்ட ஒரு நண்பர் மனிதன் 21 வயது வரை வளர்வதாக சுஜாத்தா சொல்லியிருப்பதாக சுட்டிக் காட்டினார். சுஜாத்தா .சரியான தகவலை பெறாமல் அல்லது தவறாக புரிந்து கொண்டு எழுதியிருப்பார்.விட்டு விடுங்கள்..

.

வேலைக்குப் போகும் பெண்கள் எவ்வாறு தாய்ப்பால் கொடுக்கலாம்?

கேள்வி

டாக்டர் ! நீங்கள் ஒரு பதிவில் குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று எழுதி
இருந்தீர்கள். நான் இருக்கும் நாட்டில் மூன்ருமாதத்திலேயே வேலைக்குப் போக வேண்டும். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
புட்டிப்பால் கொடுத்தால் குழந்தைக்குப் பிரச்சினை ஏதாவது ஏற்படலாமா?

பதில்

நீங்கள் வேலைக்குப் போவதால் புட்டிப் பால்தான் கொடுக்க வேண்டும் என்றில்லை இல்லை.நீங்கள் வேலைக்குப் போகும் நாட்களில்
உங்கள் தாய்ப்பாலை ஒரு சுத்தமான கண்ணாடிப் பாத்திரத்திலேயே எடுத்து(கறந்து ) வைத்து விட்டுப் போங்கள்.
வீட்டிலேயே குழந்தையை பார்த்துக் கொள்பவர்களை புட்டிப் பாலுக்குப் பதிலாக உங்கள் தாய்ப்பாலைக் கொடுக்கச் சொல்லுங்கள்.

தாய்ப்பால் குளிரூட்டி இல்லாமல் நான்கு மணிநேரம் வரை பழுதடையாமல் இருக்கும்.
குளிரூட்டியில் வைத்தால் பல வரங்கள் வரை பழுதாகாமல் இருக்கும்.
அதே நேரம் தாய்ப்பாலை deep freezer யில் வைத்தால் பல மாதங்கள் வரை பழுதாகாமல் இருக்கும்.

அதனால் வேலைக்குப் போவதொன்றும் தாய்ப்பால் கொடுப்பதற்கான தடை அல்ல.

Monday, November 29, 2010

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை

குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

பிள்ளை பசியெடுத்து அழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள். எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என்று வரையறை இல்லை. குழந்தைகளின் இரப்பை மிகவும் சிறியது என்பதால் அதிகமான உணவை ஒரே தடவியில் ஏற்று சமிபாடு அடையச் செய்ய முடியாது. அதனால் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும்.

எவ்வளவு காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

இதற்கும் வரையறை இல்லை .எத்தனை வருடத்திற்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். எந்தப்பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும் முதல் 5-6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாத முடிவில் தாய்ப்பாளினால் தனியே குழந்தைக்குரிய போசாக்கினை வழங்க முடியாது போவதால் மற்றைய உணவுகளை ஆரம்பிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண் கர்ப்பம் தரித்தால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா?

நிச்சயமாக .அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்வது எப்படி?

தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குழந்தை மார்பகத்தை உறிஞ்சும் போதே தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதுதவிர தாய் போதியளவு நீராகாரம், பழ ரசம் போன்றவை அருந்த வேண்டும்.

தொடரும்.....

Sunday, November 28, 2010

வளைந்திருக்கும் ஆணுறுப்புக்கள்!

 எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும்போது  போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு நாப்பத்தைந்து டிக்கிரி வரைகூட வளைவு இருக்கலாம்.

அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன.இதனால் உங்கள் இல்லறமே பாதிக்கப்படும் என்று அச்சம் கொள்ள வேண்டியதில்லை.இனி ஆணுறுப்பிலே வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்களைப் பார்ப்போம்!

ஹைப்போ ஸ்பாடியாசிஸ்(Hypospadiasis)
சாதாரணமாக சிறுநீர் மற்றும் விந்து வெளியேறும் துளையான்து ஆணுறுப்பின் நுனியில்தான் இருக்கும் .ஆனால் இந்த நோயினால் பாதிக்கப் பட்ட ஆண்களுக்கு அத்துளையானது நுனிப்பகுதியில் அல்லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண்டுப் பகுதியில் இருக்கும். இதனால் ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்படலாம்.
இதற்கு சத்திர சிகிச்சை மூலம் வேறு ஒரு துளையை ஆணுறுப்பின் நுனியில் ஏற்படுத்துவதன் மூலம் தீர்வு காணப்படலாம்.


பைமொசிஸ் (phimosis)பொதுவாக ஆணுறுப்பு விறைப்படையும் போது  அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும் . ஆனால் சில பேரிலே இந்த முன் தோல் பின்நோக்கி இழுபட முடியாமல் இருக்கும். இதனால் ஆணுறுப்பிலே சில வேளைகளில் வளைவு ஏற்படலாம்.

இதற்கு சிறிய சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காணப் படலாம். இந்த சத்திர சிகிச்சை circumcision எனப்படும் ,  இது முஸ்லிம் மக்கள் செய்து கொள்ளும் சுன்னத்து எனப்படும் செயன் முறையாகும்.

சிறுநீர் வழிச் சுருக்கம்.(urethral stricture)

சிறுநீர் வெளியேறும் குழாய் போன்ற அமைப்பு ஆணுறுப்பின் உள்ளே இருக்கிறது. அது  urethra எனப்படும். இது சுருங்குவதால் ureththral stricture) ஏற்படுகிறது. இதனால் கூட ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற மாயை ஏற்படலாம்.


பயரோநியஸ் நோய் (Peyronie's disease )

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆணுறுப்பிலே தோலுக்குக் உள்ளாக இருக்கும் பகுதி சற்று தடிப்பு(கடினமடைவதால்) அந்த ஆணுறுப்பு விறைப்படையும் போது இவ்வாறு தடிப்படைந்த பகுதியை நோக்கி வளைந்து காணப்படும்.

சில வேளைகளில் அவர்களுக்கு வலி கூட ஏற்படலாம்.
சில ஆண்களிலே உடலுறவிலேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம்..
முக்கியமாக இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மனதளவிலே பெரிய அழுத்தங்கள் ஏற்படலாம்.அதுவே அவர்களின் இல்லறத்தைப் பாதிக்கலாம்.


இந்த நோயின் அறிகுறிகள்

இது படிப்படியாக ஏற்படலாம் அல்லது சிலரிலே சடுதியாகக் கூட ஏற்படலாம்.
முக்கிய அறிகுறி  ஆணுறுப்பு விறைப்படையும் போது ஒருபக்கமாக வளைந்திருத்தல்.அநேகமானவர்களில் இந்த வளைவு மேல் நோக்கியதாகவே இருக்கும். ஆனாலும் சிலபேரில் கீழ் நோக்கியதாக அல்லது பக்கவாட்டில்  இருக்கலாம்.
அடுத்த முக்கியமான அறிகுறி ஆணுறுப்பிலே வலி ஏற்படுதல்.
சில பேரிலே விறைப்புத்தன்மை ஏற்படுவதையே இது தடுக்கலாம்.
சிலவேளைகளில்  ஆணுறுப்பு சிறிதாவது போன்ற தோற்றம் ஏற்படலாம்.

இது என்ன காரணத்தால் ஏற்படுகிறது?

சரியான காரணம் அறியப்படா விட்டாலும் , இது ஆணுறுப்பிலே ஏற்படும் காயங்கள் காரணமாக ஏற்படும் தழும்புகள் காரணமாகவே  ஏற்படுவதாக சொல்லப் படுகிறது.
புகைப் பிடிப்பவர்களுக்கும் , நீரழிவு நோயாளிகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லப் படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது வைத்தியரை நாட வேண்டும்?

இந்த  நோய் இருக்கும் எல்லா ஆண்களிலும் இது வலியை ஏற்படுத்துவதில்லை. அதே போல வளைவு இருந்தாலும் இது எல்லோரிலும் உடலுறவுக்கு   இடையூறாக இருப்பதும் இல்லை.
ஆகவே ஆணுறுப்பிலே ஏற்படும் வளைவு காரணமாக உங்களுக்கு வலி ஏற்பட்டாலோ அல்லது அது உடலுறவுக்கு இடையூறாக இருந்தால் மட்டுமே நீங்கள் வைத்தியம் பெற்றுக் கொள்ள வேண்டியவர்யாகுறீர்கள்.

இதற்கு எவ்வாறான வைத்தியங்கள் செய்யப்படலாம்?

மாத்திரைகள் மூலம் இதற்கு சரியான தீர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவு.
சிறிய  சத்திர  சிகிச்சை மூலம் தடிப்படைந்த பகுதி அகற்றப்படலாம்.


மேலே கேள்வி கேட்ட நண்பர்களுக்கு நான்மீண்டும்  சொல்லிக் கொள்ளுவது என்னவென்றால் , நீங்கள் உங்கள் ஆணுறுப்பு வளைந்து இருப்பதாக மட்டுமே சொன்னீர்கள். அது எந்த அளவுக்கு வளைந்து இருக்கிறது  என்று கூடசொல்லவில்லை  .சிலவேளை அது சாதாரண வளைவாகக் கூட இருக்கலாம்.

இருந்தாலும் நான் கூறியுள்ள விடயங்கள்  மூலம் அந்த நோய்களுக்கான சந்தர்ப்பம் உங்களுக்கு உள்ளது  என்று நினைத்தாலோ   அல்லது இது உங்களுக்கு பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக பிரச்சினைகளைக் கொடுக்கிறதா என்பதைப் பொறுத்து நீங்கள் வைத்திய வசதியைப் பெற்றுக் கொள்ளுவது உகந்தது.

ஆனாலும் இதனால் உங்களுக்கு உடலுறவிலே ஈடுபடும் தகுதி இல்லை என்று தேவை இல்லாமல் மனத்தைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.


பி.கு-
உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com  என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இந்த இடுகை மற்றவர்களுக்கும் போய்ச் சேரவேண்டியது என்று நினைத்தால் தமிழ் மனத்திலேயும் தமிளிஷிலேயும் வாக்களித்துச் செல்லுங்கள்.

ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் !

கேள்வி 

பெண்களைப்போல ஆண்களும் பூப்படைவதாகக் கேள்விப்பட்டேன் உண்மையா சார்?

பதில் 

ஆம் . கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்.  

Saturday, November 27, 2010

பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிப்படும் திரவங்கள்

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே(VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்களாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத்தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மையை பேணும்.

இவ்வாறு ஈரத்தன்மை பேணப்படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதரனமாக்(HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசியமாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிகளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு உலர்ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்களுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங்க்களை இது கொடுக்கலாம்.

இவ்வாறு சாதாரணமாக வெளிப்படும் திரவமானது , சில பெண்களுக்கு மனரீதியான உளைச்சலைக் கொடுக்கலாம். தங்களுக்கு ஏதொ நோய் இருக்கிறது அதனாலேதான் இந்த நிலை ஏற்படுகின்றது அவர்கள் கூச்சப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே வருந்திக் கொண்டிருக்கலாம்.


உண்மையில் பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிவருகின்ற திரவங்கள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெறால் சில நோய்களில் கூட இவ்வாறு திரவங்கள் வெளிவரலாம்.

எவ்வாறு நோய்களினால் வெளிவருகின்ற திரவங்களை சாதாரண திரவங்களில் இருந்து வேறு பிரித்தறிவது?

சாதாரணமாக வெளிவருகிற திரவமானது தெளிவானதாக(CLEAR) எந்த விதமான கெட்ட மனமும் இல்லாததாக இருக்கும்.இது அவர்களின் உள்ளாடையில் பட்டு உலரும் போது பால்(MILKY) போன்ற அல்லது தெளிவானதாக இருக்கும்.இதுவே வெள்ளை படுதல் என்று நம் பெண்களால் அழைக்கப் படுகிறது.சாதாரணமாக வெளிவரும் திரவம்

மேலும் இந்த திற வெளிப்பாடானது மாதவிடாயின் போது, உடலுறவின் போது, கர்ப்பம் தரித்திருக்கும் போது போன்ற சந்தர்ப்பங்களில் அதிகரிக்கலாம்.


ஆனால் இவ்வாறு இல்லாமல் திரவமானது பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்குமானால், கெட்ட மனமுடையதாக இருக்குமானால், அல்லது தயிர் போன்று தடித்த கட்டி(THICK) போன்ற திரவமாக இருக்குமானால் இது குறிப்பிட்ட சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறன சந்தர்ப்பத்தில் வைத்தியரை நாடி தகுந்த மறுத்ததை எடுத்து சில நாட்களுக்கு உட்கொண்டாலே போதும் இந்தப் பிரச்சினை சுகமாகி விடும். இது பொதுவாக கிருமிகளின் தொற்றுகளால் ஏற்படும்.


மேலும் இந்தத் திரவமானது மிகவும் சகிக்கமுடியாத மனமுடையதாக , அல்லது இடையிடையே ரத்தம் போகும்போது இது புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

ஆக பென்னுருப்பிலே இருந்து திரவம் வெளிப்படுகின்றது என்று அஞ்சினால், முதலில் அதன் தன்மையை அவதானியுங்கள்.

கீழே வரும் மாறன்கள் உங்கள் பிறப்பு வழித் திரவத்தில் இருந்தால் உடனேயே வைத்தியரை நாடுங்கள்.
 1. தயிர் தன்மையான வெள்ளை கட்டிகள் வெளிவருதல்
 2. பச்சை அல்லது மங்க்ச்சல் நிறத் திரவம் வெளிவருதல்
 3. சகிக்க முடியாத மனம் கொண்ட திரவம் வெளிவருதல்
 4. அதிக ரத்தம் போகுதல் அல்லது மாதவிடாய் அல்லாத நேரத்தில் ரத்தம் போகுதல்
இவை எதுவும் இல்லாமல் சாதரணமான பால் போன்ற அல்லது தெளிவான திரவங்கள் வெளிவந்தால் இது உங்களில் மட்டுமல்ல எல்லாப் பெண்களிலும் உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க ஏற்படுகின்ற சாதாரணமான நிகழ்வே!
இதற்காக அச்சப் படத்தேவை இல்லை.

Friday, November 26, 2010

செயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் முறை(வீடியோவுடன்)

ஒரு குழந்தை எப்படி உருவாகிறது என்று முன்னைய இந்த இடுகையில் பதிவிட்டிருந்தேன்.ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.

ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRA UTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.

இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )

இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.

கருப்பையினுள் விந்துகளை செலுத்த பயன்படும் குழாய்

இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.

கருப்பையினுள் செலுத்தப்படுவதை விளக்கும் படம்.


சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.

ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.

இது பற்றி ஒரு வீடியோபூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ( பெண்கள் பக்கம்)

முந்திய இடுகையில் பூபடைதலின் போது ஏற்படுகின்ற நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லி இருந்தேன்.ஒவ்வொரு பெண்ணிலும் பூப்படைதலினால் ஏற்படுகின்ற சடுதியான மாற்றங்கள் பற்றி நிறையச் சந்தேகங்கள் எழும். 
சில பெண்கள் இதை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொண்டு சந்தோசப் பட்டாலும் சில பெண்களிலே இது பற்றிய போதிய அறிவின்மையால் பல மன உளைச்சல்கள் ஏற்படலாம்.
இதைத் தவீர்க்கும் முகமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் பூப்படைதலின்  போது நடைபெறும் மாற்றங்கள் பற்றி போதிய அறிவு வழங்கப்பட வேண்டும். இந்த அறிவினை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.
பூப்படைதலின்  முதற் கட்டமாக ஒரு பெண்ணின் மார்பு வளர்ச்சி ஆரம்பிக்கும். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய அசௌகரியமாக இருக்கலாம்.தொடர்ந்து அவர்களின் அக்குள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் மயிர்கள்
வளருதல். இந்த புதிய மாற்றங்கள் அவர்களின்  பூப்படைதலின்   ஆரம்ப நிலை என்றும் இதுவே ஒவ்வொரு பெண்ணிலும் நடைபெறும் சாதாரண நிகழ்வு என்றும் அடிப்படை அறிவை அந்த பெண்ணிற்கு புகட்டவேண்டியது பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக தாய் இது பற்றி தன் பெண்ணோடு மனது விட்டு உரையாட வேண்டும்.

இந்த நேரத்திலேயே அடுத்தகட்டமாக ஆரம்பிக்கப்போகும் மாதவிடாய் பற்றி அது ஆரம்பிக்கும் முன்னமே எடுத்துக் கூறி அதை அந்தக் பிள்ளை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொள்ளும் மன நிலையை உருவாக்க வேண்டியதும் ஒரு தாயின் கடமையாகும்.

சிலவேளைகளில் தாய் மாதவிடாய்  காரணமாக சில அசௌகரியங்களை சந்திப்பவராக இருக்கலாம். ஆனாலும் தன் பிள்ளையிடம் அது
பற்றி கூறாமல் மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணிலும் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு  என்றும் அதுவே அவர்களின் பெண்மைக்கு 
அடையாளமாக அமைவதோடு பிற்காலத்தில் அவர்களிற்கு தாய்மைத் தன்மையை  அழிக்கப் போவது என்று கூறி அவர்களை மாத விடாயை சந்தோசமாக ஏற்றுக் கொள்ளுபடி செய்ய வேண்டும்.அத்தோடு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கினை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் பூரணமான அறிவை அது ஏற்படுவதற்கு முன்னமே ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதும் ஒரு தாயின் கடமையாகும்.

மேலும் மாதவிடாய்  சம்பந்தமாக அந்தப் பெண் பிள்ளையின் மனதிலே நிறையச் சந்தேகங்கள் எழலாம். குறிப்பாக,
1. மாதவிடாய் காலத்தில்எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கும்?
2.மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுமா?
3.மாதவிடாய் காலத்தில் தான் குளிக்கலாமா?
4.மாதவிடாய் காலத்தில் தான் விளையாடலாமா?

இந்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கலாம்.தாய் இதுபற்றி தானாகவே பேசத் தொடங்கி இது பற்றிய விபரங்களை பெண்ணுக்கு முழுமையாக தெரியப் படுத்த வேண்டும்.

குறிப்பாக மாதவிடாய் மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டாலும் சரியாக எத்தனை நாளுக்கு ஒருமுறை ஏற்படும் என்பது பெண்ணுக்கு பெண் வேறுபாடும்.
21.நாட்களில் இருந்து 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானது என்று தெரியப்படுத்த வேண்டும் .அதாவது சில பெண்களிலே 21 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும்.சில பேர்ல32  நாட்களுக்கு ஒருமுறையோ அல்லதுசில பேரிலே 35  நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படலாம். 

21 தொடக்கம்  35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானது என்றும் இது சரியாக ஒவ்வொரு மாதத்திற்கும்(30நாட்கள்) 
ஒருமுறைதான் ஏற்பட வேண்டியதில்லை என்றும் தெளிவு படுத்த வேண்டும்.

அடுத்ததாக மாதவிடாய் காலத்தில் மிதமான வயிற்று வலி ஏற்படலாம் என்றும் இது சில நாட்களுக்கே இருக்கும் என்று ஆரம்பத்திலேயே சொல்லி 
வைக்க வேண்டும்.மேலும் மாதவிடாய் காலத்தில் சாதாரணமான நடவடிக்கைகள் (சைக்கிள் ஓடுதல், நடனமாடுதல், விளையாடுதல்)போன்றவற்றிலும் ஈடுபடலாம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு தாயும் தன் பெண் பிள்ளையை மாதவிடாய் ஆரம்பத்தினாலும் , பூப்படைதளினாலும் ஏற்படப் போகும்
மாற்றங்களை எதிர்கொள்ளும் முகமாக தயார் படுத்த வேண்டும்.. 

தொடரும் 
இது பற்றிய உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்...

குழந்தைகளுக்கு வரும் மாதவிடாய்

சில பெண் குழந்தைகளுக்கு பிறந்து சில நாட்களுக்கு பிறப்புறுப்பு வழியே சிறிதளவு இரத்தப் போக்கு இருக்கலாம். இது கருப்பையில் இருக்கும் போது அம்மாவில் இருந்து குழந்தைக்குச் சென்ற சில ஹார்மோன்களினால் ஏற்படுவது.

அதாவது அம்மாவின் ரத்தத்தில் இருக்கும் ஹார்மோன்கள் பிள்ளையின் ரத்தத்தில் கலந்து மாதவிடாயை ஒத்த மாற்றத்தை அந்தக் குழந்தையில் ஏற்படுத்தும் இதனால் குழந்தை பிறந்து சில நாட்களுக்கு சிறிதளவு இரத்தப் போக்கு இருக்கும். இது சாதாரணமான ஒரு நிகழ்வாகும். இதற்காக எந்தப் பெற்றோரும் அச்சப்படத் தேவை இல்லை.

எல்லாக் குழந்தைகளுக்கும் இது ஏற்படாது.

Thursday, November 25, 2010

ஆணுறுப்பிலே துர் நாற்றம் வீசுதல் சம்பந்தமாக...

கேள்வி

Dear Sir,

How are you? I am ... and am 27 years of age..I am worrying very much on following problems,

I will come to the matter directly,

I am feeling that I have yeast (fungus) infection on my penis..

Symptoms are,
1. Bad smell
2. Kind of white solid liquid (not much) on Penis -  I have to clean it everyday
3. Itching (rarely)

Due to this I am put on hold on my marriage. So please advice me how to cure this and what kind of medicine I have to take.

Regards,//
(டாக்டர் எனக்கு ஆணுறுப்பிலே பங்கசு தொற்று இருப்பதாக உணர்கிறேன்.எனக்கு ஆணுறுப்பிலே வெள்ளை
நிரவத் திரவம் வெளியேறுவதுடன் அரிதாக கடித்தன்மையும் உள்ளது?


பதில்

நண்பரே உங்களுக்கு பங்கசுத் தொற்று இருப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீகள் ஆனால் பங்கசுக்களின்வீரியத்தன்மை சாதாரனமானவர்களில் அவ்வளவு எளிதாக நோயினை ஏற்படுத்தப் போதுமானதல்ல.அது வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் , மற்றும் வேறு நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களிலேயே நோயினை ஏற்படுத்தும் .மேலும் பங்கசுக்களால் துர் நாற்றம் ஏற்படுவதுமில்லை.

துர் நாற்றம் ஏற்படுவது பாக்டீரியாக்களின் தொற்றுக்களால் ஏற்படலாம்.

எல்லாவிதமான பக்டீரியாக்களும் பூரணமாகக் குணப்படுத்தப்படலாம்.

நீங்கள் உங்கள் ஆணுறுப்பிலே காயங்கள் அல்லது தழும்புகள் மற்றும் வலி உள்ளதா என்று கூறாதபடியால் என்னால் உறுதியாக எதுவும் கூற முடியாமல் உள்ளது.

ஆனாலும் நீங்கள் மனதளவிலே இது காரணமாக உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால் உடனடியாகஒரு வைத்தியரை நாடுவது உகந்தது.
நீங்கள் நாட வேண்டியது ஒரு பொது சத்திர சிகிச்சை நிபுணரை.

அச்சப்படாமல் ஒரு வைத்தியரை நாடுங்கள்.
அப்படி உங்களுக்குத் தொற்று இருந்தாலும் சில வாரங்களிலே அவை பூரணமாகக் குணப்படுத்தப்பட்டு நீங்கள் திருமண பந்தந்தத்தில் இணைந்து கொள்ளலாம்.

கட்டாயமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் வைத்தியரிடம் செல்லுங்கள். உங்களுக்கு அப்படியான தொற்றுக்கள் இருப்பின் அவை உங்கள் துணைக்கும் தொற்றிக் கொள்ளலாம்.

கருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அறிந்து கொள்வதெப்படி?

கேள்வி

டாக்டர் எனது மனைவி நான்கு மாத கர்ப்பிணி.வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.இந்த நேரத்தில் மனைவியின் இடதுபக்க மார்பு பெரிதாக இருந்தால் ஆண் குழந்தையே பிறக்கும் என்று எனது
நண்பர் ஒருவர் சொன்னார்.அது உண்மையா?
(தமிழாக்கம்)

பதில்

ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு மார்பகங்களின் அளவும் சாதாரணமாகவே வேறுபட்டதாகவே இருக்கலாம்.அதை வைத்துக் கொண்டு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதெல்லாம் மூட நம்பிக்கை.
கர்ப்பையில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்கான ஒரே வழி ஸ்கேனிங் செய்து கொள்வதே.நீங்கள் ஒரு மாகப் பேற்று வைத்தியரிடம் சென்று ஸ்கேனிங் செய்து என்ன குழந்தை என்று உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
(நீங்கள் எந்த நாட்டில் உள்ளீர்கள் என்று சொல்லவில்லை .சில நாடுகளில் கருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று சொல்லுவது சட்டப்படி குற்றம். அவ்வாறான நாடுகளில் குழந்தை பிறக்கும் வரை
காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை)

இதயநோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா ?


கேள்வி 

எனது தோழிக்கு திருமணம் நிச்சய்க்கபட்டுள்ளது அவளுக்கு பார்த்துள்ள பய்யனுக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது அறுவை சிகிச்சை பண்ணினார்கல் இதனால் அவளது திருமண வாழ்க்கயில் எதாவது பிரச்சனை வருமா அவர் இப்பொளுது எந்த மருந்தும் எடுத்து கொள்ள வில்லை //


பதில்

இதயத்தில் ஓட்டை என்பதை வைத்துக்கொண்டு எந்தவிதமான பிரச்சினை என்று என்னால் ஊகிக்க முடியாது.ஆனாலும் சத்திரசிகிச்சை
செய்துகொண்டு இப்போது அவர் எந்த விதமான மருந்துகளும் உட்கொள்ளவில்லை என்பதை வைத்துப் பார்க்கும் போது அவருக்கு 
சிக்கல் இல்லாத ஏதோ ஒரு பிரச்சினைதான் இருக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் என் அனுமானத்தில் எதையும் கூறாமல் 
பொதுவான ஒரு கருத்தை உங்களுக்கு பதிலாக தருகிறேன்.

பிறப்பிலே ஏற்படும் ஏராளாமான இதய நோய்கள் இப்போது பூரணமாக குணப்படுத்தப்படலாம். அந்த வகையில் அந்த ஆணுக்கும் 
பூரணமாக குணமாகி இருக்கும் என்று நம்புகிறேன்.அடுத்து இந்தவகையான இதய நோய் ஆணுக்கு இருப்பதால் திருமண பந்தத்தில்
எந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பமும் இல்லை.
மாறாக பெண்ணுக்கு இதய நோய் இருந்தால்  குழந்தைப் பேற்றில் சில பிரச்ச்சினைகள் ஏற்படலாம்..அதுவும் மிகவும் அரிதானதாகவே!

உங்கள் தோழி அவரை மணம்முடித்து சந்தோசமாக இருக்கலாம் என்றே நம்புகிறேன். என்ன வகையான சத்திர சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டுள்ளது சொன்னால் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியும்.

புதிதாக திருமணம் முடித்தவர்களுக்காக

கேள்வி

Dear Sir,
வணக்கம்,
எங்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதம் ஆகிறது, அனால் குழந்தை
இல்லை எங்கலுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
எதாவது குறை இருக்குமோ என்று உள்மனம் வருத்தபடுகிறது எதாவது வழி
 இருந்தால் கூறுங்கள் ப்ளீஸ் .


என்றும் உண்மையுடன் 
//


பதில்

உங்கள் கேள்வியைக் பார்த்துவிட்டு ஒரு கணம் சிரித்தே விட்டேன். நீங்கள் திருமணம் முடித்து இரண்டே மாதங்களில்இந்தப் பயம் உங்களுக்குத்தேவையா?
நண்பரே உங்கள் மனைவியின் வயது 35 ற்கு குறைவானது என்றால் ஒரு வருடம் வரை காத்திருங்கள்.
மனைவியின் வயது 35 இற்குமேல் என்றால் ஆறு மாதமாவது காத்திருங்கள்.
இதையும் வாசியுங்கள் உதவியாக இருக்கும்.இந்தக் காலப்பகுதியில் உங்கள் மனைவி கர்ப்பமடையாமல் விடும் பட்சத்திலேயே நீங்கள் வைத்தியரின் உதவியை நாடவேண்டும்.


அதுவரை தேவை இல்லாததைச் சிந்தித்து மனசைக் குழப்பிக் கொள்ளாமல் சந்தோசமாக இருங்கள்.

கீழே உள்ள சுட்டியில் உள்ள இடுகையும் உங்களுக்கு உதவலாம்.

குழந்தை பிறக்கும் முன்பே பால் சுரக்கலாமா?

நான் எழு மாதக் கர்ப்பிணி.எனக்கு நேற்று மார்பிலிருந்து மஞ்சள் நிறத் திரவம் வெளியேறியது.இன்றும் என் உள்ளாடை நனைந்திருந்தது.
 நான் வெளிநாட்டில் கணவருடன் தனியாக இருப்பதால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.நல்லவேளையாக இன்று உங்கள்
தளத்தை பார்க்க பின் பெரிய ஆறுதலாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?இது ஏதாவது நோயின் அறிகுறியா?
(தமிழாக்கம்)

பதில்

நல்லது சகோதரி. நீங்கள் நேரு மஞ்சள் நிறத் திரவம் வெளியேறியதாக சொன்னிர்கள்.இது அனேகமாக கடுப்புப் பால் எனப்படும் colostrum  என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து இன்று வெளியேறுவது சாதாரண பாலாக இருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.எதற்கும் நீங்கள் உங்கள் மார்புகளை அழுத்தி வெளியேறுவது பால்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளியேறுவது பால்தான் என்றால் அச்சப்படத் தேவை இல்லை.குழந்தை பிறக்கும் முன்பே பால் வெளியேறுவது சாதாரண நிகழ்வாகும்.

வெளியேறுவது பால் இல்லாவிடில் அல்லது ரத்தம் கலந்திருப்பின் வைத்தியரை  நாடுவது உகந்தது.

Wednesday, November 24, 2010

பெண்கள் பக்கம் !( பெண்களுக்கோர் வேண்டுகோள்)


ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இயல்பாக ஏற்படுகின்ற மாற்றங்களான பூப்படைதில்,கர்ப்பம் , மாதவிடாய் நிறுத்தம் போன்றவை சம்பந்தமாக நிறையப் பேருக்கு நிறையச் சந்தேகங்கள் இருக்கலாம்.அவை சம்பந்தமான நிறைய மருத்துவப்பிரச்சினைகளையும் பெண்களுக்கு ஏற்படலாம்.ஆகவே இந்த நிலைமைகள் சம்பந்தமான அடிப்படை விடயங்களை ஒவ்வொரு பெண்களும் அறிந்திருப்பது அவசியமாகும்.

அந்த அறிவை வழங்கும் முகமாக பெண்கள் பக்கம் என்ற தலைப்பிலே பூப்படைவதிலிருந்து இறப்பதுவரை ஒரு பெண்ணில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எழுதலாம் என்று நினைக்கிறேன்.இந்த இடுகைகளில் உங்களின் பங்களிப்பும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் எழுதும் விடயங்கள் சம்பந்தமாக உங்கள் மனதில் ஏற்படும் மேலதிக பிரச்சனைகளை/சந்தேகங்களைத் தந்துதவினால் அவற்றிக்கு விளக்கமளிப்பதன் மூலம் இந்த முயற்ச்சியை என்னால் இன்னும் சீர்படுத்தமுடியும்

இன்று பூப்படைவது சம்பந்தமான விடயங்களோடு  இடுகையை ஆரம்பிக்கின்றேன்.....


பூப்படைதல் 

வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக் கறையை வைத்துக் கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார்களா இல்லையாஎன்பதைதீர்மானிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம்.ஒவ்வொருவரும் தன் பிள்ளை பூப்படைந்து விட்டதா என்று 12 அல்லது 13வயதில்தான் சிந்திக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலைமை அதுவல்லமுதன் முதலாய் மாதவிடாய் ஏற்படுவதல்ல பூப்படைதல்முதன் முதலாக மாதவிடாய் ஏற்படுவது மெனார்க்கே(menarche) எனப்படுகிறதுஇது பூபடைதலின் ஒரு அங்கமேஇந்த menarche எனப்படுவது நாம் அறிந்தது போல 11-12 வயதளவில் தான்ஆரம்பிக்கிறது.ஆனாலும் பூப்படைதல் என்ற செயற்பாடு பெண்களிலே 8 வயதிலேயேதொடங்கி விடுகிறது.

நாம் நம் குழந்தைகள் இன்னும் பூப்டையவில்லை என்று வைத்தியரிடம் அழைத்துச் செல்வது பெரும்பாலும் 15 வயதுக்குப் பிறகுதான்பாருங்கள் வயதில் நிகழவேண்டிய ஒரு நிகழ்வு நிகழவில்லை என்று நாம் அறிந்து கொள்வது 15 வயதில்.

இன்னும் நாம் பின்னுக்கு நிற்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும்
இல்லை.

ஆக பூப்படைதல் என்பது ஒருநாளில் நடந்து முடியும் நிகழ்வல்லஇதுபெண்களிலே 8 வயதில் தொடங்கி 14 வயதில் முடிவடையும் ஒரு நீண்டகால தொடர் நிகழ்வாகும்.

பூப்படைதல் நிகழ்வில் என்ன நடைபெறுகிறது?

பூபடைதலின் போது ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து இளமுதிர்பருவத்திற்குச் செல்கிறாள்அப்போது அவள் உடல் மற்றும் உளம்என்பவை பக்குவப்பட்ட முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாற்றப் படுகிறது.

இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்வது ஹார்மோன்களால்.

பூப்படைதல் என்ற செயற்பாடு முதலில் ஆரம்பிப்பது மார்பக வளர்ச்சியோடு.இது ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட எட்டு வயதில்ஆரம்பிக்கும்அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணில் உடல் வளர்ச்சிசடுதியாக ஏற்படத் தொடங்கும் தொடங்கும்அதைப்போல உடற்பருமனும் சற்று முதியவருக்கு உரிய வகையில் மாறும்குறிப்பாகஇடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கும்.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முதியவர்களில் காணப்படுவது போன்றமயிர் வளர்ச்சி ஏற்படும்குறிப்பாக பெண் உறுப்புக்கு மேல் , மற்றும்அக்குள் பகுதிகளிலேஆரம்பத்தில் இந்த மயிர்கள் செறிவு குறைந்ததாகமெல்லியதாக இருந்தாலும் போகப் போக முதிர் நிலையை அடையும்.

இவ்வாறு 8 வயதில் ஆரம்பிக்கும் பூப்படைதலின் முக்கிய நிகழ்வானமுதல் மாதவிடாய் பூப்படைதல் ஆரம்பித்து கிடத்தட்ட 2 வருடங்களின்பின்பே நிகழும்இந்த ஒரு தனி நிகழ்வைத்தான் நாம் பூப்படைதல் என்றுகொண்டாடுகிறோம்.

மாதவிடாய் ஏற்படுவதோடு பூப்படைதல் நின்று விடுவதில்லைநான்மேலே சொன்ன நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று பூப்படைதல்நிறைவு பெறுவது 14 வயதில்.

அனேகமாக ஆரப்பத்தில் மாதவிடாய் ஒழுங்கு அற்றதாகவே இருக்கும் .இது ஒழுங்க்காவதற்கு சில காலங்கள் செல்லாலாம்இது பற்றி பூரணஅறிவு அந்தப் பிள்ளைக்கு தெளிவு படுத்தப் படவேண்டிய ஒன்றுஇதுபெற்றோரின் கடமையாகும்.இது தவிர முதன் முதலாக அந்தப் பிள்ளை செக்ஸ் பற்றிசிந்திக்கத்தொடங்கும்சுய இன்பம் போன்ற செயற்பாடுகளும்ஆரம்பிக்கலாம்.

மேலே சொன்னது எல்லாம் வெறும் உடலியல் மாற்றங்களே . உளவியல்மாற்றங்களை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.

அடுத்த பதிவில் பூப்படைதல் சம்பந்தமான மருத்துவப் பிரச்சினைகள் ...

தொடரும் ...

.....

ஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்?

கேள்வி 

வணக்கம் டாக்டர். 
உங்கள் அறிய சேவைக்கு நன்றி.நான் திருமணம் முடித்து ஒரு வருட காலமாகிறது. எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும்.ஆனால் மனைவிக்கு அதில் இஷ்டமில்லை.
இதற்கு நான் என்ன செய்ய முடியும்.
(தமிழாக்கம்)

பதில்.

ஒரு நாளைக்கு எத்தனை தடவை உறவில் ஈடுபட வேண்டும் என்று நிர்ணயிக்கப்படவில்லை..ஒரு விஞ்ஞான ரீதியான கருத்துக் கணிப்பில் திருமனவானவர்களில் நான்கு வீதமானவர்கள் ஒவ்வொரு நாளும் 
உறவில் ஈடுபவதாக அறியப்பட்டுள்ளது.அதேபோல் அமெரிக்காவில் அவரேஜாக திருமணமாகி ஒன்றாக இருப்பவர்கள்
வருடத்திற்கு .150  முறை உறவில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது. 
இது பற்றி எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் லிங்க் ஏதாவது இருந்தால் தெரிந்த நண்பர்கள் தயவு செய்து சொல்லவும்.

நண்பரே உங்கள் கேள்விக்கு பதிலாக சொல்வது..

நாளைக்கு எத்தனை முறை உறவு கொள்ளலாம் என்பது வைத்தியர் தீர்மானிப்பதல்ல. காரணம் உங்கள் மனைவியோடுஉறவு கொள்வதென்பது சாதாரண உடற் தொழிற்பாடு..இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை.
நீங்கள் எத்தனை ,முறை உறவு கொள்ள வேண்டும் என்பது உங்கள் மனைவியோடு சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது.

ஆண்களின் உடலைப்போல அல்ல பெண்களின் உடல்..மாதவிடாய் காரணமாக அவர்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு நாளுக்கு நாள் வேறுபாடும்.இதனால் அவர்களின் உடல் நிலையம் உணர்வும் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவே  இருக்கும்.

ஆண்களில் அந்தளவுக்கு பெரிதளவான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் அவர்களால் இலகுவாகஉறவில் ஈடுபட்டு விட முடியும்.ஆனால் பெண்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை..(இருந்தாலும் விதிவிலக்கான பெண்களும் உள்ளார்கள்)

பெண்களின் இந்த உடல் நிலை/ மனநிலை மாற்றம் கடவுள்/ இயற்கையினால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட கொடையாகும்.

அதாவது எல்லாப் பெண்களுக்கும் கரு முட்டை  வெளிவரும் காலப் பகுதியில் உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.இது கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கான உடலின் மாற்றமாகும்.

அதே போல் சில நாட்களில் அவர்களின் மனநிலை உறவில் நாட்டம் குறைந்ததாக இருக்கும்.

இது பெண்ணுக்கு பெண் வேறுபடுவதால் ,கணவன் மனைவியின் சரியான புரிந்துணர்வு ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமானதாகும்.

இயற்கையாக ஏற்படும் உங்கள் மனைவியின் மன நிலை மாற்றத்தை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்குரிய மரியாதை கொடுத்து சில நாட்களுக்கு  உங்கள் உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.அதுவே ஒரு கணவனின் கடமையுமாகும்.
..
அவ்வாறு இல்லாமல் உங்கள் ஆசையை  ஒவ்வொரு நாளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உணர்வுகளை உங்கள் மனைவி மேல் திணித்தால் அது சட்டப்படி கூட கற்பழிப்புக்குஒப்பானது..
ஏனென்றால் சில நாடுகளில் மனைவியானாலும் சம்மதம்  இல்லாமல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு ஒப்பான குற்றமாகவே கருதப்படும்.

Tuesday, November 23, 2010

உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி ?

ஒவ்வொருவருக்கும் தன் குழந்தையின் உருவம் / அழகு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.உயரக் குறைவு நிறையப் பேரின் மனத் தாழ்வுக்கு காரணமாக இருக்கிறது.உயரம் என்பது தனியே உண்கின்ற உணவினால் மட்டும் தீர்மானிக்கப் படுவதில்லை.

உயரத்திற்கான பிறப்புரிமைக் காரணியே(genetic factor) ஒருவர் இறுதியில் எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிப்பார் என்று தீர்மானிக்கிறது. இதுGrowth potential எனப்படுகிறது. இவ்வாறு பிறப்புரிமைக் காரணியால் தீர்மானிக்கப்பட்ட உயரத்தை விடஅதிகமாக  நாம் எவ்வளவுதான் உணவை உட்கொண்டாலும் நம்மால்  வளர முடியாது.

ஆனால் வளர்ச்சிக் காலத்தில் தேவையான அளவு உணவு வழங்கப் படாவிடால் பிறப்புரிமைக்  காரணியால் தீர்மானிக்கப்பட்ட உயரத்தை ஒருவர்  அடையாமலேயே அவருடைய வளர்ச்சி முற்றுப் பெற்று விடலாம்.

இதே போல் குழந்தைகளுக்கு சிறுவயதிலே கட்டுப்படுத்தப் படாத தொடர்ச்சியான நோய்கள் (ஆஸ்த்மா /நீரழிவு)போன்றவை ஏற்பட்டாலும் அவர்களால் அவர்களின் உச்சகட்ட க் உயரத்தை அடைய முடியாமல் போகும்.
அதேபோல் சிறு வயதில் மன உளைச்சலுக்கு உட்பட்டு வாழும் குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.இது தவீர நேரடியாகவே ஒருவரின் வளர்ச்சியைத் தடுக்கும் நோய்கள் இருக்கின்றன.

ஒருவரின் உயரத்திற்கான பிறப்புரிமைக் காரணியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தந்தையரின் உயரம். பிறப்பிலே உயரம் குறைந்த தாய் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளும்உயரம் குறைவாக இருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரும் என்று அறிய ஆவலாக இருக்கும்.

அதற்காக இந்தச் சுட்டியில் சென்று அங்கே உள்ள கணிப்பானில் உங்கள் உயங்களைக் கொடுப்பதன் மூலம்அறிந்து கொள்ளுங்கள்.அதிலே உங்கள் குழந்தை  வளரக் கூடிய சாத்தியமான உயரமே கிடைக்கும்..உங்கள் குழந்தைக்குரிய சூழல்,உணவு,மருத்துவ வசதிகளைப் பொறுத்தே அந்த உயரத்தை அடையுமா என்பது தீர்மானிக்கப்படும் .

உங்கள் சந்தேகங்களை முன் வையுங்கள் .