Monday, August 23, 2010

குழந்தையின்மை

கேள்வி 

(என்னுடைய பெயர் மற்றும் எனது தகவல்கள் எதுவும் வெளியிடவேண்டாம்)

அன்பின் நண்பரே குழந்தையின்மை பெரும் பிரச்சினை என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை உங்களின் மருத்துவ அனுபவத்தில் நீங்கள் நிறைய கண்டிருக்க கூடும் எனது மனைவியின் சகோதரிக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது இது வரை அவர்களுக்கு குழந்தையில்லை மருத்துவ சோதனையில் பெண்ணிற்கு கருப்பையில் கட்டி உள்ளதென்று தெரிவித்தார்கள் மருத்துவர்கள் ஒரு ஆண்டிற்கு முன்பு அவருக்கு அந்த கட்டியும் நீக்கப்பட்ட்டு விட்டது அவரின் வயதோ 30 ஆகிறது உடல் பருமணானவர் மேலும் அவருக்கு மாதவிலக்கும் சீராக நடப்பதில்லை (மாதவிலக்கு ஐந்து மாதங்கள் கூட ஆகிறதாம்) இனி இவர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ முறைகளை மேற்கொள்ள சொல்லாலாம் எந்த மாதிரியான உணவு பழக்கங்கள் நல்லது இந்த விஷயத்தை பொருத்தவரை இருவருக்குமான (ஆணிற்கும் , பெண்ணிற்கும்) பிரச்சினைகள் மற்றும் உடலுறவு மேற்கொள்ள வேண்டிய முறைகள், நாட்கள், படுக்கையில் பின்பற்றவேண்டியவை , ஆணின் அனுவின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை தெளிவுபடுத்தினால் இவர்களை போன்ற நிறைய நபர்களுக்கு இது உதவியாக இருக்கும்



வாழ்க வளமுடன்//


பதில் 

நல்லது நண்பரே! நீங்கள் குறிப்பிட்ட பெண் உடற் பருமனானவர் ,ஒழுங்காக மாதவிடாய் ஏற்பட்டதவர் மற்றும் திருமணமாகி எட்டு மாதமாகியும் குழந்தை இல்லாதவர் என்பதை வைத்துப் பார்த்தால் அவருக்கு சூலகத்தில் நீர்க்கட்டிகள் சேர்ந்திருக்கும் polycystic ovarian syndrom  என்ற நோய் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.அந்த நோய் பற்றி இந்த இடுகையில் வாசிக்கவும்.

அந்தப் பெண் சரியான உடற்பயிற்சி மூலமும் உணவுப் பழக்க வழக்கம் மூலமும் உடல் நிறையைக் குறைப்பது அவசியம்.அதன் மூலம் குழந்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் சற்று அதிகரிக்கும்.

மேலும் அந்தப் பெண்ணின் சீனியின் அளவு (ரத்தத்தில்) அளக்கப் பட வேண்டும். ஏனென்றால் அவருக்கு நீரழிவு நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

அடுத்தபடியாக அவருக்கு அந்த நோய் உள்ளது என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள பெண்ணியல் நோய் நிபுணர் ஒருவரை உடனடியாகச் சந்தியுங்கள்.
உறுதி செய்த பின் அவருக்கு சூழ் ( முட்டை) உருவாக்கத்தை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்படுவதன் மூலம் குழந்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.

அடுத்த கட்டமாக லப்பிராஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை மூலம் அந்த நீர்க்கட்டிகளை உடைத்து விடலாம்.

மேலும் அந்தப் பெண்ணுக்கு மெற்போமின் எனப்படும் மாத்திரையும் கொடுக்கப் படலாம்.

இவை அனைத்துக்கு நீங்கள் நம்பகமான ஒரு பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணரைச் சந்திப்பது அவசியம். 

2 comments:

நிலவகன் said...

good post

ராஜவம்சம் said...

அந்த நோய் பற்றி இந்த இடுகையில் வாசிக்கவும்.//

நன்றி ஐயா லிங்க் கொடுக்கும் போது மறகாமல் எழுத்தின் வண்னத்தை மாற்றவும்.