Sunday, August 15, 2010

மார்பகங்கள் பற்றிய இரண்டு பொதுவான சந்தேகங்கள்!


கேள்வி 

வணக்கம் துமிழ் சார்,
எனது வயது 22 எனது மார்பகங்கள் மற்றைய பெண்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் எனது ஒரு மார்பகம் மர்ரயதொடு ஒப்பிடும் போது சியதாகவும் உள்ளது . இதனால் எனக்கு பிற்காலத்தில் குழந்தை பெறுவதில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா?

இப்படிக்கு,
.............................


பதில்

நல்லது தோழி இந்த சந்தேகங்கள் உங்களுக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கும் ஏற்படும் சந்தேகம்தான். 
முதலாவதாக மார்பகங்களின் அளவு என்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுவது. ஒருவரின் உயரம் இன்னொருவரில் இருந்து வேறுபடுவதைப்போல் மார்பகங்களின் அளவும் வேறுபடுவது சாதாரண இயல்பாகும். அதேபோல் ஒரு பெண்ணின் இரண்டு மார்பகங்களும் ஒன்றின் அளவில் இருந்து இன்னொன்று வேறுபடுவதும் சாதாரணமானதே இதனாலும் எந்தப் பாதிப்பும் இல்லை.

அடுத்ததாக குழந்தை பெறுவது பற்றி கேட்டு இருந்தீர்கள் குழந்தை பெறுவதற்கும் மார்பகங்களின் அளவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நீங்கள் பிரசவம் அடையும் போது உங்கள் உடல் உங்கள் மார்பகங்களை பால் ஊட்டுவதற்காக தயார்படுத்திக் கொள்ளும்.அதனால் தாய்ப் பால் ஊட்டுவதிலும் மார்பகங்களின் அளவு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் 

2 comments:

Anonymous said...

arumaiyana pathivu.
valthukal.
www.thambi.tk

push said...

thank for information