Sunday, August 8, 2010

உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னியா?பொது இடங்களில் இந்த இடுகையை வாசிப்பதை தவிர்ப்பது நல்லது

ஒரு பெண் முதன் முதலில் உடலுறவில் ஈடுபடும்போது இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விடயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் பயன்படுத்துகிறது.


நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனித்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறு நீர் துவாரம்( urethral opening). மற்றது மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் துவாரம்vaginal opening).
இரண்டாவதாக உள்ள மாதவிடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் ஹைமன்  (hymen)எனப்படும் ஒரு மென்சவ்வினால் சூழப் பட்டிருக்கும். அந்த மென்சவ்வின் நடுவிலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும்.
முதன் முதலில் உடலுறவில் ஈடு படும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தப் போக்கு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை.

சில பெண்களுக்கு இந்த ஹைமன்  இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம்
சில பெண்களுக்கு இந்த ஹைமன்  உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் உடைந்து போகலாம்.அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங் ,போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த கைமண் பாதிக்கப் படலாம்.

சுய இன்ப செயற்பாட்டில் ஈடு படும் பெண்களிலும் இந்த ஹைமன்  உடைந்து விடலாம்.

சில பெண்களிலே இந்த ஹைமன் இளாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் கைமண் அப்படியே பாதிக்கப் படாமல் இருக்கலாம்.

ஆகவே ஹைமன்  மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபித்து விட முடியாது. 

பி.கு- பல நண்பர்கள் கேட்ட சந்தேகங்களுக்குப் பதிலாக இந்த இடுகையை மீள் பதிவிடுகிறேன். அந்தரங்கம் கருதி அவர்களின் பெயர் வெளியிடப்படவில்லை. 

9 comments:

ராஜவம்சம் said...

+1

ம.தி.சுதா said...

ஆமாம் உண்மை தான் ஆனால் இப்போதும் நம் கிழடுகள் வெண்துணியுடன் அலைகிறார்களே

Anonymous said...

CLICK AND READ

திருமணத்துக்கு முன் மனைவி கன்னியா? சோதிக்க??

ஜீவன்பென்னி said...

இந்த விசயத்த எனக்கு 12 ஆம் வகுப்பிலேயே சொல்லித்தந்த எங்க ஆசிரியருக்கு நன்றி சொல்லிக்கிறேன். மற்றொரு விசயம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் உயிரியல் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மனித உடலின் செயல்பாடுகளை பற்றி அறிந்து கொள்ள சிறிய வாய்ப்பாவது இருக்கின்றது. ஆனால் மற்ற துறை மாணவர்கள் அவர்களுக்கு இதைப்பற்றிய போதுமான அதாவது தன் உடலைப்பற்றிய அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பே இல்லை. இதனால்தான் பாலியல் கல்வி அவசியமான ஒன்றுன்னு தோனுது.

தோழி said...

உபயோகமான பதிவு .


http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_05.html

Anonymous said...

@ம.தி.சுதா
நீங்களுமா?

விக்கி உலகம் said...

இந்த விஷயத்த old is gold ன்னு சொல்லிக்கிற பெரியவங்க புரிஞ்சிகிட்டா சரி.

ம.தி.சுதா said...

Anonymous said...
@ம.தி.சுதா
நீங்களுமா?

ஆமாங்கோ.... என் கற்கையுடன் சம்மந்தப்பட்டது அத்துடன் சமூகத்திற்கு முக்கியமானதும்.... தான் இந்தப் பிரச்சனை...

Anonymous said...

"Anonymous said...CLICK AND READ திருமணத்துக்கு முன் மனைவி கன்னியா? சோதிக்க??"

Hello Anonymous do not speak about other religion if you do not fully understand it. Bible is not written by Jesus, it has a collection of history happened in different times, the age of old testament is unknown, the bible words you quote from old testament are portraying the age-old-practice of different sects in different period of time, Jesus opposed many of these old practices "when a mob was stoning a prostitute for her act Jesus condemned the mob and said if anyone who is not guilty stone her first, but mob dispersed because everyone was guilty in some way" like this through out new testament Jesus protested many evil practices. so do not interpret bible by talking bits and pieces of it -Nithy