Wednesday, August 18, 2010

குழந்தை குப்புற படுப்பது இயல்பா?

கேள்வி 




அன்பின் நண்பருக்கு நலம், நலமறிய ஆவல் 

என்னைப்பற்றி அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன் அதனால் நேரடியாக விஷயத்துக்குள் வந்துவிடுகிறேன் எனது மகன் பிறந்து  தற்போது சரியாக 207 நாட்கள் ஆகிறது எனது மகன் நன்றாக இருக்கிறான் அவன் உறங்கும் நேரங்களில் எப்போதும் குப்புற படுப்பதேயே விரும்புகிறான் நாம் அவனை திருப்பு மலர்ந்து படுக்க வைத்தாலும் அவன் மீண்டும் குப்புறவே படுக்கிறான் நாம் சிறிது நேரம் குப்புறபடுத்தாலே நமக்கு வலிக்கிறது அதுபோல அவனுக்கும் வலிக்குமே என்கிற கவலை மேலும் சாதரணமாக குழந்தைகள் குப்புறபடுப்பதை கண்டதில்லை இதனால் பயமும் கவலையும் ஒன்று சேர்கிறது நண்பரே அவசியம் பதில் அளிக்கவும் மேலும் குழந்தைகளுக்கான உணவுமுறை வளர்ப்பு முறை பற்றியும் எழுதுங்களேன்.

தயவு செய்து சிரமம் பார்க்காமல் பதில் அளிக்கவும். தங்களின் பதில் எதிர்பாத்து



வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர் 



பதில்
 
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சரியான படுக்கை முறை மல்லாக்கப் படுத்தாலே, அதாவது வயிற்றுப் பகுதி மேல் நோக்கியவாறு படுத்தாலே. உங்கள் குழந்தை குப்புறப் படுப்பதாக சொல்கிறீர்கள். 
அதற்கு மருத்துவ ரீதியாக எதுவும் செய்ய முடியாது. 
குழந்தை குப்புறப் படுக்கும் நேரங்களில் , குழந்தை தூங்கிய பின்பு அவனை மல்லாக்கப் படுக்க விடுங்கள்.
இவ்வாறு அவன் குப்புறப் படுக்கும் ஒவ்வொரு முறையும் செய்வதால் அவன் நாளடைவில் பழகிவிடுவான்.

இது தவிர மருத்துவ ரீதியாக அதற்காக எதுவும் செய்ய முடியாது.

குழந்தை வளர்ப்புப் பற்றி தொடர்ந்து வரும் இடுகைகளில் எழுதுகிறேன்.

1 comment:

ஜிஎஸ்ஆர் said...

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நண்பரே இனி தங்களின் ஆலோசனைபடியே அவன் குப்புற படுத்தால் உடனேயே மல்லாக்க படுக்க வைத்து விடுகிறோம் தங்களின் விரைவான பதிலுக்கு மீண்டும் நன்றி.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்