Friday, November 6, 2009

Polycystic ovaian syndrom-சூலக நீர்க் கட்டிகள்



PCOS என்றால் என்ன?

ஓவரி(OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட்டைகளை உருவாக்கி அந்த முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவாகின்றன.
cyst எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள் , poly என்பது பல என்பதைக் குறிக்கும்.

ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாக்கமே poly cystic ovarian syndrom எனப்படுகிறது.

இந்த நோயானது பெண்களிலே பொதுவான ஒரு நோயாகும். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் அது எல்லா பெண்களிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.


இந்த திரவக் கட்டிகளை கொண்ட சூலகங்கள் அசாதாரணமாக ஹோர்மொன்களை சுரப்பதன் மூலமே ஒரு பெண்ணுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள் எவை?

1.அளவுக்கதிகமான பரு( முகப் பரு)

2.உடற் பருமன் அதிகரித்தல்.

3.அசாதாரண இடங்களிலே பெண்களுக்கு மயிர் வளர்தல், அதாவது முகம் , மார்பு, தொடை போன்ற இடங்களில் மயிர் வளர்தல்.

4.ஒழுங்கற்ற மாதவிடாய்

5.மலட்டுத் தன்மையை ஏற்படுத்தல்.

இவை எல்லாம் , எல்லா பாதிக்கப் பட்ட பெண்களிலேயும் இருக்கும் என்றில்லை. intha நோய் இருக்கும் போதே பல பிள்ளைகளைப் பெற்று வாழ்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட பதினைந்து பெண்களுக்கு ஒரு பெண் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவளாக இருக்கிறார்கள்.

மற்றும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சீனியைக் கட்டுப் படுத்தும் இன்சுலின் என்ற ஹோர்மொனின் திறன் குறைவதால் அவர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப் படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

இப்போது இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக நிறைய மருத்துவ வசதிகள் வந்து விட்டன. அதிலும் எவ்வளவு விரைவாக மருந்து ஆரம்பிக்கப் படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் பின் விளைவுகள் தீர்மானிக்கப் படுகின்றன.

ஆகவே , கன்னிப் பெண்களே உங்களுக்கு கீழே உள்ள ஏதாவது ஒரு பிரச்சினை இருந்தால் வைத்தியரை நாடி ஆலோசனை பெறுங்கள்....

1. 14 வயதாகியும் மாதவிடாய் ஆரம்பிக்காவிட்டால்.

2.மார்பு , முகம் போன்ற இடங்களிலே மயிர் வளர்ந்தால்.

3. ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய்கள்தான் ஏற்படுகிறது என்றால்.

4.அளவுக்கு அதிகமான கட்டுப் படுத்த முடியாத முகப் பரு ஏற்பட்டால்.

5.உங்கள் கழுத்து மற்றும் கமக்கட்டுப் பகுதிகளிலே கறுப்புப் படிவுகள் காணப்பட்டால்.

6.அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல் , அதிக பசி போன்ற நீரழிவு நோய்க்கான குணங்குறிகள் ஏற்பட்டால்.

7.உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்.





2 comments:

Muruganandan M.K. said...

சுருக்கமாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஜிஎஸ்ஆர் said...

இதன் சார்ந்த பிரச்சினைகளை பற்றியும் எழுதியிருக்கலாம்