Wednesday, August 11, 2010

மருத்துவச் சந்தேகமும் பதிலும்- விதைப்பை

கேள்வி!

தங்களின் சேவைக்கு எனது பணிவான வணக்கங்கள். எனது கேள்வி என்னவென்றால் எல்லோருக்கும் விதைப்பையில் 2 விதைகள் இருக்கும் ஆனால் எனக்கு மூன்று விதைகள் காணப்படுகின்றன. மூன்றாவது விதை சிறிதாக காணப்படுகின்றது. எனக்கு சுய இன்பம் காணும் பழக்கமும் உள்ளது. அடுத்த வருடம் எனக்கு திருமணம் நடக்கவுள்ளதால் இதனால் ஏதும் பிரச்சனைகள் வருமா? என்னுடைய வயது. 28

நன்றி
//

பதில்!

மூன்று விதைகள்  இருப்பதை எப்படிக் கண்டு கொண்டீர்கள் என்று தெரியவில்லை. அவை மூன்றும் விதைகள் என்பதை எப்படி உறுதிப் படுத்திக் கொண்டீர்கள். 
நான் நினைப்பது என்னவென்றால் அது வேறு ஏதாவது கட்டியாகவும் இருக்கலாம். கட்டி என்றவுடன் புற்று நோய் என்று நினைக்க வேண்டாம். சில நீர்க் கட்டிகள் கூட விதைப்பையினும் ஏற்படலாம். ஆகவே முதலில் ஒரு பொது சத்திர சிகிச்சை நிபுணரைச் சந்தித்து அது என்ன கட்டி என்று சோதித்துக் கொள்ளவும்.


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com  என்ற முகவரிக்கு அனுப்பவு

No comments: