Saturday, August 28, 2010

உடலுறவில் ஈடுபட பொருத்தமான வயது?

கேள்வி 

நல்ல பல தகவல்களை சொல்கிறீர்கள். எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் என்றும் எத்தனை வயதுவரை நாம் உறவில் ஈடுபட முடியும் தயவு செய்து விளக்கினால் நிறையப் பேரின் சந்தேகம் தீரும்.

பதில்

எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுதலுக்கும் தயாராகத் தொடங்குகிறது.
எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறவில்  ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம்.

ஆனால் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம்.
அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

ஆகவே திருமணம்யாகியிருந்தாலும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை.
எத்தனை வயதுவரை உங்களால் முடியுமோ அத்தனை வயதுவரை நீங்கள் உறவில் ஈடுபடமுடியும்.

ஆனாலும் இள வயதுப் பெண்களைப் போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சினைகள் அவர்களுக்கு உருவாகலாம்.
ஆகவே தங்கள் குடும்பத்திற்குரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடும்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது   அவசியமாகும்


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

3 comments:

என்னது நானு யாரா? said...

உடலுறவு பற்றிய சந்தேகங்களை களைவது, உலக மக்கள் சேவைகளில் ஒன்று!

அந்த சேவையினை நன்றாகவே நீங்கள் செய்கின்றீர்கள்!

இயற்கை மருத்துவ தகவல்கள் வேண்டுவோர் என்னுடைய பதிவினை பார்க்க அழைக்கின்றேன். என் வலைபக்கத்தின் முகவர் http://uravukaaran.blogspot.com

நன்றி நண்பரே! தொடரட்டும் உங்களின் அருமையான் சேவை

Anonymous said...

டாக்டர்,

உடலுறவு முடிந்தவுடன் பெண், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்ய சென்றுவிடலாமா?

அல்லது
15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா?
உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமே?
ஆதலால், கர்ப்பம்தரிக்க தடைபடுமே?

தெளிவுபடுத்துங்கள்.

சண்முககுமார் said...

very useful thakyou.