Tuesday, August 24, 2010

குழந்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது செய்யவேண்டியவை!
1.குழந்தைக்கு போதியளவு நீராகாரம் அருந்தக் கொடுங்கள்.
2.அதிகளவான காய்ச்சல் இருக்குமானால் அக்குள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் ஈரத் துணியினால் ஒத்தடம் பிடித்து விடுங்கள்
3.பரசிட்டமோல் மாத்திரையை / பாணி மருந்தை குழந்தையின் நிறைக்கு ஏற்ற அளவில் கொடுக்கவும்
   ( அளவுக்கதிகமாக கொடுக்கப்பட்டால் பரசிட்டமோல் மருந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் )

பரசிட்டமோல் எந்த அளவிலே கொடுக்கப்படலாம்?
பரசிட்டமோல் மருந்தானது ஒரு கிலோ உடல் நிறைக்கு 15mg பரசிட்டமோல் என்ற அளவிலே கொடுக்கப்படலாம்.என்ற அளவிலே கொடுக்கப்படலாம்.அதாவது குழந்தையின் நிறைக்கேற்ப கொடுக்கப்படவேண்டிய பரசிட்டமோல் மருந்தின் அளவும் வேறுபாடும்.பாணி மருந்து கொடுக்கப்படும் போது கீழே உள்ள அளவுகளில் கொடுக்கப்படலாம்.


உடல்நிறை                         கொடுக்கப்பட வேண்டிய பனடோல்(பரசிட்டமோல்)
                                                  பாணியின் அளவு
 9.5 – 12 kg                                   6-7.5 ml
 12 – 14 kg                                     7.5 – 9 ml
 14 – 16 kg                                     9 – 10 ml
 16 – 17.5 kg                                  10 – 11 ml
 17.5 – 19.5 kg                                11 – 12 ml

காய்ச்சல் ஏற்பட்ட குழந்தையை எப்போது வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்?
1.குழந்தையின் அன்றாட வாழ்க்கையினைப் பாதிக்காத சாதுவான காய்ச்சல் என்றால் இரண்டு நாட்கள் வீட்டிலேயே வைத்து   பரசிட்டமோல் மருந்துடன் கவனிக்கலாம்.
2.இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமானால் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
3.கீழே உள்ள அறிகுறிகள் ஏதாவது இருக்கும் பட்ச்சத்தில் குழந்தையை முதல் நாளே வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்

அன்றாடச் செயற்பாடுகளில் ஈடுபடாமல் முடங்கிக் கிடக்கும் குழந்தைகள்
வழமைக்கு மாறாக அதிகரித்த அழுகை மற்றும் சாப்பாட்டைத் தவிர்க்கும் குழந்தைகள்
அதிகரித்த வாந்தி, தலையிடி, உடம்பு வலி போன்றவற்றைக் கொண்ட குழந்தைகள்
காய்ச்சல் ஏற்பட்டபின் வலிப்பு ஏற்பட்ட குழந்தைகள்
இருமலோடு மஞ்சள் நிற சளியினை கொண்டிருக்கும் குழந்தைகள்
காய்ச்சலோடு வயிற்று வலி ஏற்படும் குழந்தைகள்

4 comments:

ஜிஎஸ்ஆர் said...

நன்றி நண்பரே அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விஷயம் நான் இதை பிரிண்ட் எடுத்து வைத்துவிட்டேன்

ராஜவம்சம் said...

நன்றி +1

துமிழ் said...

thanks

G.S.R
ராஜவம்சம்

துமிழ் said...

thanks

G.S.R
ராஜவம்சம்