Friday, August 13, 2010

நீரழிவு நோயும் குழந்தைப் பேறும்

கேள்வி 


வணக்கம் ஐயா, 


எனக்கு 42 வயது எனது மனைவிக்கு 33.எங்களுக்கு ஒரு குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் இருக்கின்றது .நாங்கள் இன்னுமொரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப் படுகின்றோம்.ஆனால் பிரச்சினை என்னவென்றால் எனக்கு ஒரு வருடமாக நீரழிவு நோய் உள்ளது. நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று சொல்கிறார்கள். இதனால் குழந்தை பெற்றுக் கொள்ள மிகவும் அச்சமாக இருக்கிறது.தயவு செய்து விளக்கம் தந்து உதவவும்

கணேஷன் 

பதில்

நீரழிவு நோய் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்கும் போது குறைபாடுகள் ஏற்படும் என்பது உண்மைதான். அவர்களிலும் சீனியின் அளவைக் கட்டுப் பாடாக வைப்பதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம்.

ஆனால்ஆண்களில் நீரழிவு இருக்கும் போது அதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பம் இல்லை.

அதாவது உங்கள் மனைவிக்கு நீரழிவு இருந்தாலே உங்கள் குழந்தை பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.உங்களுக்கு நீரழிவு உள்ளதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

பயப்படாமல் விரைவாக குழதையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com  என்ற முகவரிக்கு அனுப்பவு ம்

1 comment:

Anonymous said...

முதலில் நீர் ஒரு டாக்டரா? அவர் கேட்ட கேல்வியை சரியாக புரிந்து கொள்ளூம். பிரகு மகப்பேறூ டாக்டரிடம் இந்த கேள்வியை கேளூங்கள் அவர் பதிலை கேட்டு பிரகு பதிலலியுங்கல்