Sunday, March 28, 2010

குழந்தை பிறக்கும் திகதியை நீங்களாகவே கணித்துக் கொள்ளுங்கள்!

(மீள் பதிவு )

ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் , எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள்.

மருத்துவர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்?

இதில் எந்த தந்திரமும் இல்லை மந்திரமும் இல்லை. நீங்களும் இலகுவாக கணித்துவிடலாம்.
முதலில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட திகதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த திகதியோடு ஒன்பது மாதங்களையும் ஏழு நாட்களையும் கூட்டி விடுங்கள். அதுதான் உங்கள் குழந்தை பிறக்கும் நாளாகும்.
உதாரணத்திற்கு உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது ஜனவரி மாதம் முதலாம் திகதி என்றால் , முதலாம் மாதத்தோடு ஒன்பது மாதங்களைக் கூட்டுங்கள், பின்பு முதலாம் திகதியோடு ஏழைக்கூட்டுங்கள்.

உங்கள் கடைசி மாதவிடாய் திகதி - 01 / 01/ 2009
நீங்கள் கூட்ட வேண்டியது - 07/09/....

குழந்தை பிறக்கும் அனுமானித்த திகதி -08/10/2009

இந்த திகதியானது வெறுமனே ஒரு அனுமானித்த திகதிதான் , சரியாக இந்த திகதியில்தான் குழந்தை பிறக்கும் என்றில்லை சில நாட்கள் முந்தள்ளியோ பின் தள்ளியோ போகலாம். ஆனாலும் இந்த திகதியை அடிப்படையாக வைத்தே அந்த கர்ப்பிணிக்கான மருத்துவ முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

இப்படிக் கணிப்பது கூட கஷ்டம் என்பவர்கள் சும்மா ஜாலியா கீழே உள்ள லிங்கிலே போய் உங்களின் மாதவிடாய் திகதியை கொடுத்துவிடுங்கள் அங்கே உள்ள கணிப்பான் உங்கள் திகதியை கணித்துச் சொல்லி விடும்.
http://www.bestinfosite.com/edd.asp


பி.கு- தொடர்ச்சியாக கர்ப்பிணி மருத்துவம் என்ற லேபிலிலே கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்பந்தமான அடிப்படை கருத்துக்களை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ஆக்க பூர்வமான சந்தேகங்களையும் முன்வையுங்கள் பதிவிட்டு தீர்த்து வைக்கிறேன்.


2 comments:

யாசவி said...

Hi,

This is just an info sharing when I discuss with my friends.

What are the methods to choose the gender of baby.

He said

1. Desemination

2. Traditional chinese treatment.

Is there any natural way? By indian style?

This is for those people in Singapore they like to have Female baby than male.

நாட்டாமை said...

பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய உதவும் அறிவியல் தொடர்.
http://chandroosblog.blogspot.com/2011/03/12.html