Monday, March 15, 2010

முந்தி விந்து வெளிப்படுதல் (premature ejaculation)

தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம் ஆகிவிடுகின்றது.

தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் ஆண்களை மனசங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையே Premature Ejaculatin எனப்படுகிறது. தமிழிலிலே சொல்வதானால் தம்பதிகள் உண்மையான திருப்தி நிலையை அடைய முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து , சுக்கிலப்பாயத்தை வெளியேற்றி விடுதல்.

இவ்வாறு பெண் உச்ச நிலை அடைய முன்பே ஆண் உச்ச நிலை அடைவது , பெண்ணுக்கு போதிய திருப்தியை அளிக்காமல் சங்கடப்படுத்துவதுடன், ஆணின் மனதிலும் தன்னால் துணையை சந்தோசப் படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மனநிலையை உருவாக்கி விடுகிறது. இதுவே அவர்களின் இல்லறத்தின் முறிவுக்கு முதல் படிநிலையாக அமைந்து விடலாம்.

உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையா?

இல்லை
இந்த முந்தி விந்து வெளிப்படும் நிகழ்வானது ஆண்களினிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும். நூறு ஆண்களை எடுத்துக் கொண்டால் முப்பது பேர் இந்தப் பிரச்சினையைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

என்ன காரணத்தால் இது ஏற்படுகிறது?

இது உடல் ரீதியாக உள்ள எந்தப் பிரச்சினையாலும் ஏற்படுவதில்லை. முற்று முழுதாக மனம் சம்பந்தப்பட்டதாகும். ஆணிலே ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது.

இதனாலேயே உறவில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப் படுகின்றார்கள். இருந்தாலும் சற்று நாள் செல்ல அநேகமான ஆண்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட ,சற்று தாழ்வு மனநிலை கொண்டவர்கள் தொடர்ந்தும் இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவே இறுந்து விடுகிறார்கள்.

சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?

இல்லை
சுய இன்பத்தில் சுய இந்த நிலை உருவாகலாம் என்று ஒரு பிழையான கருத்தை நம்பும் ஆண்கள் ,தாங்கள் சிறுவயதில சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி அதனால் தங்களால் தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு?

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை.

முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே புணர்ச்சியை நோக்கி செல்லாமல் அதற்கு முந்திய Foreplay எனப்படும் தொடுகை செய்கைகள் மூலம் உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ளவேண்டு. இதன் போது ஆணுறுப்பிலே தொடுகை ஏற்படுவதை இறுதிவரை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சிய நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி(relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

அடுத்தததாக புணர்ச்சியில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது அந்த ஆணோ அல்லது அவனது துணையோ ஆண்குறியின் முனைப் பகுதியை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும். மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட்டு உச்சநிலை நெருங்கி வரும்போது மீண்டும் முனைப்பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
இதற்கு பெண்ணின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை.

இவ்வாறான செயல்கள் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் பாலியல் மனநல வைத்தியர் ஒருவரை நாடி sextherapy ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும்.

இது தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக இருக்குமானால் தகுந்த வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகள் பாவிக்கப் படலாம்.
23 comments:

ஜகதீஸ்வரன் said...

ஏதோ கிளினிக்கிற்கு வந்து மருத்துவரை சந்தித்தது போல இருக்கின்றது.

வாழ்த்துகள்...

sagotharan.wordpress.com

Giri said...

இதில் விஷயம் என்னவென்றால், இது பற்றி எல்லோரும் பொதுவாக நன்றாகவே சுமாராக (!) தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும்....
எப்படியோ...தெளிவாக இந்தப் பதிவை எழுதிய உங்களுக்கு....ஒரு ஓஹோ....!!!

Anonymous said...

இந்த பிரச்சனையை தீர்க்க எளிய முறை:

பெரும்பாலும் உறவு கொள்ளும் போது விந்து 3 அல்லது 4 நிமிடத்தில் வெளிபடும். விந்து வெளிப்பட்டவுடன் சோர்ந்து விடாதீர்கள். நீங்கள் முயற்சி செய்து, அடுத்த 5 நிமிடத்தில் நீங்கள் உறவு கொள்ள தயார் ஆகலாம். இரண்டாவது முறை செய்யும் போது விந்து 10 நிமிடத்திற்கு பிறகுதான் வரும். மீன், முந்திரி போன்ற உணவு வகைகள் உங்களுக்கு உதவும்.

சரவணன் said...

உங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை. இவ்வளவு நாளாக இந்த blog-ய் மிஸ் செய்துவிட்டோமே என்று தோன்றும் விதமான அருமையான பதிவுகள். உங்கள் பணி தொடரட்டும். நன்றி

vjvrk said...

best

துமிழ் said...

ஜகதீஸ்வரன் said...

ஏதோ கிளினிக்கிற்கு வந்து மருத்துவரை சந்தித்தது போல இருக்கின்றது.

வாழ்த்துகள்...//

நன்றி நண்பரே !

துமிழ் said...

Giri said...

இதில் விஷயம் என்னவென்றால், இது பற்றி எல்லோரும் பொதுவாக நன்றாகவே சுமாராக (!) தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும்....
எப்படியோ...தெளிவாக இந்தப் பதிவை எழுதிய உங்களுக்கு....ஒரு ஓஹோ....!!!//


முந்திய ஒரு பதிவின் பின்னூட்டத்தில் ஒரு நண்பர் கேட்டதற்கு இணங்கவே இந்தப் பதிவை இட்டேன்..

துமிழ் said...

Anonymous said...

இந்த பிரச்சனையை தீர்க்க எளிய முறை:

பெரும்பாலும் உறவு கொள்ளும் போது விந்து 3 அல்லது 4 நிமிடத்தில் வெளிபடும். விந்து வெளிப்பட்டவுடன் சோர்ந்து விடாதீர்கள். நீங்கள் முயற்சி செய்து, அடுத்த 5 நிமிடத்தில் நீங்கள் உறவு கொள்ள தயார் ஆகலாம். இரண்டாவது முறை செய்யும் போது விந்து 10 நிமிடத்திற்கு பிறகுதான் வரும். மீன், முந்திரி போன்ற உணவு வகைகள் உங்களுக்கு உதவும்.//


மன்னிக்கவும் எனக்குத் தெரிந்த வரையில் இந்த மீன் முந்திரி வகைகள் எப்படி உதுகிறது என்று எந்த விஞ்ஞான பூர்வமான தகவலும் இல்லை...

துமிழ் said...

சரவணன் said...

உங்கள் பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை. இவ்வளவு நாளாக இந்த blog-ய் மிஸ் செய்துவிட்டோமே என்று தோன்றும் விதமான அருமையான பதிவுகள். உங்கள் பணி தொடரட்டும். நன்றி//


நன்றி நண்பரே !உங்கள் ஊக்கம் நிச்சயம் தேவை

துமிழ் said...

vjvrk said...

best//

thanks

Anonymous said...

Pearly penile papules பற்றி விவரமாக சொல்லவும் மற்றும் treatment முறை...

Sathiya said...

thanks

Anonymous said...

நன்றி நண்பரே.. எனக்கு சில கேள்விகள் உண்டு. நான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தில் ஈடு பட்டுள்ளேன், தற்போது அதிலிருந்து வெளி வர வேண்டுமென்று நினைக்கிறேன், மேலும், இதனால் எனக்கு திருமணம் ஆகி குழந்தை பெறுவதில் ஏதும் பிரச்சனை இருக்குமா என விளக்கவும்.

பாடுமீன் said...

hm....rompa nalla visayam. girl, boy eruvarume therinthirukka vediya mika mukkiyamana pathivu....thodara vaalthukkal.

Anonymous said...

அருமையான பதிவு

Anonymous said...

அருமையான பதிவு

nigdyn said...

Hello sir,

This is the first visit to your blog.

Your blogs are really useful.

Even I have the same problem. I am 25 yrs old. While masturbation I feel that i am ejaculating very fast. I want to tell u another truth about me here.. During my college time, I used to have homosex relationship with my roommate for 4 years.. Actually, on that time my ejaculation time is high.. But As we stayed in a hostel we used to get very less time for intercourse. So, he used to ask me for a fast ejaculation. So, I used to...

After college both of us got seperated.. He went to some other place to work...In the mean time, I understood that the homosex relationship is not a useful and peaceful. I swear u this is the only one bad relationship in my life...

After that i got a girl friend and our relationship is going smooth. But, After my old relationship i felt that i am so fast in ejaculation...

I like to live a happy and peaceful life with my girl.. I am matured enough to accept the mistakes..I need ur advise on this...

Anonymous said...

//நன்றி நண்பரே.. எனக்கு சில கேள்விகள் உண்டு. நான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தில் ஈடு பட்டுள்ளேன், தற்போது அதிலிருந்து வெளி வர வேண்டுமென்று நினைக்கிறேன், மேலும், இதனால் எனக்கு திருமணம் ஆகி குழந்தை பெறுவதில் ஏதும் பிரச்சனை இருக்குமா என விளக்கவும்.//

Nanba kadantha 10 andugaluku melaga nanum suya inbam anubavitu vanthavan. tharpoluthu thirumanam agi oru kulanthaiku thanthai agiyum magilchiyaga ulleyn. suya inbam ondrum kutramillai .innum solla ponal pathugapanaathu. aids pondra thollaigal kidayathu. thairiyamga yarayum thirumanam seithu santhosapaduthalam. vazhthukal.

Anonymous said...

sextherapyயில் என்னென்ன செய்ய வேண்டும்?

Ayurveda said...

Fantacy என்ற ஒற்றை சொல்லில் இதற்கான பதில் அடங்கியுள்ளது.
ஒருவர் வேலைக்காரியை இரசித்து பழகி, பின்னர் அவருக்கு வேலைக்காரியை மட்டும்தான் பிடிக்கும்.
நமது மூளையில், காதல் / காமம் சம்பந்தமாக முதலாவது திறக்கப் படும் வங்கிக் கணக்குதான் இதற்க்குக் காரணம்.
ஏன் பரவலாக கை மைதுனம்(சுய புணர்ச்சி) செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் 12 அல்லது 13 வதில்
திறக்கப் பட்ட காதல் வங்கிக் கணக்கு இதுதான்.அதனால்தான் சிறு வயதில், நமது பிள்ளைகளுக்கு தேவையான
பாலியல் சந்தேகங்களை முறையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனை அறிந்திருந்த நமது முன்னோர்கள்
சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். இன்றைக்கு மனிதனை ஆட்டிப் படைக்கும் நீலப் படங்களும்
போர்னோ (porno) நமது பாண்டசி யை வைத்து உருவாக்கப் பட்டவை.ஆரோக்கியமான சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு ....
சரியான பருவத்தில் திருமணமும் முடித்துவிட்டால் இது போன்ற மாற்று பாலியல் (போலி) சந்தோசங்கள் தேவை இருக்காது.
"One man can affect the many. Make it an individual goal to have a positive impact on others." -
Dr.Rajasekar Athiappan.
Tel: 416-995-0416 / Fax:416-946-1638
www.ayurvetha.com

தோழி said...

அருமையான விளக்கம்

தங்கம்பழனி said...

தொடரட்டும் உங்கள் பணி..நன்றி!வாழ்த்துக்கள்..!

SRIDEVA said...

exercise panna annurupuku effct unda?, illaiya.