Sunday, March 14, 2010

யோனி வழியே வெளிவரும் கருப்பைகள்

கருப்பை இறக்கம் (uterovaginal prolapse)என்பது வயதான பெண்களில் ஏற்படுகின்ற பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதன் போது கருப்பைப் பையானது பெண்ணின் யோனி வழியே கீழ் இறங்கும்.

கீழிறங்கிய கருப்பை பெண்ணின் பிறப்பு உறுப்பினுள்ளே (vagina)இருக்கலாம் அல்லது சற்று தீவிரமடையும் போது பெண்ணுறுப்பின் வெளியே கருப்பையின் ஒருபகுதி வெளியே வரலாம் , இந்தப் பிரச்சனை தீவிரமடையும் போது கருப்பை முழுமையாக வெளியேறலாம்.




முற்று முழுதாக கீழிறங்கிய கருப்பை

இந்தப் நோயானது அதிகமான குழந்தைகளை சாதரணமாக பெற்று எடுத்தவர்களிலேயே பொதுவாக ஏற்படும். அதாவது சீசர் முறை மூலம் குழந்தைகளை பெற்று எடுத்தவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவு.

மேலும் அதிகமான குழந்தைகளைபிறப்பு வழியே பெற்றெடுக்கும் போது இந்த கருப்பை இறக்கம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.


சிலவேளை இந்த கருப்பை இறக்கத்தோடு மூத்திரப்பையும்(blader) சேர்ந்து கீழ் இறங்கலாம். சில பெண்களுக்கு கருப்பையோடு குடலின் ஒரு பகுதியும் சேர்ந்து கீழ் இறங்கலாம்.



கருப்பையின் ஒரு பகுதியோடு சிறுகுடலின் ஒரு பகுதியும் இறங்கியுள்ளது


அரிதாக கருப்பை இறக்கம் இல்லாமல் மூத்திரப் பை மட்டும் கீழ் இறங்கலாம்.

இப்படி கருப்பை பை இறக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் யோனி வழியே pessaryஎனப்படும் வளையங்களை உட்செலுத்தி தற்காலிக தீர்வு வழங்கப்படலாம்.



தற்காலிக தீர்வு வழங்கும் வளையங்கள்


ஆனாலும் நிரந்தரமாக இந்த பாதிப்பில் இருந்து மீள வேண்டுமானால் சத்திர சிகிச்சை மூலம் கருப்பைப் பை நிரந்தரமாக அகற்றப் பட வேண்டும்.

பிறப்பு உறுப்பின் ஊடாக கருப்பை அகற்றப் படுகிறது

2 comments:

vjvrk said...

உங்கள் முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

ர‌த்த‌மும் ச‌தையுமாக‌ தெரிந்தாலும் அத்த‌னையும் அருமையான‌ விவ‌ர‌ங்க‌ள்.சிசேரிய‌ன் வீடியோ கூட‌ அருமையாக‌ எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.