Saturday, March 13, 2010

ஆண்களின் மலட்டுத் தன்மையை அறிவது எப்படி?

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே மலட்டுத்தன்மை ஏற்படும் சந்தர்ப்பம் குறைவு என்பதால் குழந்தை பிறக்காவிட்டால் முழுக் குற்றத்தையும் மனைவி மேலேயே சுமத்தி விடுகிறது இந்தச் சமூகம்.

ஆனாலும் மருத்துவ ரீதியாக மலட்டுத்தன்மைக்குரியவர் கணவனா அல்லது மனைவியா என அறிந்துகொள்ள இப்போது ஏராளமான வசதிகள் உள்ளன. குழந்தை உருவாகாமல் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மட்டுமல்ல கணவனும் தங்களை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஏனென்றால் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அந்தக் குறைபாடுகளை போக்கிக் கொள்ள நிறைய வசதிகள் வந்துவிட்டன .

சரி , ஆணிலே மலட்டுத் தன்மை உள்ளதா என்று எவ்வாறு பரிசோதிக்கப்- படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்கு ஆணிலே இருந்து வெளிவரும் விந்து (sperm) எனப்படும் உயிரணு பெண்ணின் முட்டை (ova) எனப்படும் உயிரை அடைந்து கருக்கட்டப் பட வேண்டும்.

பெண்களிலே முட்டையானது மாதவிடாய்க் காலத்தின் நடுப்பகுதியிலே சூலகம்(ovary) எனப்படும் உறுப்பில் இருந்து வெளிவரும் , இது வெளி வந்து மூன்று நாட்களுக்குள் அந்த பெண் உறவில் ஈடுபட்டு அவளின் உறுப்பின் உள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டால் அது அந்த முட்டையை கருக்கட்ட சந்தர்ப்பம் உள்ளது.

பெண்களிலே சாதாரணமாக ஒரு நேரத்தில் ஒரு முட்டையே (ova) வெளிவரும். ஆனால் ஆண்களில் அப்படியல்ல ஒரு நேரத்தில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் வெளிவரும், ஆனாலும் இதில் ஒன்றே முட்டையை சென்றடைந்து கருக்கட்டி குழந்தையாகும்.


இந்த விந்தணுவானது ஆணின் உறுப்பிலே இருந்து வெளிவரும் சுக்கிலப் பாயம் (seminal fluid) எனப்படும் திரவத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும்.அதாவது ஆண் உடலுறவின் போது வெளியிடும் திரவமானது சுக்கிலப் பாயம்(seminal fluid) எனப்படுகிறது .இந்த சுக்கிலப் பாயத்திலே விந்துகளோடு அவை உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியமான பதார்த்தங்களும் நிரம்பி இருக்கும்.ஒரு விந்தின் உருவம் இப்படித்தான் நுணுக்குக் காட்டியில் தெரியும்

ஆணின் குழந்தை உருவாக்குவதற்குரிய தன்மையை அறிய இந்த சுக்கிலப் பாயம் பயன் படுத்தப்படுகிறது.

சுக்கிலப் பாயத்தில் இருக்கும் விந்துகளின் எண்ணிக்கை(sperm count) , அந்த விந்துகளின் அசையும் தன்மை(motility), அந்த விந்துகளின் உருவ அமைப்பு(morphology) என்பவையே முக்கியமாக சோதிக்கப் படுகின்றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருக்கும் போதே அந்த ஆனால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும்.
அதாவது விந்துகளின் எண்ணிக்கை மட்டும் தேவையான அளவு இருந்தால் போதாது அவை உருவ ரீதியாக உகந்ததாகவும், அசையும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

பரிசோதனைக்காக இந்த சுக்கிலப் பாயம் எப்படிப் பெறப்படுகிறது?


சுக்கிலப் பாயத்தில் மிதக்கும் விந்துகள்

ஆண் சுய இன்பத்தில் (mastubation)ஈடுபட்டு வெளிவருகின்ற திரவத்தை ஆய்வு கூடத்தில்/வைத்திய சாலையில் இருந்து பெற்றுக் கொண்ட பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கவேண்டும்.
உடலுறவின் போது வெளிவரும் திரவத்தை கொண்டம் மூலம் சேகரித்தும் கொடுக்கலாம்.ஆனால் அதற்கான கொண்டம் எந்த இரசாயனப் பதார்த்தமும் கொண்டிராததாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட சுக்கிலப் பாயம் ஒரு மணி நேரத்தினுள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.

முக்கியமாக சோதனைக்காக சுக்கிலப் பாயத்தை சேகரிக்கும் முன் மூன்று நாட்களுக்கு அந்த ஆண் சுய இன்பத்திலோ , உடலுறவிலோ ஈடுபடாமல் இருப்பது முக்கியம்.

9 comments:

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

துமிழ் அவர்களே,

நல்ல தகவல், எளிய தமிழில் புரியும் படியாக நல்ல நல்ல மருத்துவத் தகவல்களை வழங்குகின்றீர்கள். வளர்க உங்கள் பணி, இன்று போல் என்றும் சிறக்க உங்களுக்கு வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Anonymous said...

please tell me iui method conceive sir

Anonymous said...

Good Message Sir. Thanks to you
By
maharaja

Anonymous said...

Dear Sir, Correct me if i am wrong..the date mentioned in your posting is three days after period..Is that correct.?

துமிழ் said...

thanks muththukkumaar

துமிழ் said...

Anonymous said...

Dear Sir, Correct me if i am wrong..the date mentioned in your posting is three days after period..Is that correct.?

March 14, 2010 5:16 AM//

sorry friend i couldnt understand ur doubt clearly?
if u dont mind could u explain bit learly?
thanks

Iqbal said...

Please could write aboute premature ejaculation

shaj said...

முன் மூன்று நாட்களுக்கு அந்த ஆண் சுய இன்பத்திலோ , உடலுறவிலோ ஈடுபடாமல் இருப்பது முக்கியம்.//// இதைப் பற்றி கொஞ்சம் விளக்கவும்... என் நண்பன் சென்ற மருத்துவர் அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை உடனேயே விந்து எடுக்கலாம் என்று சொன்னதாக சொன்னார்

Anonymous said...

ஹாய் துமிழ் உங்களுடைய இந்த சேவைக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கு வயது 34 , என் மனைவிக்கு 27, எங்களுக்கு 8வயதில் ஒரு மகள் இருக்கிறாள் .என் மனைவிக்கு fibroid கட்டி உள்ளது 7 *1 . 5 cm அடுத்த குழந்தை பிறப்பின் போது அதையும்operate பண்ணி எடுத்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதனால் அடுத்த குழந்தையை பற்றி யோசிக்கவும் இயலாத எல்டர் அண்ட் பினன்சியால் சப்போர்ட் எல்லாம் யோசித்து காப்பர்-t உஸ் உபயோகித்தோம். எங்களுக்கு மனமாய் 10 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது அடுத்த குழந்தைக்கு ட்ரை பண்ணலாம் என்று இருக்கோம். என் மனைவின் periods date 4th . எந்த date -இல் உறவு கொண்டால் இது சாத்தியம் .

இப்பொழுது வேறொரு ப்ரோப்லேம் என்னவென்றால், எனக்கு விறைப்புதன்மை கொஞ்சம் குறைவாக உள்ளது, sometimes உச்ச நிலை அடைவதற்கு ரொம்ப சிரமம் பட வேண்டிருக்கு, இதனை நாள் அப்படி இருந்ததில்லை என்று என் மனைவியும் சொல்கிறாள், தக்க ஆலோசனையை எதிர்பார்க்கிறோம்.

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நன்றி