Wednesday, April 7, 2010

மாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள்(sexual deviation)

பாலியல்சந்தோசம் பெரும் முறைகளாக நீங்கள் அனைவரும் அறிந்திருக்கும் முறைகளாவன ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (heterosex), ஆணும் ஆணும் அல்லது  பெண்ணும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (homo sex)அல்லது சுய இன்பம்(masturbation) பெறுதல். இவற்றிற்கு அப்பாலும் மனிதர்களின் மனதிலே வித்தியாசமான பாலியல் சந்தோசம் முறைகள் ஏற்படலாம். இவற்றிலே சில பயங்கரமானவை சில சாதாரண மனிதர்களாலே நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை.இவை பற்றி அறிந்து கொள்வது இப்படி வித்தியாச மனநிலை கொண்டவர்களிடம் இருந்து தங்களைப் பாது காத்துக் கொள்ளவும் , இப்படிப் பட்டவர்களை இனங்கண்டு தகுந்த தீர்வை வழங்குவதற்கும் அவசியமாகும்.

ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுவதன் மூலம் பாலியல் திருப்தி அடைய நினைப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும் . அவ்வாறு அல்லாமல் வேறு முறைகள் மூலம் பாலியல் இன்பம் பெற நினைப்பது மாற்று வழிப் பாலியல் முறை (sexual deviation) எனப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில வேளை அது ஒரு மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். சில முறைகள் பாதிப்பு அற்றவை. உதாரணத்திற்கு சுய இன்பம் என்பது பாதிப்பு அற்ற ஒரு மாற்று வழி பாலியல் சந்தோஷ நாடும் முறையாகும்.

இனி இப்படி மாற்று வழி பாலியல் முறை தேடும் நபர்களின் மாறுபட்ட முறைகள் பற்றி பார்ப்போம்!

                                                                Homosex


ஆணும் ஆணும் உறவில் ஈடுபடல்

பெண்ணும் பெண்ணும் உறவில் ஈடுபடல்  Incest

உறவு முறையான பாலியல் தொடர்பு. அப்பா மகள் இடையே ,சகோதரங்கள் இடையே  , சித்தப்பா மாமா போன்றோர்களால் மருமகள் முறையாநோர்களோடு ஏற்படும் உறவுகள் எம் சமூகத்திலும் இருக்கின்றன.


சிறு குழந்தைகளோடு உறவு கொள்ளுதல்(pedophilia)


-சின்ன குழந்தைகலோடே உறவு வைக்க விருப்பம் கொண்ட கொடுமையான மனநிலை கொண்டவர்கள். .இப்படியானவர்கள் உங்களுக்குத் தெரிந்தால் உடனே மனநல வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்க.

நிர்வாண வெளிக்காட்டல் முறை(Exibitionism)

இவர்கள் திடீரென பெண்கள் முன் அல்லது சனக் கூட்டங்களிடையே தன் உடைகளை களைந்து நிர்வாணம் ஆக நிற்பதன் மூலம் தங்களை திருப்தி படுத்திக் கொள்வார்கள். நிறைய பெண்கள் இந்த சந்தர்ப்பத்தை சந்தித்து இருப்பார்கள். இது எம்மிடையேயும் மிக பொதுவாக இருக்கும் பிரச்சனை. இவ்வாறு செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே ! இவர்களுக்கு நிச்சயமாக ஒரு மனநிலை வைத்தியரின் ஆலோசனை தேவை.


பிணத்தோடு உறவு கொள்ளுதல(Necrophilia)


இது மிகவும் கொடுமையான ஒன்று பிணங்களோடு உறவு கொள்ளுதல். இது மிகவும் குறைவு என்றாலும் பிரேத அறையில் வேலை செய்பவர்கள் இவ்வாறு பாதிக்கப் பட சந்தர்ப்பம் உள்ளது. சில பேர் உயிரோடு ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு போய், அவளை கொலை செய்த பின் உறவை வைத்துக் கொள்வார்கள்.இவர்கள் நிச்சயமாக வைத்தியர்களிடம் அழைத்துப் போகப் பட வேண்டியவர்கள்.
                        திருட்டுத் தனமாய் ரசிக்கும் முறை (Voyeurism )

இதிலே மற்ற பாலரை மறைவாக நின்று நிர்வாணமாக ரசிப்பதே அவர்களின் இன்பம். இவ்வாறானவர்கள் எப்போதும் மறைவாக ரசிப்பதையே விரும்புவார்கள்,

மாற்று பாலாரின் பொருள் மூலம் சந்தோசம் அடைபவர்கள் (Transvestism)

இவர்கள் மற்ற பாலாரின் உடைகளை அணிவதிலேயே திருப்தி கொள்வார்கள். இவர்கள் ஆடைகளை திருடுவதில்லை , மற்ற பாலாரின் ஆடைகளை தனக்கென வங்கி அதை அணிந்து கொண்டு வெளியில் செல்பவர்கள்.

                               

Masochism

தன்னை தானே வருத்தி இன்பம் பெறுதல்

saddisam

மற்றவர்களை வருத்தி  இன்பம் பெறுதல்9 comments:

வடுவூர் குமார் said...

நிறைய பெண்கள் இந்த சந்தர்ப்பத்தை சந்தித்து இருப்பார்கள்
ஆமாம்.
இப்படி ஏன் செய்கிறார்கள்?ஆதாரன காரணம் என்ன?மனநிலையென்றாலும் அது குறிப்பிடும் படி இப்படி ஏன் செய்கிறார்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்!!!
நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

விழிப்புணர்வு மிகுந்த சிறப்பான பதிவு பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன்

G VARADHARAJAN said...

இது வரை வந்தவைகளில் வித்தியாசமான பார்வையில் வலம் வந்தாலும் நம் சிந்தனைக்கு தேன் விருந்து பாராட்டுக்கள் தொடரட்டும் இது போன்ற அறிவுபூர்வமான கட்டுரைகள்.

புதுகை ஜீ வீ ஆர்

கவியின் கவிகள் said...

அருமையான பதிவு பாராட்டுக்கள்.

Anonymous said...

very day some think different issues,
this is very very help for us.please keep it up and my wishes.

krishnan said...

good

colvin said...

பகிர்விற்கு மிக்க நன்றி. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். மற்றும் மருத்துவ கேள்வி - பதில் பகுதியொன்றை ஆரம்பித்தால் என்ன?

Ayurveda said...

Fantacy என்ற ஒற்றை சொல்லில் இதற்கான பதில் அடங்கியுள்ளது.
ஒருவர் வேலைக்காரியை இரசித்து பழகி, பின்னர் அவருக்கு வேலைக்காரியை மட்டும்தான் பிடிக்கும்.
நமது மூளையில், காதல் / காமம் சம்பந்தமாக முதலாவது திறக்கப் படும் வங்கிக் கணக்குதான் இதற்க்குக் காரணம்.
ஏன் பரவலாக கை மைதுனம்(சுய புணர்ச்சி) செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் 12 அல்லது 13 வதில்
திறக்கப் பட்ட காதல் வங்கிக் கணக்கு இதுதான்.அதனால்தான் சிறு வயதில், நமது பிள்ளைகளுக்கு தேவையான
பாலியல் சந்தேகங்களை முறையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனை அறிந்திருந்த நமது முன்னோர்கள்
சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். இன்றைக்கு மனிதனை ஆட்டிப் படைக்கும் நீலப் படங்களும்
போர்னோ (porno) நமது பாண்டசி யை வைத்து உருவாக்கப் பட்டவை.ஆரோக்கியமான சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு ....
சரியான பருவத்தில் திருமணமும் முடித்துவிட்டால் இது போன்ற மாற்று பாலியல் (போலி) சந்தோசங்கள் தேவை இருக்காது.
"One man can affect the many. Make it an individual goal to have a positive impact on others." -
Dr.Rajasekar Athiappan.
Tel: 416-995-0416 / Fax:416-946-1638
www.ayurvetha.com