Wednesday, March 17, 2010

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா?

மாதவிடாய் என்பது பெண்களிலே  சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

உண்மையில் மாதவிடாயின் போது உடலுறவு  கொள்வது ஒரு தகாத செயலா?
 

இல்லை 
.
உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்படலாம். குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று நோ , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். இதுபற்றி மாதவிடாய்  காலத்து வலிகள் என்ற இடுகையில் பதிவிட்டிருந்தேன்.இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறையலாம்.அதாவது மாதவிடாய் நேரத்து அசௌகரியங்கள் உடலுறவில் ஈடுபடும் போது குறையலாம்.

மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நேரங்களை விட பெண்ணுக்கு அதிகம் திருப்தி ,கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.காரணம் மாதவிடாய் நேரத்தில் அவளது உறுப்புக்கள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் மகிழ்ச்சியைக் கூட்டலாம்.

மேலும் நம் சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.

மற்றும் இந்தக் காலத்தில் உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும் கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவே குழந்தை பிறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை பாவிக்கவேண்டும்.

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடுவதால் எந்த மாதிரியான தீங்குகள் ஏற்படலாம்?
மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.அதாவது ஆனிலோ அல்லது பெண்ணிலோ எயிட்ஸ்(Aids) ,சிபிலிஸ்(SYPILLIS) , ஈரழ் அலர்ச்சி B(hEPATITIS B) போன்ற நோய்கள் இருந்தால் இது மற்றவருக்குத் தொர்ருவதகான சந்தர்ப்பம் அதிகமாகலாம்.

மேலும் கொண்டம் பாவிப்பது இந்த நோய்களின் தொற்றைக் குறைப்பதால் இந்த நேரத்தில் தவறாமல் கொண்டம் பாவிப்பது உகந்தது.

அதானால் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு மட்டும் உறவு வைத்துக் கொண்டால் மாதவிடாய் காலத்திலும் உறவு வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு மற்றைய நாட்களை விட இதன்போது அதிக சந்தோசம் கிடைக்கலாம்.

12 comments:

மதுவதனன் மௌ. / cowboymathu said...

என்னுடைய நண்பர்களுக்கு எவ்வளவு எடுத்துக் கூறியும் நம்ப மறுக்கிறார்கள்.. இந்தப் பதிவை அவர்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.

ஆனால் நான் நம்புறேன்.. :))

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

துமிழ்,

உங்களின் பதிவுகள் அநேககமாய் எல்லோருடைய நெடுநாள் சந்தேகங்களை களைய வந்த சந்தேக நிவாரணியாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்த வரையில் மிக நல்ல முறையில் மருத்துவத் தகவல்களை உங்கள் பொன்னான நேரத்தை முகம்தெரியா நண்பர்களுக்காக செய்ந்நன்றி பராது செவ்வனே செய்து வரும் சேவை பாரட்டத்தக்கது.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

ஜிஎஸ்ஆர் said...

சில நேரங்களில் எப்படி கேட்பது என நினைக்கும் கேள்விகளுக்கும் தெளிவாக அனைவருக்கும் புரியும் வழியில் விளக்கி விடுகிறீர்கள் நிச்சியமாய் பலரும் தங்கள் பதிவுகளை படிப்பதன் மூலம் தெளிவு பெறுவார்கள்

தொடரட்டும் உமது பணி இன்னும் சிறப்பாக

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

ராம்ஜி_யாஹூ said...

it takes really lot of time to open.

so with that stress, I have lost the interest to read.

spk said...

மிகவும் நல்ல தகவல் .உங்கள் பணி தொடரட்டும்.

அன்புடன் பிறேம்.(சுவிஸ்)

Mehar said...

It's helpful to everyone and this is new information for me. Thanks. best wishes

Madurai Saravanan said...

நல்ல தகவல். வாழ்த்துக்கள்.செக்ஸ் அறிவு கொடுப்பதற்க்கு.

prabhadamu said...

நல்ல தகவல். வாழ்த்துக்கள்.

உங்கள் பணி தொடரட்டும்.

Anonymous said...

This is one of the most misleading advise from a doctor. You have written all the phrases in complete assumption. Can you give any medical referance regarding this.What a shame....

G VARADHARAJAN said...

வணக்கம் நண்பரே சிறப்பான முறையில் நாகரிகமாக பலரும் மன்ம கூசாமல் பார்க்க படிக்க இனிமையானது பாலியல கல்வி என உணர்வைத் தருகின்றது தொடரட்டும்

புதுகை ஜி வி ஆர்

அக்கினிச் சித்தன் said...

இதுலயும் பாருங்கோ! http://pms.about.com/od/myths/a/menstrual_myths.htm

சி. கருணாகரசு said...

தகவலுக்கு நன்றிங்க.