Friday, March 12, 2010

கூகைகட்டு ஆண்மையைக் குறைக்குமா?

கூகைக்கட்டு(mumps) என்பது வைரசினால் ஏற்படுகின்ற ஒரு நோயாகும். இது எமது உமிழ் நீர்க்கலங்களை பாதிப்பதன் மூலம்அவை வீங்கி தாடைப் பகுதில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நோயினால் ஆண்களின் ஆண்மைத்தன்மை பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

எப்படியென்றால்?
உமிழ் நீர்க்கலங்க்களை பாதிப்பதைப்போல சில ஆண்களில் இது விந்துகளை உருவாக்கும் விதைக் கலங்களையும் பாதிக்கலாம்.இதனால் விந்து உற்பத்தி குறைந்து அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் ஏற்படலாம்.

ஆனாலும் இது அரிதாக ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வாகும். அதாவது கூகைக்கட்டு ஏற்பட்ட ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது என்றாலும் அது மிகவும் அரிதாகவே ஏற்படும். இதனால் கூகைக்கட்டு ஏற்பட்ட ஆண்கள் தங்களுக்கு குழந்தை பிறக்காதோ என்று பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம்.

மேலும் அவர்களின் விந்து உற்பத்தி குறையுமே தவிர அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதை இது எந்த வகையிலும் பாதிக்காது .

இப்போது குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசியிலே இந்த கூகைக்கட்டு நோயினை தடுப்பதற்கான மருந்தும் இருக்கின்ற காரணத்தினால் இந்த நோய் மிகவும் அரிதாகவே ஏற்படுகிறது.

மறக்காமல் உங்கள் குழந்தைகளுக்கும் ஒழுங்காக தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.

3 comments:

கல்வெட்டு said...

//விந்து உற்பத்தி குறைந்து அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் ஏற்படலாம்.//

பிறக்காமல் இருப்பதற்கான ..என்று இருக்க வேண்டும் அல்லவா துமிழ் ?

ரோஸ்விக் said...

பயனுள்ள தகவல்.

இந்த நோயை கேள்விப்பட்டு பல காலம் ஆகிவிட்டது. :-)

Muthu Kumar N said...

துமிழ் அவர்களே,

நல்ல தகவல், எளிய தமிழில் புரியும் படியாக நல்ல நல்ல மருத்துவத் தகவல்களை வழங்குகின்றீர்கள். வளர்க உங்கள் பணி, இன்று போல் என்றும் சிறக்க உங்களுக்கு வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்