Wednesday, April 14, 2010

உடலுறவில் ஏற்படும் பிரச்சினைகள்,!தீர்வுகள்!

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் !

டாக்டர் , வணக்கம்.  தங்களின் தன்னலமில்லா இந்த முயற்சிக்கு என் நன்றி.
எனக்கு வயது 34 , என்  மனைவிக்கு 27 . திருமணமாகி 2 .2  வருடங்கள் ஆகிறது.
இருவருக்குள்ளும்  எந்த வித பிரச்னையும் இல்லை. மிக சந்தோஷமாக இருக்கின்றோம்.
சில காரணங்களுக்காக முதல் வருடத்தில் குழந்தை பிறப்பை தள்ளி  போட
முடிவு செய்தோம். கருத்தடை சாதனம் எதுவும் பயன்படுத்தவில்லை..  4  - 5
முறை மட்டுமே முழு  உறவில் ஈடு பட்டோம். ஏன் என்றெல்லாம் புரியவில்லை..
ஆனால் தொடர்ந்து foreplay மட்டுமே செய்து வந்தோம் ..

4 - 5 முறை முழு உடலுறவில்  ஈடுபட்டோம் அதில் 1 அல்லது 2  முறை தான்
penetration  உணரமுடிந்தது.. மற்ற  சமயங்களில்  penetration முடியவில்லை.
1 வருடத்திற்கு குழந்தை வேண்டாம் என்ற முடிவெடுத்ததால் , இதனை பெரியதாக
எடுத்துக்கொள்வில்லை.  இதுவே பிரச்னையாகும் என்று அப்போது உணரவில்லை.

கடந்த ஒரு வருடமாக குழந்தை வேண்டும் என்று முயற்சிக்கின்றோம் ஆனால்  இந்த
பிரச்னை உள்ளது. penetration  செய்ய இயலவில்லை.  1  வருடத்துக்கு பிறகு
முயற்சி செய்த போது ..  penetration  முடியவில்லை..  ஒரு 2 , 3 மாதங்கள்
போன பிறகு இர்வருக்கும் மனதளவில் ஒரு வித பயம் வந்து விட்டது..  முன்பே
கவனிக்காமல் தவறு செய்து விட்டோமோ என்ற பயம் வந்தது..  வீட்டிலும்
அனைவரும் கேட்க ஆரம்பித்து.. மருத்துவரிடம் போக சொல்லிவிட்டார்கள்.

ஒரு மருத்துவரை அணுகினோம்.. அவர்கள் இருவருக்கும் டெஸ்ட் செய்து விட்டு ,
மனைவிக்கு  உடளவில் / எனக்கு விந்து அனாலிசிஸ் ல்  எந்த குறையும் இல்லை
என்று கூறிவிட்டார்.
ovulation கு சில மாத்திரை மட்டும் கொடுத்தார். 3  மாதங்கள் முயற்சித்து
விட்டு வரும்படி கூறினார்.  அவரிடம் இது பற்றி கூறினோம்.  மனசை ரிலாக்ஸ்
பண்ணுங்க என்பது போன்ற சில அறிவுரை கூறினார்.

என் மனைவியும் நானும் இது பற்றி ஓப்பனாக பேசுகிறோம், ஏன் முடியவில்லை
என்று இருவருக்கும் புரியவில்லை. இருவரும் மனம் விட்டு பேசினாலும் , மனசு
என்னவோ போலுள்ளது.. இப்போது எல்லாம் உடலுறவில் ஈடுபடவே ஒரு தயக்கம்
உள்ளது.. ஒரு வேலை இப்போதும் penetrate  செய்ய முடியாமல் போய் விடுமோ
என்ற தயக்கம்  மட்டுமே மேலோங்கிவுள்ளது.. (இருவருக்கும்)

ஒரு விஷயம்.. !  சில மாதங்களாகவே எனக்கு விறைப்பு தன்மையில் கொஞ்சம்
மாற்றம் உள்ளது . விறைப்பு இருக்கிறது .. ஆனால் 1  வருடத்துக்கு முன்பு
இருந்தது போல "அதிக" விறைப்பு இல்லாதது போல உணர்கிறேன்.. ஒரு 20  - 25
சதகிவிதம் குறைந்தது போல் உள்ளது.

இது மனதளவு ஏற்பட்ட பாதிப்பின் விளைவா என்பதும் புரியவில்லை.

இப்போதெல்லாம் வீட்டில், உறவினர்களில் என்று அனைவரும் குழந்தை பற்றி
கேட்க கேட்க , இருவருக்குமே மனம் சஞ்சலபடுகிறது
சற்று மனச்சுமை அதிகமாக உள்ளது. non -penetration ல் ஏற்பட்ட
மனச்சோர்வோடு இதுவும் சேர்ந்து விட்டது இன்னும் அதிகமாக உள்ளது

விறைப்பு தன்மை எவ்வளவு இருக்கவேண்டும்? ஆணுறுப்பு அளவில் எதுவும் இல்லை
என்று உங்களின் ஒரு பதிவில் படித்தேன்..  விறைப்பு தன்மை பற்றி தெளிவு
வேண்டும்.. உங்களின் ஆலோசனையும் வேண்டும்.
சைடு எப்பக்ட் இல்லாத மாத்திரை எடுத்துக்கொள்ளலாமா

மிக்க நன்றி
(அந்தரங்கம் கருதி பெயர் வெளியிடப்படவில்லை )
...........................

பதில்

நல்லது நண்பரே!
இது உங்களுக்கு மட்டுமல்ல பொதுவாக காணப்படும் ஒரு பிரச்சினையாகும். ஆனாலும் இது பாலியல் சம்பந்தமாக போதிய அறிவு இல்லாதவர்களுக்கே அதிகம் ஏற்படுகின்ற பிரச்சினை ஆனால் நீங்களோ நிறைய விடயங்களை தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி ஒரு பிரச்சினையில் உள்ளீர்கள் எனும்போதுதான் ஆச்சரியமாக உள்ளது.

சரி இனி விடயத்திற்கு வருவோம் !

முதலில் நீங்கள் குழந்தைப் பிறப்பை பிற்போடுவதற்காக உடலுறவைத் தவீர்த்தது உண்மையில் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.குழந்தை பிறப்பை பிற்போட எவ்வளவோ வழிமுறைகள் இருக்கும் போது நீங்கள் உடலுறவைத் தவிர்த்து குழந்தைப் பிறப்பை பிற்போட நினைத்திருப்பதை வைத்துப் பார்க்கும் போது , உண்மையில் உங்கள் இருவருக்குமே உடலுறவு முக்கியமாக penetration   ( புணர்ச்சி ) சம்பந்தமாக அப்போதே நிறைய அச்சம் இருந்திருக்க வேண்டும். இருவரும் அதை வெளிக்காட்டாமல் குழந்தைப் பிறப்பைக் காரணம் காட்டி உடலுறவைத் தவிர்த்து வந்துள்ளீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

மற்றது நீங்கள் இப்போதும் penetrtion செய்ய (புணர்ச்சி) முடியாமல் இருப்பதாக கூறுகிறீர்கள்.

புணர்ச்சியில் ஈடுபட முடியாததிற்கு பல காரணங்கள் மருத்துவ ரீதியாக இருந்தாலும் , நீங்கள் ஏற்கனவே சில முறை புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளதை வைத்துப் பார்க்கும் போது இலகுவாக சொல்லி விடலாம் அப்படியான மருத்துவ நோய்கள் உங்கள் இருவருக்கும் இல்லை என்று.

இப்போது உங்கள் ஆணுறுப்பின் விறைப்பும் குறைந்து வருவதாக கூறுவதை வைத்து பார்க்கும் போது தெரிகிறது நீங்கள் மனதளவிலே தளர்ந்து வருகிறீர்கள்.

வெளிப்படையாகச் சொல்வதானால் உங்கள் இருவருக்கும் உடல் அளவிலே எந்தப்பிரச்சினையும் இல்லை .
உடலுறவு என்பது இயற்கையான ஒரு நிகழ்வு இதற்காக எந்த அச்சமும் படவேண்டிய அவசியமில்லை. அதற்காக எந்த மருந்துகளும் உட்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

மனச் சஞ்சலத்தை தவிர்த்து உங்கள் இல்லறத்தை இனிதாக அமைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இணைப்புக்கள் உங்களுக்கு பயனளிக்கலாம்.

ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்

இந்தப் பிரச்சினையில் இருந்து உங்களால் மீளவே முடியவில்லை என்றால் உங்களுக்குத் தேவை மருந்துகள் அல்ல . மாறாக செக்ஸ் தெரப்பி எனப்படும் பயிற்ச்சியே. இதற்கான பயிற்சி பெற்ற நபர்கள் நீங்கள் இருக்கும் நாட்டில் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து விஞ்ஞான ரீதியான அந்தப் பயிற்சி ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன் உங்கள் மன பயத்தை நீக்கி வையுங்கள் எதுவுமே தேவை இல்லை !

2 comments:

ஜிஎஸ்ஆர் said...

இது சாதரணமாக உள்ள பிரச்சினைதான் இதை பற்றிய கவலையை விடுத்து உடலுறவில் ஈடுபட்டாலே போதுமானது முக்கியமாக பய உணர்வை விலக்க வேண்டும்

இப்பிரச்சினைக்குறிய அன்பருக்கு
தங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்ற பிறகு உங்களுக்கு ஏன் தேவையில்லாத குழப்பம் நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் உங்களுக்கு குழந்தை பிறக்கும் அதை இதே மருத்துவருடன் நீங்கள் பகிர்ந்துகொள்ளத்தான் போகிறீர்கள்

அன்புள்ள துமிழ் தங்களின் ஒவ்வொரு பதிவிலும் சமுதாய அக்கரையும் பொது நல சிந்தனையும் இருக்கிறதை எங்களால் உணர முடிகிறது.
நிடுழி வாழ எல்லாம் வல்ல கடவுளை பிராத்திக்கிறேன்


வாழ்க வளமுடன்


என்றும் அன்புடன்
ஞானசேகர்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.