Saturday, April 10, 2010

கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது !

நிரந்தரமான கருத்தடை முறையாக பெண்களிலே LRT எனப்படும் சத்திர சிகிச்சை செய்யப்படுவதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

இந்த சத்திர சிகிச்சையின் போது பலோப்பியன் குழாய்  எனப்படும் இரண்டு குழாய்கள் வெட்டித் தைக்கப்படும். இந்தக் குழாயே பெண்ணின் முட்டை கருப்பையின் உள்புறம் நோக்கி நகர வழி செய்வது. இவ்வாறு நகரும் முட்டை ஆணின் விந்தைச் சந்தித்தால் இந்தக் குழாயின் உள்ளே கருக்கட்டல் நடந்து உருவாகும் சிசு கருப்பையை வந்து சேரும்.

இந்தக் குழாயை வெட்டி தைத்து விடுவதன் மூலம்  முட்டை விந்தனுவைச் சந்திப்பது தடைப்படுவதால் கருக்கடல் நடைபெறுவது தடுக்கப்படுகிறது.




                                                      பலோப்பியன் குழாய் வெட்டி அகற்றப்படும் முறை

இந்த சத்திர சிகிச்சை பெண்ணின் வயிற்றிலே சிறு வேட்டுக்கள் போடுவதன் மூலம் மேற்கொள்ளப் படலாம் அல்லது சிறிய கமராவை வயிற்றின் உள்ளே செலுத்தி அந்த கமராவினால் பார்த்தபடி சத்திர சிகிச்சையை முடிக்கலாம்.

ஒரு பெண் தனது குடும்பத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின்பே இந்த சத்திர சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின் குழந்தை பெறுவதென்பதுசாத்தியமற்றது.

2 comments:

Ahamed irshad said...

Useful News. Thanks For Sharing....

Muthu Kumar N said...

Dear Thumiz,

Useful info, can you explain about for mens also.

Best wishes
Muthu Kumar.N