Sunday, April 11, 2010

பாலியல் நோய்கள் -1

பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடு படும் போது நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து நோய் இல்லாத ஒருவருக்கு தொற்றிக் கொள்ளும் நோய்களே பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன(sexully transmitted disease0. அதாவது பாலியல் உறவினால் தொற்றக்கூடிய நோய்கள் பாலியல் தோற்று நோய்கள் எனப்படுகின்றன.

இந்த நோய்கள் பாலியல் தொடர்புக்கு அப்பால் வேறு முறைகள் மூலமும் தொற்றிக் கொள்ளலாம்.

பாலியல் தொற்று நோய்கள் கடத்தப் படக்கூடிய முறைகள்....

தொற்று அடைந்த ஒருவருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உறவில் ஈடுபடுதல்
தொற்று அடைந்த ஒருவரின் குருதியை பாய்ச்சும் போது
தொற்றுள்ள ஒருவருக்கு பயன் படுத்திய ஊசியை கிருமியழிக்காது மற்றவர்கள் பாவித்தல்
பச்சை குத்துதல்
அக்குபங்க்ச்சர் முறையில் ஊசியை கிருமியழிக்காது பயன் படுத்துதல்
தாய்ப்பாலின் ஊடாக
கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு இரத்தம் மூலமாக

பொதுவான அனைத்து முறைகளையும் மேலே கூறியுள்ளேன் . எல்லா நோய்களும் எல்லா விதமாகவும் கடத்தப் படுவதில்லை.

இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் பொதுவாக காணப்படும் பாலியல் தொற்று நோய்கள்...

 1. கொனேரியா(gonorrhoea)
 2. சிபிலிசு(syphilis)
 3. பாலுறுப்பு ஹேர்பீஸ்(Genital Herpes)
 4. பாலுறுப்பு உண்ணிகள்(Genital Warts)
 5. கிளமிடியா(Clamydia)
 6. எயிட்ஸ்(Aids)
 7. ஈரல் அழற்சி B(hepatitis B)
   


எந்த விதமான செய்கைகளில் ஈடுபடுவோருக்கு இந்த நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
,
 1. ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணையை
  கொண்டவர்கள்
 2. விபச்சாரத்தொடர்பில் ஈடுபடுவோர்
 3. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோர்
 4. ஊசி மூலம் போதைப் பொருளை பாவிப்பவர்கள்
 5. பாலுறுப்புக்களில் காயம் உள்ளவர்களோடு உறவில் ஈடுபடுதல்
இந்த நோய்களின் குணங்குறிகள் பெரும்பாலும் பாலுறுப்பு பிரதேசத்திலேயே ஏற்பட்டாலும், சில நோய்களின் குனக்குரிகள் வேறு விதமாகவும் , வேறு இடங்களிலும் வெளிக்காட்டப் படலாம்.

சில பேரில் இந்த நோய்கள் நீண்ட காலத்திற்கு அறிகுறிகளை வெளிக்காட்டாமல் இருந்துகொண்டு , அவர்களோடு உறவில் ஈடுபடுவோருக்கு தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.

பாலியல் தொற்றாக இருக்கக் கூடிய சில குணங்குறிகள்!

 1. பாலுறுப்பு பிரதேசத்தில் கொப்புளங்கள் தோன்றுதல்
 2. பாலுறுப்பு பிரதேசத்தில் காயங்கள் ஏற்படுதல்
 3. பிறப்பு வழியின் ஊடாக சீழ் வெளியேறுதல்
 4. சிறுநீர் கழிக்கும் பொது எரிவு அல்லது வலி ஏற்படுதல்
 5. உடலுறவின் போது வலி ஏற்படுதல்
 6. அடிவயிற்று நோவு
 7. பாலுறுப்பு பிரதேசத்தில் அரிப்பு(கடி) ஏற்படுதல்
 8. பாலுறுப்பு பிரதேசத்தில் உண்ணிகள் வளருதல்
 9. விதைப் பைகளில் வீக்கமும் நோவும்

மேலே உள்ள அறிகுறிகள் வெறுமனே பாலியல் சம்பந்தமான நோய்களில் மட்டும் ஏற்படுவதில்லை வேறு பல நோயகளிலும் இந்த அறிகுறிகள் ஏற்படலாம். ஆகவே மேற்சொன்ன அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால உடனேயே அது ஒரு பாலியல் நோய் என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்.
தகுதியான வைத்திய ஆலோசனை பெற்று சரியான வைத்தியத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

மேலே சொல்லப்பட்ட பொதுவான் பாலியல் நோய்களைலே எயிட்ஸ் மற்றும் ஈரல் அழற்சி தவிர்ந்த ஏனைய அனைத்து நோய்களையும் பூரணமாக சுகமாக்குவதற்கான மருந்துகள் உள்ளதால் உங்களுக்கும் சந்தேகம் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்று உங்களை சுகமாக்கி  கொள்ளுங்கள்.

பி கு- அடுத்து வரும் இடுகைகளில் தொடர்ச்சியாக ஒவ்வொரு பாலியல் நோயாக விளக்கவிருக்கிறேன்!
            ஒவ்வொரு நோய் சம்பந்தமான படங்கள் இடுவது (பாலியல் உறுப்பின்) பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
            மறக்காமல் உங்கள் வாக்குகளை தமிழ் மனத்திலும் ,தமிளிஷிலும் அளித்துச் செல்லுங்கள்.
6 comments:

ஜிஎஸ்ஆர் said...

\\ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணியை கொண்டவர்கள்\\

இது எழுத்து பிழையா?

தாரளமாக நீங்கள் படங்களை பிரசுரிக்கலாமே இது மருத்துவ தகவல்கள் எழுதும் போது விளக்க படமும் இருந்தால் நல்லது தானே ஆனாலும் தனியே ஒரு குறிப்பு கொடுக்க மறக்க வேண்டாம்

வாழ்க வளமுடன்


என்றும் அன்புடன்
ஞானசேகர்

சைவகொத்துப்பரோட்டா said...

தாரளமாக படக்குறிப்பு வெளியிடலாம்
என்பது என் கருத்து.
தலைப்பில் வேண்டுமானால் 18++ மாதிரி
ஒரு அடையாளம் கொடுத்து விடுங்கள்.
அலுவலகத்தில் படிப்பவர்களுக்கு
இக்குறிப்பு உதவியாக இருக்கும்.

நாடோடித்தோழன் said...

உங்கள் பதிவுகள் மிகவும் உதவிகரமானது..
வாழ்த்துக்கள்.. தொடருங்கள்...

Anonymous said...

Dear Sir,

Im reading your posts its very useful to everyone im kindly request you to provide a detailed information about masturbation in mens many of them are notclear in this either they need to be medicated before marriage or in which way it affects the sexual life please explain

Anonymous said...

Please suggest me a good clinic in chennai that where i can test my body,

i have some doubts

Anonymous said...

i feel better now thanks