Tuesday, March 16, 2010

ஸ்கேனிங் செய்வது குழந்தைக்குப் பாதிப்பா ?

பதி said...

LASER தொழில்நுட்பத்தில் இயங்கும் 3D scaning வசதியினை உபயோகிப்பதினால் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏதும் இல்லையா?

இது முந்தைய என் பதிவிலே  ஒரு நண்பர் கேட்ட கேள்வி.


அவருடைய சந்தேகம் ஸ்கேனிங் செய்து பார்ப்பதால் குழந்தைக்கு பாதிப்பு இல்லையா என்பதாகும். அவருக்கு மட்டும்மல்ல நிறையப் பேருக்கு இந்தச் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
உண்மையில் அந்த நண்பர் சொல்லுவது போல இது லேசர் மூலம் இயங்கும் கருவி அல்ல.
ஸ்கேனிங் என்பது வெறும் சத்த அலைகளை(sound waves) வைத்து இயங்கும் கருவியாகும். அதாவது சத்த அலைகளை செலுத்தி அவை தெறித்து வருவதை உணர்ந்து படமாக கொடுக்கும்.இதனால்தான் அவை ultrasound scaning   இந்த சத்த அலைகளால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.


ஆனால் எக்ஸ்ரே(X-ray) எடுப்பதன் மூலமோ அல்லது CT ஸ்கேனிங் எனப்படும் ஸ்கேன் செய்வதாலோ குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். இவற்றிலே கலங்களைப் பாதிக்கும் கதிர் வீச்சுக்கள் பாவிக்கப்படுவதே காரணமாகும் .

2 comments:

மதுரை சரவணன் said...

நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்.

பதி said...

விளக்கத்திற்கு நன்றி துமிழ் !!!!
:)