ஒரு குழந்தை பிறக்கும் செயன்முறை labour (பிரசவம் ) எனப்படுகிறது. ஒரு பிரசவமானது ஒரு குழந்தை பிறப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னமே தொடங்கி விடுகிறது.அதாவது குழத்தை கருப்பையில் இருந்து படிப்படியாக கீழே இறங்கி வது வெளியேறும் செயன் முறையே பிரசவம்(labour) ஆகும். இதற்கு பல மணி நேரங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறு பிரசவம் ஆரம்பித்த பின் சில வேளை குழதையின் பிறப்பு தாமதமாகலாம். இவ்வாறுதாமதமாகும் போது சில வேளை குழந்தை பிறப்பதற்கான வழி போதியதாக இருக்கும் போதும் குழந்தை பிறப்பது தாமதமாகலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் குழந்தையின் பிறப்பை இலகுவாக்க forceps .. vaccum எனப்படும் ஆயுதங்கள் பாவிக்கப் படலாம்.இந்த ஆயுதங்கள் யோனி வழி உள்ளே செலுத்தப்பட்டு குழந்தையின் தலைப்பகுதியில் பொருத்தப்பட்டு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.
இது நன்கு பயிற்றப்பட்ட வைத்தியரினாலேயே மேற்கொள்ளப்படும்.
இந்த ஆயுதங்கள் பொதுவாக இரண்டு வகையாக இருக்கின்றன.ஒன்று உலோகத்தால் ஆனா கீழே படத்தில் இருக்கின்ற forceps.
Forceps எனப்படும் கருவிகள்
இதன் வளைவுகள் குழந்தையின் தலைப் பகுதியில் சரியாகப் பொருந்தும் படியாகவே அமைக்கப் பட்டிருக்கும்.இவை உள்ளே செலுத்தப்பட்டு தலையில் பொருத்தப்பட்டு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.
இது இவ்வாறு முழுமையாக செலுத்தப்படாமல், இரு பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் உள்ளே செலுத்தப்பட்ட பின்பே இரு பகுதியும் பொருத்தப்படும் .
Forceps குழந்தையின் தலையில் பொருத்தப்பட்ட பின்
அடுத்ததாக அமுக்க முறையில் செயற்படும் vaccum எனப்படும் கருவிகள்.இவை ஒரு நுனியில் சிறு குடுவை( கோப்பை போல- cup) கொண்டிருக்கும் , இந்த குடுவைகள் குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டு மறு முனையில் எதிரான அமுக்கம் கொடுக்கப் படும் போது அவை குழந்தையின் தலையின் ஒரு பகுதியை உள் நோக்கி இழுத்து பொருந்தி விடுகின்றன.பின்பு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.
Vaccum கருவிகள்
Vaccum மூலம் ஒரு குழந்தை பிறக்கிறது
இந்தக் கருவிகள் குழந்தை பிறப்பதற்கான வழி போதியதாக இருந்தால் மட்டுமே பாவிக்கப்படும். மாறாக பிறப்பு வழி போதியதாக இல்லாவிட்டால் சிசேரியன் செய்வதே உகந்தது. இது வைத்தியரினாலேயேதீர்மானிக்கப்படும்.
10 comments:
நான் தங்களுடைய தளத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு
வந்தேன். மிகவும் உபயோகமான தகவல்களை அளித்திருந்தீர்-
கள். முக்கியமாக சிசேரியன் பற்றி சிறப்பாக விளக்கி அது
தொடர்பான காணொளியையும் இணைத்தது நன்றாக இருந்-
தது.
என் மனைவிக்கு சிசேரியன் பற்றி சில சந்தேகங்கள் இருந்தன.
தங்களின் பதிவின் மூலம் தீர்த்து வைத்தேன்.
இது வரை தமிழ் மணம் மூலமாக ஓட்டு
போட்டதில்லை. இருந்தாலும் என்னையும் கூட்டாளியாக
சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி.
ஓட்டும் போட்டாகி விட்டது.
இந்த பதிவுப் பற்றி....
சில தினங்களுக்கு முன் 3 இடியட்ஸ் திரைப்படத்தில் இரண்-
டாவதாக நீங்கள் விளக்கிய கருவியை அமீர்கான் உருவாக்கு-
வதாக காட்சி வரும்.
அதற்கு முன்பு வரை மருத்துவர்கள் தங்கள் கைகளை யோனி
வழியே உள்ளே நுழைத்து தலையை பிடித்து வெளியில்
இழுப்பார்கள் என்று எண்ணியிருந்தேன்.
தங்களின் பதிவைப் பார்த்ததுமே இரண்டாவது கருவியைப் பற்றி
அறிந்து கொண்டேன்.
எனது சந்தேகம் என்னவெனில் போர்கெப்ஸ் மூலம் குழந்தையை
வெளியில் எடுக்கும் போது குழந்தைக்கு காயம் படாதா ?
ஆகா!! மிக எளிமையாக விளக்கி விட்டீர்கள், தொடருங்கள், வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம் சாதரணமாக ஆங்கில தளங்களில் மட்டும்மே கூடுதல் விளக்கம் கிடைக்கும் சமீபத்தில் தான் தங்கள் தளம் பார்த்தேன் எல்லாவற்றையும் படித்து தெரிந்துகொள்ள ஆவல்
தொடரட்டும் தங்கள் பணி சிறப்பாக
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
தங்கள் பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி இருப்பினும் தாங்கள் பதில் அளித்தால் என் சந்தேகம் தீர உதவியாய் இருக்கும்
கடந்த சில மாதங்களாக எனக்கு தொண்டையில் எப்பொழுதும் சளி ஒட்டி இருப்பது போல இருக்கும் வெளியில் காரி துப்ப நினைத்தாலும் மிக எளிதாய் முடிவதில்லை சில நேரங்களில் இதற்கென மெனக்கெட்டு காரி துப்ப முயற்சிக்கும் போது வெளை நிறத்திலான சளி வருகிறது சில நேரங்களில் அப்படி சளியை காரி துப்பும் போது சளி துண்டாக தனியே வந்து வெளியில் விழும் நான் இங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையிலும் மற்றும் ஒருவிதபட்ட தெரிந்த மருத்துவமனைகளுக்கும் சென்று மருத்துவரை கண்டேன் பிரச்சினைகளை அறிவதற்காக தொண்டை, மூக்கு மற்றும் நெஞ்சுப்பகுதியில் கதிரியக்கபடம்(X-RAY)எடுத்து பார்த்தாகிவிட்டது மேலும் ஒரு முறை இரத்த பரிசோதனையும் செய்து பார்த்தாகி விட்டது அதன் பின்னர் நிறைய மாத்திரைகள் சாப்பிட்டு விட்டேன் ஆனால் இன்னமும் என் பிரச்சினை தீரவில்லை மருத்துவரிடம் இது எதனால் என கேட்டால் கால நிலையின் மாற்றத்தால் ஏற்படும் அலர்ஜி என்கிறார்கள் இதுவரை சரியாகவில்லை,மேலும் நமது நாட்டில் போல மருத்துவர்கள் நமது பிரச்சினையை பொறுமையுடனும் கேக்க மறுக்கிறார்கள் பின்னர் மொழிப்பிரச்சினையும் இருக்கிறது இதனால் நமது பிரச்சினையை சரியாக சொல்லி புரியவைக்க முடியவில்லை இதுவரை இந்த பிரச்சினைக்காக 15,000 ரூபாய் வரை செலவழித்திருக்கிறேன் பலன் தான் இல்லை,எனக்கு சைனஸ் பிரச்சினை இருப்பதாக சொல்லி தினமும் மூக்கில் ஸ்பிரே செய்ய சொல்லியிருக்கிறார் பின்னர் இது ஒன்றும் பிரச்சினை இல்லை எனவும் சொல்கிறார் என்னை போன்ற வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் சளி பிரச்சினை இருந்தாலும் விசா அடிப்பதில் பிரச்சினை ஏற்படும்
தயவுசெய்து இதை எனது தாழ்மையான வேண்டுகோளாக எடுத்துகொண்டு சந்தேகத்திற்கு விளக்கமளித்தால் உதவியாய் இருக்கும்
தங்கள் இதை இங்கே எழுதமுடியாவிட்டாலும் எனது மின்னஞ்சலிலாவது பதில் அளிக்கவும்
gnanasekarnagu(at)gmail(dot)com
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
ஜிஎஸ்ஆர் said...
தங்கள் பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி இருப்பினும் தாங்கள் பதில் அளித்தால் என் சந்தேகம் தீர உதவியாய் இருக்கும்//
நிச்சயமாக பதிலை ஒரு பதிவாகவே இடுகிறேன் ... கொஞ்சம் காத்திருங்கள் , அனேகமாக நாளையே இட முயற்ச்சிக்கிறேன்
Sivakumar said...
ஓட்டும் போட்டாகி விட்டது.
இந்த பதிவுப் பற்றி....
சில தினங்களுக்கு முன் 3 இடியட்ஸ் திரைப்படத்தில் இரண்-
டாவதாக நீங்கள் விளக்கிய கருவியை அமீர்கான் உருவாக்கு-
வதாக காட்சி வரும்.
அதற்கு முன்பு வரை மருத்துவர்கள் தங்கள் கைகளை யோனி
வழியே உள்ளே நுழைத்து தலையை பிடித்து வெளியில்
இழுப்பார்கள் என்று எண்ணியிருந்தேன்.
தங்களின் பதிவைப் பார்த்ததுமே இரண்டாவது கருவியைப் பற்றி
அறிந்து கொண்டேன்.
எனது சந்தேகம் என்னவெனில் போர்கெப்ஸ் மூலம் குழந்தையை
வெளியில் எடுக்கும் போது குழந்தைக்கு காயம் படாதா ?//
நன்றி நண்பரே !
குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன..அது பற்றி கூறி பயத்தை ஏற்படுத்தி விட வேண்டாமே என்று விட்டு விட்டேன்..
மற்றும் இதனால் ஏற்பாடு பாதிப்பை விட , இதை பாவித்து குழந்தையை எடுக்காமல் விடும் போது அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இருக்கும் போதே இது பாவிக்கப்படுகிறது. எல்லோரிலும் இது பாவிக்கப்படுவதில்லை
சைவகொத்துப்பரோட்டா said...
ஆகா!! மிக எளிமையாக விளக்கி விட்டீர்கள், தொடருங்கள், வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பரே! தொடரும் ..
நல்ல விளக்கம். நன்றி.
மற்றும் ஒரு அருமையான பதிவு அதுவும் எளிமையான தமிழில்.வளர்க்க உங்கள் பணி.
Post a Comment