Friday, March 12, 2010

உடலுறவின் பின்பு ரத்தம் வந்தால் கவனம் !

சில பெண்களுக்கு உடலுறவின் பின்பு அவர்களின் பெண் உறுப்பிலே இரத்தம் வெளிப்படலாம்.குறிப்பாக சற்று வயது முதிர்ந்த பெண்களிலே ( நாப்பது வயதலவான) பெண்களிலே உடலுறவின் பின் ரத்தம் வெளி வருமானால் உடனடியாக அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
ஏனென்றால் இது கருப்பைப் பையின் கழுத்துப் பகுதியிலே ஏற்படுகின்ற புற்று நோயின்(cervical carcinoma) ஒரு அறிகுறியாக கூட இருக்கலாம்.
புணர்ச்சியானது ஆங்கிலத்திலே coitus எனப்படுகிறது. புணர்ச்சியின் பின்பு ரத்தம் வெளிப்படுதல் post coital bleeding எனப்படுகிறது.
இப்படியான ரத்தப் போக்கு புற்று நோய் தவிர்ந்த வேறு பல நோய்களிலும் ஏற்படலாம் என்றாலும் , இவர்களில் புற்று நோய் இல்லை என்பதை வைத்தியரை நாடி உறுதி செய்து கொள்வது நல்லதாகும்.
உடலுறவின் பின் ரத்தம் போவது தவிர்ந்த கருப்பைக் கழுத்து புற்று நோய்க்கான மற்றைய அறிகுறிகளாவன , சாதாரணமாக மாதவிடாய் ஏற்படும் காலம் தவிர்ந்து மாதவிடாய்க் காலத்துக்கு இடைப்பட்ட நேரத்தில் ரத்தம் வெளிவருதல்(intermenstrual bleeding), மற்றும் பிறப்பு உறுப்பிலே இருந்து தகாத மனமுடைய (நாற்றமடிக்கும் ) திரவங்கள் வெளிவருதல்(offensive vaginal discharge).

4 comments:

Muthu Kumar N said...

துமிழ் அவர்களே,

நல்ல தகவல், வளர்க உங்கள் சீ்ரிய பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

ரோஸ்விக் said...

தமிழிஷ் ஒட்டு பட்டையை மீண்டும் வைக்கலாமே. :-)

prabhadamu said...

நல்ல தகவல் நண்பரே. தொடருட்டும் உங்கள் பணி.

eanshan said...

சுய இன்பத்தின் காரணமாக உடல் மெலிவு உண்டாகுமா?
விந்து உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

அன்ஷன்