Wednesday, July 21, 2010

நீரழிவு நோயும் உடலுறவும் !

கேள்வி


வணக்கம் ஐயா

எனக்கு   வயது. 5 வருடமாக எனக்கு நீரழிவு நோய் உள்ளது .மாத்திரைகளும் பாவித்து வருகிறேன்.
இப்போது சில மாதங்களாக எனக்கு உடலுறவு மீது நாட்டம் குறைந்து விட்டது. நண்பர் ஒருவரிடம் கேட்ட பொது இது நீரழிவு நோயால் ஏற்பட்டது என்கிறார். இது உண்மையா? தயவிசெய்து விளக்கவும்.

தயவு செய்து பெயரை வெளியிட வேண்டாம்.

பதில்


உங்களுக்கு உடலுறவின் மீது நாட்டம் குறைந்து விட்டதாக கூறினாலும் எவ்வாறான முறையில் நாட்டம் குறைந்துள்ளது என்று கூறவில்லை.
அதாவது மன ரீதியாக உடலுறவில் நாட்டம் இல்லையா? அல்லது உடலுறவில் ஆர்வம் இருந்தும் விறைப்புத் தன்மையில் பிரச்சினை உள்ளதா என்று கூறவில்லை.

ஏனென்றால் , நீண்ட காலமாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால் விறைப்புத் தன்மை குறையலாம்.இதனால் உடலுறவு பாதிக்கப் படலாம்.

மாறாக நீரழிவு நோயாளிகளுக்கு சாதாரண விறைப்புத் தன்மை இருக்கும் போது உடலுறவின் மீது நாட்டம் குறைவது இல்லை.

உங்களுக்கு ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைவாக இருக்குமானால் அது நீரழிவு நோயால் ஏற்பட்டதாக இருக்கலாம்.அவ்வாறு இல்லாமல் மனவியல் ரீதியாக உடலுறவின் மீது நாட்டம் குறைந்தால் ( சாதாரணமான விறைப்பு  இருக்கும் போது) அது நீரழிவால் ஏற்பட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் மிகக் குறைவு.
அதற்கான காரணமாக உங்கள் மன அழுத்தமே இருக்கும்.

எது எவ்வாறாயினும் முதற்படியாக நீங்கள் உங்கள் சீனியின் அளவைக் மிகவும் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டும். இல்லா விட்டால்  உங்கள் பிரச்சினை இன்னும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

மேலும் கீழே உள்ள சுட்டியையும் பாருங்கள்.


ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்

1 comment:

பார்த்திபராசன் said...

நான் 2007ஆம் ஆண்டில் இருந்து இன்சுலின் பாவித்து வந்தேன். சாம்பிடமதல் ஏற்ற வேண்டும். காலை, மதியம் , இரவு 5,2,3 என்ற வீதத்தில்ப் பாவிக்கத் தொடங்கினேன். நாளடைவில் அக்ராபெயிட், குமலொக், பொற்றாபொனே என மாற்றிக்கோடுத்துக்கொண்டே இருந்தனர். அளவும் 30,15,20 என ஏறிக்கோண்டே போயிற்று. திடிரென ஆணுறுப்பு இயங்க மறுத்து விட்டது. எனக்கு வயது 50 அதனால் நான்அதைப் பொருட்படுத்தவில்லை. வயது போய்விட்டதோ என நினைத்துப் பேசாமல் இருந்து விட்டேன். இது 2010 ஏப்ரல் நடந்தது. மே மாதத்தில் என் மனைவி எவ்வளவு முயற்சித்தும் என்னால் முடியவில்லை. அதன்பின்னர் வைத்தியசாலை சென்றேன். சீனியன் அளவு 700 மி.கி.. வைத்தியர்கள் பயந்து விட்டனர். 12 தினங்கள் வைத்தியசாலையில் இருந்தேன். வயிறு தொடை என இரவு பகலாக ஊசிபோட்டு மிகவும் நொந்து விட்டேன். டாக்ரர் முருகேசுவிடம் தொலைபேசியில் உரையாடினேன். அவர் பணம் கறப்பதிலேயே குறியாக இருந்தார். நம்பிக்கை இழந்த நிலையில் அதன் பின்னர்தான் வலைப் பதிவுகளில் தேடிப் பல குறிப்புகள் எடுத்தேன். குறுஞ்சா இலையை இலங்கையில் இருந்து யேர்மனிக்கு எடுத்து உலர வைத்துப் பொடியாக்கிப் போத்தலில்போட்டு வைத்தேன். தேருடன் சாயமாகக் குடிகச்கவும் தேனுடன் குழைத்து நக்கவும். இன்று 5 மாதங்கள் சென்று விட்டன. ஆனாலும் இன்னமும் பாவிக்கவில்லை. அதனைக் கல்லுரலில் இடித்துப் பொடி செய்யும்போது தூசியாக நாசியில் ஏறி அன்று முழுக்கத் தும்மிய படி இருந்தேன். மறு நாள் சர்க்கரையின் அளவு குறைந்திருந்தது. தினமும் அளந்து எழுதி டாக்ரரிடம் கொடுக்க வேண்டும். ஆர்ச்சரியம். படிப்படியாக குறைது கொண்டேவந்தது. இப்போ மருந்து எதுவும் பாவிக்க தேண்டாம் என டாக்ரர் கூறிவிட்டார். மே மாதக் கடைசியில் இருந்து பாலியல்ப் புனர்ச்சியிலும் எந்தச் சிக்கலும் இல்லை. மாதம் 8-10 தடவைகள் மனைவியுடன் சந்தோச மாக உள்ளேன்.

முக்கிய குறிப்பு 1) குறிஞசா இலையின் பொடி நாசியூடாக நுரையீரல் வழியாக இரத்தத்தில்க் கலந்துதான் இந்த ஆர்ச்சரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். யேர்மனிய டாக்டர்கள் குழப்பிப்போய் உள்ளனர் இது சாத்தியமான விடயம்தானா என. மெடிக்கல்மிராண்ட் என ஆச்சரியப்படுகிறார்கள். 15.12.2010 ஒரு முழுமையான பரிசோதனை நடத்த உள்ளனர் எனது உடம்பை. அவாகளின் ஆர்ச்சரிய வினக்களில் இருந்து நான் புரிந்து கொண்டது நான் இப்போது சர்க்கரை நோயாளி இல்லை.

நீண்ட விக்கம் என சலிக்காது யாவற்றையும் சொன்னேன் ஏனெனில் என் தமிழ் உறவுகள் யாராவது நன்மை பெறவேண்டும் என்ற அவாவினால். இது ஒரு விபத்து. ஆனாலும் இன்ப விபத்து.