Saturday, July 24, 2010

வெட்டப்படும் பிறப்புறுப்பு(வீடியோ) - ஒரு மருத்துவத் தகவல்

கேள்வி
 
your are doing very great job in tamil society
what is the meaning of episiotomy or laceration
5 weeks back my wife normaly delivered baby that time doctor put some stiches in the vagina the wount still not heal stil have pain please advice.
from
Sadiq
Dubai
U.A.E

பதில்

ஏற்கனவே இது பற்றி நான் இட்ட இடுகையை மீள் பதிவிடுகிறேன் வாசித்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே!


வெட்டப்படும் பிறப்புறுப்பு(வீடியோ) - ஒரு மருத்துவத் தகவல்

குழந்தை பிறக்கும் போது பிறப்பு வழி சரியாக விரிந்து கொடுக்காத போது குழந்தைப் பிறப்பை இலகுவாக்குவதற்காக தாயின் பிறப்பு உறுப்பின் ஓரம்  வெட்டப்படும்.
இது எபிசியோட்டமி(Episiotomy) எனப்படும்.

இந்த செயமுறையானது அநேகமாக முதல் பிரசவத்தின் போது தேவைப்படும்.

உண்மையில் வெட்டப்படும் பகுதிக்கு விறைப்பு ஊசி போடப்பட்டே வெட்டப்பட வேண்டும் என்றாலும் எமது நாடுகளிலே எந்த விதமான ஊசிகளும் போடபபடாமலேயே வெட்டப்படுகின்றன. அவ்வாறு விறைப்பு ஊசி போடாமல் வெட்டினாலும் பிரசவ வேதனையில் இருக்கும் அந்த தாய்க்கு வெட்டப்படும் வேதனை மிகவும் குறைவாகவே உணரப்படும். ( அதாவது வெட்டப்படும் வலியை விட பிரசவ வேதனை அதிகம் என்பதால் மூளை பிரசவ வேதனையையே அதிகமாக உணரும்)

குழந்தையின் தலை பிறப்பு வழியினூடாக தெரியத் தொடங்கும் போதே பிறப்புறுப்பு வெட்டப்படும்.( பிரசவத்தின் இறுதிப் பகுதி)

குழந்தை பிறந்த பின் வெட்டிய பகுதி தைக்கப்படும்.

இதன் பின் விளைவுகளாக வெட்டிய இடத்தில் இரத்தப் போக்கு , கிருமித் தொற்று போன்றவை ஏற்படலாம் .

நேர்த்தியாக வெட்டப் பட்டு , தைக்கப் பட்ட பெண்களிலே இதனால் தழும்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

இனி இந்த வீடியோவைப் பாருங்கள் இன்னும் கொஞ்சம் விளங்கும்( படத்தை கிளிக்குங்கள்)...











உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.



















No comments: