Monday, July 26, 2010

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் பாவிக்க வேண்டிய மருந்துகள்

இது ஒரு தொடர் இடுகை. முந்திய இடுகைகளை கீழே  உள்ள சுட்டிகள் மூலம் வாசியுங்கள்.



மாரடைப்பு - இடுகை 1
மாரடைப்பு - இடுகை  2

மாரடைப்பு - இடுகை 3

மாரடைப்பு - இடுகை 4




மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் ஆரம்ப அபாய நிலையை தாண்டிய பின்னும் தொடர்ச்சியாக பல மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இன்னுமொருமுறை மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

இன்னுமொருமுறை மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு பல மருந்துகள் கொடுக்கப்படும் .அவை தொடர்ச்சியாக பாவிக்கப் பட வேண்டு.

அந்த மருந்துகள் பற்றி சிறு அறிமுகம்...

அஸ்பிரின்(Aspirin)- மிகவும் முக்கியமான மருந்து. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் வாழ்க்கை முழுவதும் இதை தொடர்ச்சியாக பாவிக்க வேண்டும்.இது இரவிலே 75mg அல்லது 150mg என்ற அளவிலே பாவிக்கப்படலாம் .
இந்த மாத்திரையின் பக்க விளைவாக சில வேளை கஸ்ரைர்ரிஸ்/Gastritis  (வயிற்று எரிவு) ஏற்படலாம். அவ்வாறு வயிற்று வலி ஏற்படுபவர்கள் இந்த மாத்திரை பாவிப்பதை நிறுத்தாமல் வைத்திய ஆலோசனையை பெறவேண்டும்.

குலோப்பிடோகிரல்(Clopidogrel)- இது சில மாதங்களின் பின் நிறுத்தப்படலாம். இதுவும் இரவிலே .. என்ற அளவிலே உட்கொள்ளப்பட வேண்டு.

அர்ரனலோல்(Atenalol) - இது காலையில் .. அல்லது .. என்ற அளவிலே பாவிக்கப் படலாம். ஆஸ்த்மா நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையை தவிர்த்தல் வேண்டும்.

ISMN -இது காலையில் .. என்ற அளவிலே பாவிக்கப் படலாம்.இதனால் சில வேளை தலையிடி ஏற்படலாம்.

அர்ரோவாஸ்ரேர்ரின்(Atrovastatin)- இது கொலஸ்ரோலைக் குறைப்பதற்கான மாத்திரையாகும்.கொலஸ்ரோல் சாதாரண அளவிலே இருந்தாலும் கூட மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இந்த மாத்திரை கட்டாயமாக விழுங்க வேண்டும்.


மேலும் அவர்களுக்கு எனப்படும் நாக்கின் கீழே வைப்பதற்கான GTN மாத்திரையும் வழங்கப்படும். அந்த மாத்திரை நீங்கள் நெஞ்சு வலி ஏற்படும் போது மட்டுமே நாக்கின் கீழே  வைக்க வேண்டும்.

சில பேருக்கு லோசார்ட்டன் (Losartan) எனப்படும் மாத்திரையும் சில வேளை வழங்கப் படலாம்.

தொடரும்...

1 comment:

கோவி.கண்ணன் said...

//அஸ்பிரின்(Aspirin)- மிகவும் முக்கியமான மருந்து. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் வாழ்க்கை முழுவதும் இதை தொடர்ச்சியாக பாவிக்க வேண்டும்.இது இரவிலே 75mg அல்லது 150mg என்ற அளவிலே பாவிக்கப்படலாம் .//

சர்கரை குறைபாடு உள்ளவர்களும் 20Mg அளவுக்கு நாள் தோறும் ஒன்று எடுத்துக் கொண்டால் இரத்தம் உறையாமல் ஓட்டம் சீராக இருக்கும்.