Wednesday, July 21, 2010

படுக்கையில் சிறுநீர் கழித்தல்


கேள்வி

உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சார்.

எனது 3 வயது மகன் இன்னும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறான். இது  சாதாரணமானதா?
எத்தனை வயதில் இந்த பழக்கம் இல்லாமல் போகும்?
(ஆங்கிலத்தில் வந்த கேள்வியை தமிழாக்கி உள்ளேன்)

அன்புடன்
திருமதி லீலா

பதில்

படுக்கையில் சிறுநீர் கழிப்பது Enuresis  எனப்படும்.  குழந்தைகளிலே ஆறு வயது வரை இது சாதாரண நிகழ்வாகும். ஆறு வயதைக் கடந்த பின்பும் இந்தப் பழக்கம் இருந்தால் மட்டுமே இதற்காக வைத்திய உதவியை நாட வேண்டும்.

ஆனாலும் படுகையில் சிறுநீர் கழிக்கும் பழக்கும் இல்லாமல் போன ஒரு குழந்தை மீண்டும் படுக்கையில் சிறுநீர் கழிக்குமானால் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தையாயினும் அதற்கான மருத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு மூன்று வயதுக் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை விட்டு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிறுநீர் கழிக்கத் தொடங்குமானால் அந்தக் குழந்தையையும் வைத்தியரிடம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு படுக்கையில் சிறுநீர் கழிப்பதை உருவாக்கக் கூடிய நோய் நிலைமைகலாவன ,
                  
  1. சிறுநீர் கிருமித் தோற்று
  2.  சிறுபிள்ளைகளுக்கு ஏற்படும் நீரழிவு(நீரழிவு வகை ௧)
  3. அதிகரித்த மன அழுத்தம்
  4. நரம்புப் பிரச்சினை 
உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

1 comment:

Leela said...

thanks