Saturday, April 10, 2010

ஆண்களுக்கான கர்ப்பத்தடை (வீடியோவுடன்)

முன்னைய இந்தப் பதிவிலே பெண்களுக்கு எப்படி கருத்தடை செய்யப்படுகிறது என்று விளக்கி இருந்தேன். பெண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது அந்தப் பெண்ணை முற்று முழுதாக மயக்கி , ஒரு சத்திர சிகிச்சை கூடத்திலே செய்யப்படும் ஒரு சத்திர சிகிச்சையாகும். இதனால் அந்தப் பெண்ணுக்கு பல பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
உதாரணமாக மயக்க மருந்தினால் ஏற்படும் பாதிப்பு , வயிற்றை வெட்டி செய்யும் சத்திர சிகிச்சை என்பதால் தொற்றுக்கள் , இரத்தப் போக்குகள் என்பவை ஏற்படவும் சாத்தியம் உள்ளது.

ஆனால் இந்த பாதிப்புகள் மிகவும் குறைந்த முறையில் ஆண்களிலே மிகவும் இலகுவாக கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப் படலாம்.

ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை சத்திர சிகிச்சையானது Vasectomy எனப்படுகிறது.

பெண்களிலே நடைபெறும் சத்திர சிகிச்சையில் முட்டை கருப்பை நோக்கி நகரும் பலோப்பியன்(fallopian) குழாய் வெட்டித் தைக்கப்படும்.
ஆண்களிலே கூட அதற்கு நிகராக விந்துகள் பயணிக்கும் குழாயான Vas deferens எனப்படும் குழாய் வெட்டித்தைக்கப்படும்.

பெண்களிலே பலோப்பியன் குழாய் வயிற்றின் உள்ளே இருப்பதால் வயிற்றை வெட்டியே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படவேண்டும்.

ஆனால் ஆண்களிலே இந்த குழாயானது விதைப்பையினுள் ஆரம்பித்து வயிற்றின் அடிப்ப்குதயின் ஊடாக ஆணுறுப்பை அடைந்து விந்துகளை வெளியேற்றும்.

இவ்வாறு இந்தக் குழாய் விதைப் பையினுள் இருப்பதால் இலகுவாக விதைப் பையில் சிறிய துளை போட்டு அந்தக் குழாய்களை வெட்டித் தைத்துவிடுவதன் மூலம் விந்துகள் வெளியேறுவது தடைப்பட்டு கர்ப்பம் உருவாகுவது தடைப்படும்.

இதற்காக எந்த மயக்க மருந்துகளும் தேவை இல்லை , சத்திர சிகிச்சை கூடமும் தேவை இல்லை.

வெறுமனே வெட்டப்படும் இடத்தை மட்டும் விறைக்கச் செய்யும் மருந்துகளை பாவித்து சத்திர சிகிச்சை கூடம் இல்லாத வைத்திய சாலைகளில் கூட இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படலாம்.

இதற்காக வெட்டப் படும் துளையும் மிகவும் சிறிய(ஒரு சில cm)  காயமே.

இந்த சத்திர சிகிச்சை செய்த பின்பு தடைப்படுவது விந்துகளின் வெளியேற்றம் மட்டுமே . ஆனால் ஒரு ஆண் உறவில் ஈடுபடும்   போது வெளிவரும் சுக்கிலப் பாயத்தில் இருக்கும் ஏனைய திரவங்கள் வழமை போல் வெளிவருவதால் அந்த ஆணின் ஆண்மையிலோ அல்லது, உடலுறவின் மீதான ஆர்வத்திலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

இந்தச் சத்திர சிகிச்சை செய்து கொள்ளுவதால் ஆண்மை குறையும் என்ற மூட நம்பிக்கையே ஆண்கள் கர்ப்பத்தடை செய்யாமல் பெண்கள் மட்டும் கர்ப்பத்தடை செய்து கொள்ளும் அவலம் எம் சமூகத்தில் இருப்பதற்கானகாரணமாகும்.


ஆண்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ! மிகவும் எளிமையாக எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் நீங்கள் கருத்தடை செய்யும் வசதி இருக்கும் போது என் உங்கள் மனைவியை மிகவும் சிக்கலான சத்திரசிகிச்சைக்கு உட் படுத்துகிறீர்கள். 
நீங்கள் உங்கள் மனைவியை உண்மையில் நேசிப்பவர் என்றால் நீங்களே கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.


      
    எவ்வளவு இலகுவாக இந்த சத்திர சிகிச்சை நடைபெறுகிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள் !



4 comments:

மதுரை சரவணன் said...

explain with video is good.its simple. very good article.

Anonymous said...

Reversal is possible in Vasectomy Doctor ?

ஜிஎஸ்ஆர் said...

ஆச்சிரியாமாய் இருக்கிறது எவ்வளவு எளிதாக செய்து முடிக்கிறார்கள் தொடந்து இன்னும் பல மருத்துவ மர்ம முடிச்சுகளை திறந்து எழுதுங்கள்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

வடுவூர் குமார் said...

சிக‌ப்பு க‌ல‌ரில் போட்டிருக்கும் எழுத்து தான் முக்கிய‌ம்!! :-)
அந்த‌ குழாயை வெட்டினாலும் 20 முறை க‌ழித்தே பாதுப்பான‌ உட‌லுற‌வு வைத்துக்கொள்ள‌லாம் என்று எங்கோ ஓரிட‌த்தில் ப‌டித்த‌ ஞாப‌க‌ம்,ச‌ரியா?