பாலியல் நோய்கள் -2
மேலே சொடுக்கி இந்த தொடர் இடுகையின் முந்திய இடுகைகளை பாருங்கள்
சிபிலிசு (Syphillis)
இது ட்ரிபோனாமா பாலிடம்(Treponema pallidum )எனும் பக்டீரியாவால் ஏற்படுகின்றது.
இது தனது அறிகுறிகளை மூன்று பருவங்களாக வெளிக்காட்டும்.
முதற் பருவத்திலே பிறப்பு உறுப்புக்களைச் சுற்றி காயங்கள் ஏற்படும். அவை சற்றி தடிப்பான காயங்களாக இருந்தாலும் அவை நோவினை ஏற்படுத்தாது.
படம் -1
படம் -2
இந்த பருவத்தில சுகமாக்கப்படா விட்டால் அந்தக் கிருமி பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களில் இருந்து குருதியை அடைந்து உடலின் ஏனைய பகுதிகளுக்கு சென்று அறிகுறிகளை ஏற்படுத்தும்.இது இரண்டாவது பருவம் எனப்படுகிறது.
அதாவது இரண்டாம் பருவத்தில் கிருமிகள் உடலின் மற்றைய பாகங்களுக்கு பரவுவதால் உள்ளங்கை , கால் , முகம் போன்ற பகுதிகளில் சிரங்குகள் ஏற்படும். இதன் பொது காய்ச்சல் , மூட்டு வலி , தலை வலி போன்றவையும் ஏற்படலாம்.
இரண்டாம் பருவத்தில் ஏற்படும் பாதிப்புக்கள்
இந்த இரண்டாவது பருவமும் சரியாக குனமாக்கப்படா விட்டால் அடுத்த பருவமான மறை பருவம் என்ற நிலை ஏற்படும். அதாவது இரண்டாவது பருவத்தில் ஏற்படும் அறிகுறிகளான சிரங்கு, காய்ச்சல், மூட்டு வலி போன்றவை மறைந்து நோய் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாத நிலையை அடையும்.
இவ்வாறு அறிகுறிகள் மறைந்தாலும் நோய் மற்றவர்களுக்கு தொற்றிக் கொண்டேதான் இருக்கும்.
இந்த மறை பருவமும் சரியான மருத்துவச் சிகிச்சை அளிக்கப் படா விட்டால் நரம்புத் தொகுதி , இதயம் என்பவை பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம்.
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால் இந்த நோய் முற்றாக குணமாக்கப் படலாம்.
அவையாவன...
- கருச் சிதைவு
- குழந்தை செத்துப் பிறத்தல்
- குறைபாடுள்ள குழந்தைகள்
- சிபிலிசு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்றவை.
தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து பெண்களும் கர்ப்பம் தரித்தவுடன் VDRL என்ற சோதனை செய்து தங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவது உகந்தது.இலங்கையில் உள்ள அனைத்துப் கர்ப்பிணிகளுக்கும் அரசினாலேயே இலவசமாக இந்தச் சோதனை செய்யப் படுகிறது.
2 comments:
எத்தனை முறை தங்களை பாரட்டுவது என தெரியவில்லை இருப்பினும் பாரட்டுவதை தவர்க்க முடியவில்லை ஒரு சாதரண அடிப்படை கல்வி அறிவு மட்டும் உள்ள ஒரு நபருக்கும் இது அழகாக புரிந்து விடும் தொடர்ந்து எழுதுங்கள். முன்பே தங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன் தங்கள் பதிவுகளை பிடிஎப் புத்தகமாக இனைக்கும் வசதி இனைத்தால் இன்னும் வசதியாயிருக்கும்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
தங்களின் முயற்சி பாராட்ட தக்கது
Post a Comment