ஒரு குழந்தை எப்படி உருவாகிறது என்று முன்னைய இந்த இடுகையில் பதிவிட்டிருந்தேன்.ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.
ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.
இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRA UTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.
இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )
இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.
கருப்பையினுள் விந்துகளை செலுத்த பயன்படும் குழாய்
இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.
கருப்பையினுள் செலுத்தப்படுவதை விளக்கும் படம்.
சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.
ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.
இது பற்றி ஒரு வீடியோ
5 comments:
IUI செய்வதற்கு வயது வரம்பு உள்ளதா?
எவ்வளவு காலம் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும்??
எவ்வளவு பணம் செலவாகும்?
வசந்தன் said...
IUI செய்வதற்கு வயது வரம்பு உள்ளதா?
எவ்வளவு காலம் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும்??
எவ்வளவு பணம் செலவாகும்//
வயது வரம்பு இல்லை. எத்தனை வயதிலும் செய்து கொள்ள முடியும். ஆனாலும் மற்ற முயற்சிகள் மூலம்
கருத்தரிக்கவிடில் இறுதி முயற்சியாகவே இது செய்யப்படும்.
மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. செய்தவுடன் வீட்டுக்குத் திரும்பி விடலாம்.
அதற்காக பயன்படுத்தப்படும் கருவி நூறில் இருந்து ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் கிடைக்கும். அது தவிர மிச்சச் செலவு
உங்கள் வைத்தியர் அதற்காக எவ்வளவு அவரது கூலியாக எடுக்கிறார் என்பதைப் பொறுத்து வேறுபாடும்.
சென்னையில் 10000 வசூலிக்கின்றனர். சிறு நகரங்களில் குறையலாம்.
ஆனால் ஒரு பிரச்சன்னை என்னவேனில்,
தங்கள் மருத்துவமனை அதிகபட்சம் வெற்றி உள்ளதாக காட்ட , தம்பதியரின் சம்மதம் இல்லமலே வேறு ஒருவரின் விந்து பயன்படுத்தப்படுவது உண்டு .
Vinoth said...
சென்னையில் 10000 வசூலிக்கின்றனர். சிறு நகரங்களில் குறையலாம்.
ஆனால் ஒரு பிரச்சன்னை என்னவேனில்,
தங்கள் மருத்துவமனை அதிகபட்சம் வெற்றி உள்ளதாக காட்ட , தம்பதியரின் சம்மதம் இல்லமலே வேறு ஒருவரின் விந்து பயன்படுத்தப்படுவது உண்டு .
November 27, 2010 12:25 அம//
அதற்கான சந்தர்ப்பம் இல்லை நண்பரே. யாருடைய விந்தை பயன் படுத்தினாலும் வெற்றி வீதம் ஒன்றுதான்.ஆனால் ஆணுக்கு விந்து
சரியான அளவிலே இல்லை என்றால் அவர்களின் அனுமதியுடன் மற்றவர்களின் விந்தினை பாவிக்கலாம்
தகவலுக்கு நன்றி டாக்டர் மற்றும் வினோத்
மேலும்
இதன் மூலம் கருத்தறிக்கும் வாய்ப்பு எவ்வளவு % ?
ஒரு முறை எடுத்துகொண்டால் போதுமா?
சென்னையில் நல்ல முறையில் செய்யும் மருத்துவமனை எதுவும் இருந்தால் நண்பர்கள் சொல்லவும்
Post a Comment