கேள்வி
டாக்டர் நான் இரண்டு வருடங்களாக கர்ப்பத்தடை மாத்திரைகளை பாவித்துவருகின்றேன். நான் மிகவும் ஒழுங்காகத்தான் பாவித்து வந்தேன் இருந்தாலும் கர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போதே கர்ப்பமாகி விட்டேன்.இப்போது இரண்டு மாதமாக முழுகாமல் இருக்கேன்.
கர்ப்பத்தடை மாத்திரை பாவித்ததன் விளைவாக குழந்தை அங்கக் குறைபாடோடு பிறக்கும் என்பதால் கருக்கலைப்புச் செய்யச் சொல்லி உறவினர்கள் கூறுகிறார்கள்.எனது கணவரும் நான் ஒழுங்காக மாத்திரை பாவிக்காததால்தான் இப்படியாகி விட்டதாக குறைபடுகிறார்.ஆனால் நான் ஒழுங்காகத்தான் மாத்திரைகளை உட்கொண்டேன். நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்படுகிறேன்.எனது குழந்தை குறைபாடோடு பிறக்கும் என்பது உண்மையா?
நான் கருவைக் கலைக்கத்தான் வேணுமா?
பதில்
நீங்கள் தேவை இல்லாமல் மனத்தைக் குழப்ப வேண்டிய அவசியம் இல்லை சகோதரி.
முதலாவதாக எந்தவொரு கருத்தடை முறையும் 100 வீதம் நம்பகமானதல்ல. எந்தவொரு கர்ப்பத்தடை முறையும் சிலவேளைகளில் பிழையாகிப் போகலாம். கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கூட அரிதாக கர்ப்பம் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது.
ஆகவே உங்கள் தவறு என்று இதில் எதுவுமே இல்லை. உங்கள் கணவரையும் இதை வாசிக்கச் சொல்லி அவரின் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.
அடுத்ததாக கர்ப்பத்தடை மாத்திரை உட்கொண்டதால் உங்கள் குழந்தை அங்க்லவீனமாகப் பிறக்கும் என்பதிலும் எந்தவிதமான உண்மையும் இல்லை. கர்ப்பத்தடை மாத்திரைகளில் உள்ளவை வெறுமனே ஹார்மோன்களே . இவை நமது உடலில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள்.இவற்றால் உங்கள் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது.
தேவை இல்லாத மூட நம்பிக்கைகள் காரணமாக மனதை அலட்டிக் கொள்ளாமல் சந்தோசமாக உங்கள் தாய்மைப் பருவத்தை அனுபவியுங்கள் .
உங்கள் சந்தேகங்களையும் என்ற yourdoubt@yahoo.com முகவரிக்கு அனுப்பி வை யுங்கள்.
மறக்காமல் தமிழ் மனத்தில் வாக்களித்து மற்றவர்களையும் இது போய்ச் சேரச் செய்யுங்கள்.
5 comments:
1+
கண்டிப்பாக கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு இருக்கும். இந்த கருவை அந்தப் பெண்மனி கலைத்துவிடுவதே சிறந்தது. பின்னர் காலம் காலமாக குறை உள்ள ஒரு குழந்தையை சுமக்க வேண்டியிருக்கும். இது என் அனுபவத்தில் கற்ற பாடம்.
கிணற்றுத் தவளை said...
கண்டிப்பாக கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு இருக்கும். இந்த கருவை அந்தப் பெண்மனி கலைத்துவிடுவதே சிறந்தது. பின்னர் காலம் காலமாக குறை உள்ள ஒரு குழந்தையை சுமக்க வேண்டியிருக்கும். இது என் அனுபவத்தில் கற்ற பாடம்.
//
அனுபவம் எல்லா வேளையிலும் சரியாகி விடுவதில்லை நண்பரே. உங்கள் அனுபவம் பல வருடங்களுக்கு முன்னதாக இருக்கும்.அந்தக் காலத்தில் பாவித்த மாத்திரைகளில் இருந்த
மருந்தின் அளவு மிகவும் அதிகம் அதனால் சிறு குறைபாடுகள் ( குழந்தையின்) பாலியல் வேறு பாட்டில் ஏற்பட்டது நிஜம். ஆனாலும் இப்போது பாவிக்கும் மாத்திரைகளோ
மிகவும் குறைவான அளவிலேயே மருந்தினைக் கொண்டிருக்கிறது.அதனால் பாதிப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.
மற்றும் நீங்கள் அனுபவத்தில் கண்ட குறைபாடுள்ள குழந்தை வேறு ஒரு காரணத்துக்காக குறைபாட்டைக் கொண்டிருக்கலாம். அதை கருத்தடை மாத்திரையோடு
முடிச்சுப் போட்டு மூட நம்பிக்கைகளை வளர்க்காதீர்கள்
அனுபவம் மட்டும் போதும் என்று தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்து அநியாயமாக ஒரு சிசுவைக் கொலை செய்யத் தூண்டாதீர்கள்.
சில நாடுகளில் இதற்காக கருக்கலைப்பு செய்வதே சட்ட விரோதமானதும் கூட...
பகிர்வுக்கு நன்றி ........ஓட்டும் போடாச்சு
மன்னிக்கவும் நான் எந்த வகையிலும் மருத்துவத் துறையை தரம் தாழ்த்தும் எண்ணத்தில் எனது கருத்தை பதியவில்லை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். எனது விஷயத்தில் பல மருத்துவர்கள் இது மருந்துகளின் பக்க விளைவுகளே காரணமாக இருக்கலாம் என்று ஏற்றுகொண்டுள்ளார்கள். இந்த ஆதங்கத்தில் தான் நான் உடனடியாக எனது கருத்தை பதித்தேன். எனக்கும் அப்போது 4/5 மருத்துவர்கள் ஒன்றும் ஆகாது என்றுதான் உறுதியாக சொன்னார்கள். இப்போது அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? இது போல குறை குழந்தைகளை சில தவறான ஆலோசனை பேரில் பெற்று வளர்க்கும் எங்களுக்கு மட்டுமே அதன் வலியும் பாதிப்பும் தெரியும் என்பதால் நல்ல எண்ணத்தில் எனது கருத்தை தெரிவிதேன்.
இதுவரை உங்களின் எந்த ஆலோசனைக்கும் எதிராக நான் கருத்து எழுதியதில்லை எல்லாவற்றையும் படித்து உங்கள் கருத்தை தெரிந்துக் கொள்வேன். அவ்வளவுதான். இதில் நான் நேரடியாக பாதிக்கப்பட்டதால் மட்டுமே எனது கருத்தை வெளியிட்டேன்.ஏதாவது தவறாக பட்டால் நான் வருந்துகிறேன். இதில் மூட நம்பிக்கைக்கு எங்கே இடம் வந்தது?
இதற்க்கு மேல் நான் சொல்வதற்க்கு ஏதும் இல்லை. இனி கேள்வி கேட்டவர் பாடு. நன்றி.
Post a Comment