Saturday, July 24, 2010

பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள்




கேள்வி

மருத்துவருக்கு வணக்கம் ........

..............எனக்கு தெரிந்த ஒரு குடும்ப் நண்பி .வயது 53...அவருக்கு நீரளிவும் வேறு பிரச்சினைகளும்  உண்டு. கற்ப் பை சிறு பருக்கள் ( fabroids )காரணமாக் அகற்ற  பட்டது பத்துவருடங்களுக்கு முன். தற்போது அவருக்கு பெண உறுப்பின் மடிப்ப பகுதிகளில் ....வியர்வை போன்ற (  அழுக்கு) போன்ற தன்மை இருக்கிறதாம். சிறு நீர் பை கட்டுபாடற்ற தன்மையும் ( urgency )உண்டாம். பெண்ணுறுப்பின் வெளி பகுதிகளில்  சில சமயம் கடி (அரிப்பு ) இருக்கிறதாம் மருத்துவர் ஆலோசனைப்படி ......ஒருவகை களிம்பு  பாவித்தும் தீரவில்லை.  இது ஒருவகை நோயா...சுத்தமின்மை காரணமா? உடற்பரும்னானவர். சற்று பருத்த வயிறு ...மார்பகங்கள். இரு சாதாரண மகப்பேறு கண்டவர். உடற் பயிற்சி செய்ய கடினம். அதிகம் நடந்தால் மூச்சு வாங்குகிறதாம். காலில் ....விழுந்து முழங்கால் சத்திர சிகிசை பெற்றவர் ....இரு முழங்காலும் இரவில் விறைப்பு உண்டாம். சற்று நோயாளி தான். சிறு நீரக புரத அதிகரிப்புக்கு ( celcept ) என்னும் குளிகை பாவிப்பவர். ( 320 g)......பெண உறுப்பு சம்பந்தமான் பிரச்சினைக்கு அறிவுரை சொல்லவும். ஆண் வைத்தியரிடம் செல்ல மிகவும் வெட்கம் கொண்டவர். இரவில் (adult diaper )பாவிப்பவர். ஏதும் அவருக்கு அறிவுரை சொல்லுமாறு பணிவாக் கேட்கிறேன். எனக்கு ஜி மடல் மூலம்   விரும்ப தக்கது . . என் நண்பிக்கு என் மீது மிகவும் நம்பிக்கை . அதனால் மனம் திறந்து பேசுவார். உங்கள் பதிலை ஆவலுடன் எதிபார்க்கும் சகோதரி ..............(பெயர் நீக்கப் பட்டுள்ளது)


பதில்

நல்லது சகோதரி , நிறையப் பிரச்சனைகளை சொல்லிவிட்டு பெண்ணுறுப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு மட்டுமே விளக்கம் கேட்டு உள்ளீர்கள்.
இருந்தாலும் வேறு சில விளக்கங்களையும் நான் அளிக்க கடைமைப் பட்டுள்ளேன்.குறிப்பாக உடற்பருமன் பற்றியது. நீரழிவு  நோயுடன் அதிக உடற்பருமன் உள்ள ஒருவர் உடற்பயிற்சி செய்யும் போது மூச்சு வாங்குகிறது என்பதால் உடற்பயிர்ச்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லதல்ல.

ஒரேயடியாக அதிக தூரம் நடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருநாளும் நடக்கும் தூரத்தை அதிகரித்து நடக்கலாம்.(முழங்காலில் என்னவிதமான சத்திர சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறவில்லை, இருந்தாலும் அதனால் நடப்பதற்கு எந்த தடையும்இல்லை)

மேலும் உணவுக் கட்டுப்பாடும், சரியான அளவுகளில் மாத்திரைகளை உடகொள்ளுவதும் அவசியமாகும்.

முதற்படியாக உங்கள் நண்பியை உடலைக் குறைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபடச் செய்யுங்கள்.

அடுத்து பிறப்புறுப்பு சம்பந்தமான பிரச்சினைகள்...

அந்தத் திரவத்தின் தன்மையைப் பொறுத்து அது என்ன பிரச்சினை(நோய்) என்று ஓரளவுக்கு அனுமானிக்கலாம்.


உதாரணத்திற்கு பிறப்புருப்பிலே  இருந்து வெளிவரும் திரவமானது வெள்ளை நிறமாகவும் தயிர் போன்ற அமைப்பையும் கொண்டதாகவும், துர் நாற்றம் அற்றதாகவும் இருந்தால் அது Candidiasis  எனப்படும் ஒரு பங்கசுத் தொற்றினால் ஏற்பட்டிருக்கலாம்.  நீரழிவு நோயாளிகளுக்கு இந்தத் தோற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

அடுத்ததாக திரவமானது light brown நிறமாகவும் துர் நாற்றம் வீசுவதாகவும் , அரிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தால் Bacterial Vaginosis எனப்படும் பக்டீரியாவால் ஏற்படும் தொற்றாக இருக்கலாம்.

இளமஞ்சள் நிற அல்லது பச்சை நிற திரவத்தோடு அரிப்பும் ஏற்படுமானால் Trichomoniasis எனப்படும் தொற்றாக இருக்கலாம்.

இவற்றிற்கு சரியான மருந்துகளை பாவிப்பதன் மூலம் இலகுவாக தீர்வு காணப்படலாம்.



உங்கள் நண்பிக்கு நீரழிவு நோய் இருப்பதனால் முதலாவதாக சொன்ன  Candidiasis எனப்படும் பங்கசினால் ஏற்பட்டிருப்பதற்கான சந்தர்பம் அதிகம் .



அதற்காக மருந்துகளை பாவிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படலாம்.

இருந்தாலும் உங்கள் நண்பியின்  வயதைக் கருத்தில் கொள்ளும் போது உடனடியாக ஒரு பெண்ணியல் நோயியல் நிபுணரை சந்திப்பது நல்லது என நினைக்கிறேன் ஏனென்றால் சில புற்று நோய்கள் கூட மிக அரிதாக இப்படியான அறிகுறிகளை வெளிக்காட்டலாம்.

ஆண் வைத்தியரிடம் சொல்ல வெட்கம் என்றால் பெண் வைத்தியர் ஒருவரை நாடலாம்தானே!



உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.



8 comments:

நிலாமதி said...

பெண்களின் பிரச்சினை சம்பந்தமான பதிவு கண்டே.ன். உங்களின் கைம்மாறு கருதாத ,வாசகர்களுக்கு தரும் உதவிக்கு நன்றி.

ராஜவம்சம் said...

pass to another vaasagan
+1

a said...

நல்லதொரு விழிப்புனர்வு பதிவு ....

ஓட்டு போட்டாச்சி....

Guruji said...

விழிப்புனர்வு பதிவு ....

http://ujiladevi.blogspot.com

துமிழ் said...

நிலாமதி said... பெண்களின் பிரச்சினை சம்பந்தமான பதிவு கண்டே.ன். உங்களின் கைம்மாறு கருதாத ,வாசகர்களுக்கு தரும் உதவிக்கு நன்றி.//

கருத்துக்கு நன்றி நிலாமதி

துமிழ் said...

ராஜவம்சம் said...

pass to another vaasagan
+1//

thanks

துமிழ் said...

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

நல்லதொரு விழிப்புனர்வு பதிவு ....

ஓட்டு போட்டாச்சி....//


thanks

துமிழ் said...

உஜிலாதேவி said...

விழிப்புனர்வு பதிவு ....

http://ujiladevi.blogspot.com//
thanks