Showing posts with label கர்ப்பிணி மருத்துவம். Show all posts
Showing posts with label கர்ப்பிணி மருத்துவம். Show all posts

Monday, April 28, 2014

நச்சுக் கொடி கீழிறக்கம்(Placenta Previa)


பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும்.




                                                  நச்சுக்கொடி (placenta)


இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின் கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி இறக்கம்) எனப்படும்.

எந்தளவிற்கு கருப்பையின் கீழ்ப் பகுதியில் இது இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த நோயின் தீவிரங்கள் தீர்மானிக்கப்படும்.

முற்றாக கீழ் பகுதியில் நச்சுக் கொடி அமையும் போது குழந்தை பிறக்கும் கருப்பை வாயிலை மூடிக் கொண்டிருக்கும்.இது மிகவும் தீவிரமான 
நிலையாகும். இந்த நிலையில் சீசர் செய்வதைவிட வேறு வழியில்லை.






கருப்பை வாயில் வரை நச்சுக்கொடி(placenta) கீழிறங்கி இருக்கும் ஆபத்தான நிலை 

இந்த நோயின் அறிகுறி

கர்ப்பம் தரித்து ஆறு மாத காலமளவில் பிறப்புறுப்பு வழியே சிறிதளவு இரத்தம் போகுதல்.இதன் போது எந்தவிதமான வலியும்ஏற்படாது.இது எச்சரிக்கைக் குறியாக எடுத்துக் கொள்ளப்படும்(warning bleeding).அதாவது கர்ப்பம் தரித்து 5 மதத்திற்குப் பிறகு சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்பட்டாலேயே உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும். அதைத் தவற விடும் பட்சத்தில் அடுத்தமுறை இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது தீவிரமானதாக இருக்கும். அதற்கு முன்னமே வைத்திய சாலைக்கு சென்று முற்பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நோயை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரே வழி ஸ்கேன் செய்வதே. அநேகமான நாடுகில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் 
செய்து இந்த நோய் உள்ளதா என்று அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னமே பார்க்கப்படும். இருந்தாலும் நம் நாட்டில் போதிய வசதி இல்லாத்
படியால் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் அந்த ஸ்கேன் செய்யப்படுவதில்லை. ஆனாலும் இரத்தம் போகிறவர்களுக்கு கட்டாயாமாக ஸ்கேன் செய்தே  ஆக  வேண்டும்..

இந்த நோய் உள்ளது உறுதிப் படுத்தப்பட்ட பின்பு அந்த நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

நச்சுக்கொடி பெருமளவில் கருப்பையின் கீழ் பகுதியில் இருந்தால் அந்த நோயாளி குழந்தை பெறும் வரை வைத்திய சாலையில் நீண்ட 
நாட்களுக்கு இருக்க வேண்டி வரலாம். மேலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தினத்திற்கு முன்னமே சீசர் செய்யப்படும்.

சிறிதளவான அளவில் நச்சுக் கொடி கீழே இருப்பவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படலாம். ஆனாலும் அடிக்கடி வைத்தய்சாலைக்கு செல்ல 
வேண்டியதுடன் சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்திய சாலையிலேயே குழந்தைப் பிறப்பு மேற்கொள்ள வேண்டும்.அவர்கள் சாதாரணமான
முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்....

இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டு அம்மாவின் உயிரைப் பறித்து விடக்கூடியது. ரத்தப் போக்கு குழந்தை பெறுவதற்கு முன் ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் ஏற்படலாம்.

சீசர் செய்த பின்பு கூட இவர்களுக்கு அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படலாம். அதனால் நான்கு பைண்ட்ஸ் இரத்தம் தயாராக வைத்துக் கொண்டே அவர்களுக்கு சீசர் செய்யப்படும். 

அதேபோல சாதாரண குழந்தைப் பேரின் பின்னும் இரத்தப்போக்கு அதிகமாகப் போகலாம்.

அதனால் இந்த நிலையை சமாளிக்கும் வசதிகளாக இரத்த வங்கி ,சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்திய சாலைகளிலே குழந்தைப் பேறு மேற்கொள்ள வேண்டும்.



மிகவும் முக்கியமாக இந்த நோயாளிகள் குழந்தை பெறும் வரை முற்று முழுதாக உடலுறவைத் தவிர்க்க வேண்டும்..

Sunday, December 5, 2010

குழந்தைப் பிறப்பின் பின் எத்தனை நாட்களுக்கு இரத்தம் போகும் ?

கேள்வி 

டாக்டர் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதமாகியும் தொடர்ச்சியாக இரத்தம் போகிறது.இவ்வாறு எத்தனை மாதம்
வரை இரத்தம் போகலாம்.?

பதில் 

குழந்தை பிறந்து சில நாட்களுக்கு பெண்ணுறுப்பு வழியே இரத்தம் போன்ற திரவம் தொடர்ச்சியாக வெளிவரும்.
இது முற்று முழுதாக இரத்தம் அல்ல .இரத்தத்தோடு ,கருப்பையின் உட்பகுதியில் இருந்து பிரிந்து வரும் பகுதிகள் 
போன்றவையோடு வேறு பல சுரப்புகளும் சேர்ந்து வெளிவரும். இது லோக்கியா ..எனப்படும். ஆரம்ப ஒரு வாரகலத்திற்குள்
இவ்வாறு வெளிவருவது சிவப்பு நிறமாக இரத்தம் போலவே இருப்பதால் அது ரெட் லோக்கியா எனப்படும்.
அதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு அதன் நிறம் இள மஞ்சள் நிறமாகவும் பின்பு வெள்ளை நிறமாகவும் வெளியேறும்.

அப்படியல்லாமல் குழந்தை பிறந்த பின்பு தொடர்ச்சியாக இரத்தமே வெளியேறுகிறது என்று நினைப்பவர்கள் உடனடியாக 
வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும். குழந்தை பிறந்து ஒரு நாளின் பின் இரத்தம் தொடர்ச்சியாக வெளியேறினால் கூட 
அசாதாரணமானது.

Thursday, December 2, 2010

நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது



கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது.

அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு(amniotic membrane) உள்ளது.






இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று கேழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இதன் அறிகுறிகள்...
திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்)

இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடிரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவ முறை

34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் வைத்திய சாலையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.

ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது 
உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.


இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது.


ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.


நச்சுக்கொடி பிரிதல் -ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டியது


Placenta  எனப்படும் நச்சுக் கொடி குழந்தைக்கு தேவையான பாதர்த்தங்களைத் தாயில் இருந்து எடுத்து குழந்தைக்கு வழங்குவதோடு குழந்தையில் இருந்து கழிவுகளை தாயின் குழந்தைக்கு அனுப்பும் உறுப்பாகும். இது வழமையாக குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறும்.

ஆனால் சில வேளைகளில் குழந்தை பிறப்பதற்கு முன்னமே இதுகருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறலாம். இது ஆங்கிலத்திலே Placental abruption எனப்படும் .இது மிகவும் அபாயகரமானது. குழந்தை பிறப்பதற்கு முன்னமே நச்சுக் கொடி கருப்பையில் இருந்து பிரிவதால் குழந்தைக்குத் தேவையான ஒட்சிசன் உட்பட்ட முக்கிய பதார்த்தங்கள் கிடைக்காமல் போவதால் குழந்தை கருப்பையிலேயே இறந்து போய் விடலாம்.

                                           குழந்தை பிறப்பதற்கு முன்னமே பிரிந்த நச்சுக் கொடியில் இரத்தம் கட்டியாகி உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு விரைவாக குழந்தை பிறக்கச் செய்யப் பட முடியோ அவ்வளவு விரைவாக பிறக்கச் செய்யப்பட வேண்டும்.
அநேகமான சந்தர்ப்பங்களில் சீசர் செய்ய வேண்டி வரலாம். ஆனாலும் சில வேளைகளில் கருப்பைக் வாயில் போதியளவு விரிவடைந்து இருந்தால் சீசர் செய்யாமல் ஆயுதங்கள்  ..பாவிப்பதன் மூலம் குழந்தை பிறக்கச்செய்யப்படலாம்.
.

பொதுவாக இது கர்ப்பம் தரித்து 5-6 மத காலத்திற்குப் பின்பு எப்போதும் ஏற்படலாம்.

அறிகுறிகள்...
1.தொடர்ச்சியான வயிற்று வலி (பிரசவ வலி விட்டு விட்டே ஏற்படும்)
விட்டு விட்டு ஏற்படாமல் தொடர்ச்சியாக வயிறு வலி ஏற்பட்டால் அது நச்சுக் கொடி பிரிந்ததால் இருக்கலாம்.

2.பிள்ளைத் துடிப்புக் குறைதல்

3.மயக்கம் வருவது போன்ற உணர்வு

4.சிலவேளைகளில் வயிற்று வலியுடன் சிறிதளவு  ரத்தம் யோனி(பிறப்புறுப்பு) வழியே வெளிப்படலாம்.

மேற்சொன்ன அறிகுறிகள் உள்ள கர்ப்பிணிகள் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

இது எவருக்கு வேண்டுமானாலும் எந்தவிதமான காரணம் இல்லாமலும் ஏற்படலாம்.ஆனாலும் பலமாக வயிற்றிலே அடிபடுவதும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம்.மேலும் கர்ப்பகால பிரசர் நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

 ஏற்கனவே சொன்னது போல இந்த நோய் கருப்பையின் உள்ளேயே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம்.அத்தோடு அதிக இரத்தம் வெளியேறுவது காரணமாக தாயின் உயிருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதற்கு மருத்துவ முறை

குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் உடனடியாக பிறப்புத் தூண்டப்பட வேண்டும். சில வேளைகளில் சீசர் செய்ய வேண்டி வரலாம்.

ஆகவே கர்ப்பம் தரித்து .. மாத காலத்திற்குப் பின் உங்களுக்குத் தொடர்ச்சியான வயிற்று வலி ஏற்பட்டால் எந்தவைதமான உணவுகளையும் வாய் வழியே உட்கொள்ளாமல் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று உtங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

தொப்புள்க்கொடி வெளியேற்றம் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது

தொப்புள் கோடி தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்கு உயிவாழத் தேவையான பதார்த்தங்களை பரிமாறுவதற்கும்,குழந்தையின் இரத்தத்தில் இருந்து கழிவுகளை தாயின் இரத்தத்திற்கு அனுப்புவதற்கும் உதவுகிறது. இது வழமையாக குழந்தை பிறக்கும் போதே குழந்தியோடு சேர்ந்து வெளிவரும். ஆனால் சில வேளைகளில் இது குழாந்தை பிறப்பதற்கு முன்னமே வெளிவரலாம் இது cord prolapse  எனப்படுகிறது.

இது மிகவும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தான நிலையாகும்.

                         கருப்பைக்கு வெளியே தொப்புள் கொடி கீழிறங்குதல்             
இது ஏற்படும் பெண்களில் சிலவேளைகளில் தொப்புள் கொடி வெளியே வெளிப்படலாம் அல்லது கருப்பையை விட்டு வெளியேறிய தொப்புள் கொடி உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே இருக்கலாம்.அப்போது உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே 
எதோ ஒன்று இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். 

அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் தொப்புள் கொடியை கையால் தொடுவதைத் தவீர்த்து கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற நிலையில் இருந்தவாறே விரைவாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். 


               வைத்தியசாலைக்கு செல்லும்போது நீங்கள் இருக்கவேண்டிய நிலை 
குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் விரைவாக சீசர் செய வேண்டி வரலாம்.சிலவேளைகளில் பிரசவத்தில் இருக்கும் போது கூட இது ஏற்படலாம். அப்போதும் பிரசவ நிலையைப் பொறுத்து உடனடியாக சீசர் செய்யவேண்டி வரலாம்.

உடனடியாக சீசர் செய்ய வேண்டி வரலாம் என்பதால் இவ்வாறன நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் எந்தவிதமான சாப்போடோ நீராகரமோ உட்கொள்ளாமல் வைத்திய சாலைக்கு செல்லுதல் வேண்டும்.

இது ஏற்படாமல் தடுப்பதற்கோ ,யாருக்கு ஏற்படலாம் என்று எதிர்வு கூறுவதற்கோ முடியாது.

ஆனாலும் குழந்தை பிறப்பிற்கான பிரசவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நீர்க் குடம் உடைபவர்களுக்கு இது ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதால் , உங்கள் பிறப்புறுப்பில் இருந்து திடீரென நீர் வெளியேறினால் வலி ஏற்பட விட்டாலும் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். 

நச்சுக் கொடி கீழிறக்கம்-ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டியது



பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும்.





                                                  நச்சுக்கொடி (placenta)


இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின் கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி இறக்கம்) எனப்படும்.

எந்தளவிற்கு கருப்பையின் கீழ்ப் பகுதியில் இது இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த நோயின் தீவிரங்கள் தீர்மானிக்கப்படும்.

முற்றாக கீழ் பகுதியில் நச்சுக் கொடி அமையும் போது குழந்தை பிறக்கும் கருப்பை வாயிலை மூடிக் கொண்டிருக்கும்.இது மிகவும் தீவிரமான 
நிலையாகும். இந்த நிலையில் சீசர் செய்வதைவிட வேறு வழியில்லை.







கருப்பை வாயில் வரை நச்சுக்கொடி(placenta) கீழிறங்கி இருக்கும் ஆபத்தான நிலை 

இந்த நோயின் அறிகுறி

கர்ப்பம் தரித்து ஆறு மாத காலமளவில் பிறப்புறுப்பு வழியே சிறிதளவு இரத்தம் போகுதல்.இதன் போது எந்தவிதமான வலியும்ஏற்படாது.இது எச்சரிக்கைக் குறியாக எடுத்துக் கொள்ளப்படும்(warning bleeding).அதாவது கர்ப்பம் தரித்து 5 மதத்திற்குப் பிறகு சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்பட்டாலேயே உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும். அதைத் தவற விடும் பட்சத்தில் அடுத்தமுறை இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது தீவிரமானதாக இருக்கும். அதற்கு முன்னமே வைத்திய சாலைக்கு சென்று முற்பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நோயை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரே வழி ஸ்கேன் செய்வதே. அநேகமான நாடுகில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் 
செய்து இந்த நோய் உள்ளதா என்று அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னமே பார்க்கப்படும். இருந்தாலும் நம் நாட்டில் போதிய வசதி இல்லாத்
படியால் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் அந்த ஸ்கேன் செய்யப்படுவதில்லை. ஆனாலும் இரத்தம் போகிறவர்களுக்கு கட்டாயாமாக ஸ்கேன் செய்தே  ஆக  வேண்டும்..

இந்த நோய் உள்ளது உறுதிப் படுத்தப்பட்ட பின்பு அந்த நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

நச்சுக்கொடி பெருமளவில் கருப்பையின் கீழ் பகுதியில் இருந்தால் அந்த நோயாளி குழந்தை பெறும் வரை வைத்திய சாலையில் நீண்ட 
நாட்களுக்கு இருக்க வேண்டி வரலாம். மேலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தினத்திற்கு முன்னமே சீசர் செய்யப்படும்.

சிறிதளவான அளவில் நச்சுக் கொடி கீழே இருப்பவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படலாம். ஆனாலும் அடிக்கடி வைத்தய்சாலைக்கு செல்ல 
வேண்டியதுடன் சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்திய சாலையிலேயே குழந்தைப் பிறப்பு மேற்கொள்ள வேண்டும்.அவர்கள் சாதாரணமான
முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்....

இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டு அம்மாவின் உயிரைப் பறித்து விடக்கூடியது. ரத்தப் போக்கு குழந்தை பெறுவதற்கு முன் ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் ஏற்படலாம்.

சீசர் செய்த பின்பு கூட இவர்களுக்கு அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படலாம். அதனால் நான்கு பைண்ட்ஸ் இரத்தம் தயாராக வைத்துக் கொண்டே அவர்களுக்கு சீசர் செய்யப்படும். 

அதேபோல சாதாரண குழந்தைப் பேரின் பின்னும் இரத்தப்போக்கு அதிகமாகப் போகலாம்.

அதனால் இந்த நிலையை சமாளிக்கும் வசதிகளாக இரத்த வங்கி ,சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்திய சாலைகளிலே குழந்தைப் பேறு மேற்கொள்ள வேண்டும்.

மிகவும் முக்கியமாக இந்த நோயாளிகள் குழந்தை பெறும் வரை முற்று முழுதாக உடலுறவைத் தவிர்க்க வேண்டும்..

Wednesday, December 1, 2010

கர்ப்பிணிகளுக்கு மலம் கறுப்பாக போவதேன்?

கேள்வி 

டாக்டர் ! நான் நான்கு மாதக் கர்ப்பிணி. எனக்கு சில நாட்களாக வயிற்றிலே ஏதோ செய்வது போன்ற உணர்வு இருக்கிறது. சரியாக சாப்பிட முடியவில்லை. மலம் போவது கஷ்டமாக இருக்கிறது. சில வேளைகளில் மலம் கறுப்பு நிறமாகப் போகிறது.ஒரு நண்பியிடம் கேட்ட போது கர்ப்ப காலத்தில் கறுப்பாக மலம் போவது சாதாரணமானது என்கிறாள்.அது உண்மையா?
அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்

நல்லது சகோதரி. கர்ப்ப காலத்தில் கருப்பாக மலம் போவதற்கும் கர்ப்பத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
ஆனாலும் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் இரும்புச் சத்துக் குளிசைகள் காரணமாக மலம் கறுப்பாக போகலாம்.
அத்தோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசிக்குறைவும், வயிற்றில் உள்ள அசௌகரியங்களும் கூட அந்த மாத்திரையால் ஏற்பட்டதாக இருக்கலாம்.அதனால் வைத்தியரிடம் சொல்லி வேறு விதமான மாத்திரைகளை பாவித்துப் பாருங்கள்.அதற்காக அச்சப் படத் தேவை இல்லை.

Sunday, November 28, 2010

ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் !

கேள்வி 

பெண்களைப்போல ஆண்களும் பூப்படைவதாகக் கேள்விப்பட்டேன் உண்மையா சார்?

பதில் 

ஆம் . கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்.  

Thursday, November 25, 2010

கருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அறிந்து கொள்வதெப்படி?

கேள்வி

டாக்டர் எனது மனைவி நான்கு மாத கர்ப்பிணி.வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.இந்த நேரத்தில் மனைவியின் இடதுபக்க மார்பு பெரிதாக இருந்தால் ஆண் குழந்தையே பிறக்கும் என்று எனது
நண்பர் ஒருவர் சொன்னார்.அது உண்மையா?
(தமிழாக்கம்)

பதில்

ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு மார்பகங்களின் அளவும் சாதாரணமாகவே வேறுபட்டதாகவே இருக்கலாம்.அதை வைத்துக் கொண்டு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதெல்லாம் மூட நம்பிக்கை.
கர்ப்பையில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்கான ஒரே வழி ஸ்கேனிங் செய்து கொள்வதே.நீங்கள் ஒரு மாகப் பேற்று வைத்தியரிடம் சென்று ஸ்கேனிங் செய்து என்ன குழந்தை என்று உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
(நீங்கள் எந்த நாட்டில் உள்ளீர்கள் என்று சொல்லவில்லை .சில நாடுகளில் கருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று சொல்லுவது சட்டப்படி குற்றம். அவ்வாறான நாடுகளில் குழந்தை பிறக்கும் வரை
காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை)

குழந்தை பிறக்கும் முன்பே பால் சுரக்கலாமா?

நான் எழு மாதக் கர்ப்பிணி.எனக்கு நேற்று மார்பிலிருந்து மஞ்சள் நிறத் திரவம் வெளியேறியது.இன்றும் என் உள்ளாடை நனைந்திருந்தது.
 நான் வெளிநாட்டில் கணவருடன் தனியாக இருப்பதால் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.நல்லவேளையாக இன்று உங்கள்
தளத்தை பார்க்க பின் பெரிய ஆறுதலாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?இது ஏதாவது நோயின் அறிகுறியா?
(தமிழாக்கம்)

பதில்

நல்லது சகோதரி. நீங்கள் நேரு மஞ்சள் நிறத் திரவம் வெளியேறியதாக சொன்னிர்கள்.இது அனேகமாக கடுப்புப் பால் எனப்படும் colostrum  என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து இன்று வெளியேறுவது சாதாரண பாலாக இருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.எதற்கும் நீங்கள் உங்கள் மார்புகளை அழுத்தி வெளியேறுவது பால்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளியேறுவது பால்தான் என்றால் அச்சப்படத் தேவை இல்லை.குழந்தை பிறக்கும் முன்பே பால் வெளியேறுவது சாதாரண நிகழ்வாகும்.

வெளியேறுவது பால் இல்லாவிடில் அல்லது ரத்தம் கலந்திருப்பின் வைத்தியரை  நாடுவது உகந்தது.

Tuesday, November 23, 2010

கர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கரமான நோய்



உலகிலேயே அதிகளவான கர்ப்பிணிகளின் மரணத்திற்கு காரணமாக இருக்கும்
நோய் கர்ப்பகால உயர் குருதியமுக்கமாகும்(பிரஷர்).இது pregnancy induced hypertension  எனப்படும் .

கர்ப்பகால பிரஷர் நோய் எனப்படுவது பிரஷர் நோய் இல்லாத ஒரு பெண்ணிலே கர்ப்பம் 
தரித்தபின் பிரஷர் நோய் ஏற்படுவதாகும்.

இது பல பாரதூரமான விளைவுகளை தாய்க்கும் ,குழந்தைக்கும் ஏற்படுத்தலாம்.

பொதுவாக இந்த நோய் கர்ப்பம் தரித்து 20 வாரங்களுக்குப் பிறகே ஏற்படும்.

இது தீவிரத்தன்மையைப் பொறுத்து பல கட்டங்களாகப் பிரிக்கப்படும்.

1.பிரஷர் மட்டும் கூடிய நிலை
2.அதிகரித்த பிரஷரோடு சிறுநீரிலே அல்புமின் எனப்படும் புரதம் வெளியேறும் நிலை 
( வெளியேறும் புரதத்தின் அளவைப் பொறுத்து இந்த நிலை இன்னும் பிரிக்கப்படும்)
3.மேற்சொன்ன இரண்டோடும் வலிப்பு ஏற்படும் நிலை (eclampsia)

இறுதி நிலையானது மிகவும் பயங்கரமானது.சிறிது நேரத்திலேயே தாயையும் பிள்ளையையும் கொன்று விடக்கூடியது.

பிரஷர் மட்டும் கூடியுள்ள ஆரம்ப நிலையிலே மருந்துகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.
ஆனாலும்  பிரஷரை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தமுடியாமல் போகும் நிலையில் அல்லது புரத வெளியேற்றம் அதிகரிக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு குழந்தையைப் பிறக்கச்செய்வதுதான்

வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக குழந்தையை பிறக்கச்  வேண்டும்.

சில வேளைகளில் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் தாயைக் காப்பாற்றும் பொருட்டு 7 மாதமளவிலேயே(சிலவேளை அதற்கு முன்னும் ) குழந்தையை பிறக்கச் செய்ய வேண்டி வரலாம்.அந்த நிலையில் குழந்தையை விட தாயின் உயிரே கவனத்தில் கொள்ளப்படும்.

குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் பிரஷர் தானாக சரியாகிவிடும்.

ஆகவே பெண்களே! 

1.நீங்கள் கர்ப்பம் தரித்த பின் மாதம் ஒருமுறையாவது உங்கள் பிரஷரை சோதித்துக்கொள்ள வேண்டும்.
2.உங்களுக்கு பிரஷர் நோய் ஏற்பட்டால் எந்த நிமிடமும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
3.பிரஷர் நோய் ஏற்பட்டவர்கள் மிகவும் கவனமாக வைத்தியரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.
4.சில வேலை நீண்ட நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்கியிருக்கவும் வேண்டிவரலாம்.
5.சிலவேளைகளில் உங்கள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு குழந்தையை தியாக செய்யவேண்டியும் வரலாம் 


கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரஷர் நோய்க்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்படும் தேவை இல்லை

மேலே சொன்ன பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரஷர் நோயிலே ஏற்படும். மாறாக பிரஷர் நோய் ஏற்கனவே உள்ள  ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் இந்தப் பிரச்சினைகள் ஏற்படாது.


இது பற்றிய மேலதிக சந்தேகங்களை முன் வையுங்கள்.

கர்ப்ப கால நீரழிவு.

சில கர்ப்பிணிகளுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் மட்டும் நீரழிவு நோய் ஏற்பட்டு குழந்தை பிறந்தபின் சுகமாகிவிடலாம்.

இதை எவ்வாறு கண்டு பிடிக்கலாம்?

ரத்தப் பரிசோதனை மூலமே இது உறுதிப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
கர்ப்பகாலத்திலே சாதாரணமானவர்களின் சிறு நீரிலே கூட சீனி காணப்படுவதால் சிறுநீர்ப் பரிசோதனை மூலம் நீரழிவு நோய் உள்ளதா என்று உறுதிப் படுத்திக்கொள்ள முடியாது.

கர்ப்பகால நீரழிவுக்கும் கர்ப்பம் அற்றவர்களில் ஏற்படும் நீரழிவுக்கும் என்ன வித்தியாசம்?

கர்ப்பகால நீரழிவு குழந்தைப் பிறப்போடு பூரணமாக சுகமாகிவிடும்.ஆனால் மற்றவகையான நீரழிவு பூரணமாக சுகமாவதில்லை. வாழ்நாள் பூராகவும் மருந்து எடுக்கவேண்டி வரலாம்.

கர்ப்ப கால நீரழிவானது கர்ப்பம் தரித்து ஐந்து மாதங்களுக்குப் பிற்பட்ட காலத்திலே ஏற்படும்.ஆகவே கர்ப்பம் உண்டாகிய ஒவ்வொரு பெண்ணும் ஆரம்பத்திலே (முதல் மூன்று மாதத்துக்குள்)சீனியின் அளவை சோதித்தறிந்து கொள்ளவேண்டும்.அந்த ஆரம்பகாலத்தில் நீரழிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அது கர்ப்பகால நீரழிவாக இருப்பதற்கான சந்தர்ப்பம் குறைவு.

அதாவது நீங்கள் கர்ப்பம் தரித்தவுடன் உங்கள் சீனியின் அளவை சொத்திதுப் பார்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே சீனி அதிகமாக இருந்தால் அது கர்ப்ப கால நீரழிவாக இருக்க முடியாது. மாறாக உங்களுக்கு இருப்பது நாட்பட்ட
நீரழிவாக இருக்கலாம்.
அதேவேளை ஆரம்பத்தில் சீனியின் அளவு சாதாரணமாக இருப்பவர்கள் மீண்டும் 5-6 மாதமளவில் சீனியை சோதித்தறிய வேண்டும்.
அப்போது அவர்களுக்கு நீரழிவு இருந்தால் அதுவே கர்ப்பகால நீரழிவு.
அதாவது கர்ப்பம் உருவாகும் போது நீரழிவு இல்லாத ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் உருவாகிய பின் நீரழிவு ஏற்பட்டால் அதுவே கர்ப்பகால நீரழிவு.

கர்ப்பகால நீரழிவு ஏற்பட்ட குழந்தைகளுக்கு அந்த நீரழிவினால் அங்கக் குறைபாடுகள் ஏற்படுவதில்லை.

ஆனாலும் அந்தக் குழந்தைகள் நிறை அளவுக்கதிகமாக கூடிவிடுவதினால் பிறக்கும் போது பல சிக்கல்கள் ஏற்படலாம்.
மேலும் கருப்பையினுள்ளே நீரின்( அம்நியோட்டிக் திரவம்)  அளவு அதிகரிப்பதாலும் பாதிப்புக்கள் ஏற்படலாம்.




நீரழிவு நோயுள்ள  தாய்க்குப் பிறந்த பிறந்த நிறை கூடிய குழந்தை.

மிகவும் முக்கியமாக நீரழிவு நோய் உள்ள கர்ப்பிணியின் குழந்தை கருப்பையினுள்ளே திடீரென எந்தவிதமான காரணக்களும் இல்லாமல் இறந்தும் விடலாம்.இவ்வாறு இறப்பு நடைபெறுவது குறிப்பாக கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில்.அதனால் நீரழிவு நோயுள்ள கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறக்கும் தினமாக கொடுக்கப்பட்ட தினத்திற்கு
இரு வாரங்களுக்கு முன்னமே குழந்தை பிறக்கச் செய்யப்படுகிறது.அதற்கர்பால் கருப்பையில் குழந்தை இருப்பது
குழந்தைக்கு ஆபத்தாக அமையலாம்.

மேலே சொன்ன பாதிப்புக்களை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு அவர்களின் சீனியின் அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சீனிக் கட்டுப்பாடு ஆரம்பத்தில் உணவு முறை மூலம் முயற்சி செய்து முடியாமல் போனால் இன்சுலின் மூலம் மேற்கொள்ளப்
படும். இன்சுலின் தவிர்ந்த எந்த மாத்திரையும் கர்ப்பகாலத்தில் பாவிக்கப் பட முடியாது.

குழந்தை பிறந்த பின் அவர்களின் நீரழிவு பூரணமாக குணமாகிவிடும்.
ஆனாலும் கர்ப்ப காலத்தில் நீரழிவு ஏற்பட்டவர்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் சாதாரணமான நாட்பட்ட நீரழிவு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்பதால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருடம் ஒரு முறையேனும்
நீரழிவு உள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் சந்தேகங்களை பின்னூட்டத்தில் முன்வையுங்கள் .

Saturday, November 20, 2010

40 வயதில் கருத்தரிக்கலாமா?

கேள்வி 

எனக்கு 40 வயது . கணவர் வெளிநாட்டில் வேலை செய்து இப்போதுதான் திரும்பி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தைதான் உள்ளது.இந்த வயதில் நான் பிள்ளை பெறலாமா? விளக்கவும் .
(தமிழாக்கப்பட்டுள்ளது)


பதில்

நல்லது சகோதரி. உங்களுக்கு மாதவிடாய் ஒழுங்காக வருமாயின் பிள்ளை பெற்றுக் கொள்வதில் எந்தத் பிரச்சினையும் இல்லை.
ஆனாலும் நவீன மருத்துவத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் அது ஒரு அபாயகரமான பிரசவம்(High Risk pregnancy) என்ற ரீதியிலே பராமரிக்கப்படும்.
அதாவது அவர்களுக்கு35 வயதை விடக் குறைந்த கர்ப்பிணிகளோடு ஒப்பிடும் போது ஏற்படக் கூடிய பிரச்சினைகள்  அதிகமாகும். அதற்காகவே அவர்களுக்கு சற்று அதிகமான கர்ப்பகால கவனிப்புத் தேவைப் படுகிறது.

35  வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பகால நீரழிவு, குருதியமுக்கம் போன்றவை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதால் நீங்கள் கர்ப்பம் தரித்த பின் மாதம் ஒருமுறையாவது (அல்லது வைத்தியரின் அறிவுரைப்படி அடிக்கடி வைத்தியரை சந்திக்கவேண்டும்)

மேலும் இந்த வயதில் உங்களுக்கு இப்போதே நீரழிவு அல்லது பிரஷர் (உஅய்ர் குருதியமுக்கம்) போன்றவை ஏற்பட்டிருக்கலாம்.
கர்ப்பம் தரிக்க முன் கட்டாயமாக ஒரு வைத்தியரைச் சந்தித்து அந்த நோய்கள் இல்ல என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து இந்த வயதிலே கர்ப்பம் தரித்தால் குழந்தையிலு சில குறைபாடுகள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
அதிலே முக்கியமாது Down Syndrom எனப்படும் மொங்கோலியன்  பேபி எனப்படும் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சந்தர்ப்பம் அதிகம்.

ஆகவே கருத்தரித்து மூன்று மாத காலத்துக்குள் வைத்தியரின் உதவியுடன் குழந்தைக்கு அந்தப் பிரச்சினை இல்லை என்பதைஉறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அதாவது வயிற்றில் இருக்கும் போதே இந்த நோய் உள்ள குழந்தைகள் அடையாளம் காணப்படலாம்.

இறுதியாக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனாலும் மேலே சொன்ன பிரச்சினைகளைத் தவீர்ப்ப்தற்காக சரியான மருத்துவ கண்காணிப்பைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும்.

Wednesday, November 17, 2010

குழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்

கேள்வி

Dear Doctor,
                     My wife delivered a baby on normal delivery  about 4 months back. But still no menstural period come yet. Can I do sex with her now..?
Is there any protection method needs to follow such as condoms, Copper-t.
Please advise.
Regards,
( டாக்டர் எனது மனைவி நான்கு மாதத்திற்கு முன் சாதாரண பிரசவம் மூலம் குழந்தை பெற்று எடுத்தாள்.அவளுக்கு இன்னும் மாதவிடாய் 
வரவில்லை.அவளோடு நான் இப்போது உடலுறவு வைத்துக் கொள்ளலாமா ? ஏதாவது கர்ப்பத்தடை பாவிக்க வேண்டுமா? அப்படியாயின் அதற்கு 
சிறந்த முறை ஆணுறையா அல்லது லூப் போடுவதா?)

பதில்

உங்கள் மனைவி குழந்தைக்கு பாலூட்டுவது காரணமாக மாதவிடாய் ஏற்படுவது தடைப் பட்டுள்ளது.இது மருத்துவத்தில் Lactational amenorrhea 
எனப்படும்.இது இயற்கையாகவே ஏற்படுத்தப்பட கருத்தடை முறையானாலும்  அதை நம்ப முடியாது.
நீங்கள் உறவில் ஈடுபட்டால் கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆகவே நீங்கள் கருத்தடை முறை பாவிப்பது கட்டாயம்.

குழந்தை பிறந்த பின் எப்போது உறவில் ஈடுபட வேண்டும் என்பது உங்கள் இருவரையும் பொறுத்தது.

நீங்கள் இருவரும் மனதளவிலும் உடல் ரீதியாகவும் தயாரானால் தாராளமாக உறவில் ஈடுபட முடியும்.

ஆனால் அதற்கு முன் தகுந்த கர்ப்பத்தடை பாவிப்பது கட்டாயம்.

இந்த நிலையில் உங்களுக்கு உகந்தது கொப்பர் லூப் போட்டுக் கொள்வதே. ஆணுறை நம்பகத் தன்மை அற்றது.

மேலும் இந்த இடுகையும் உங்களுக்கு உதவலாம்.


குழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்?



உங்கள் சந்தேகங்களையும் என்ற yourdoubt@yahoo.com முகவரிக்கு அனுப்பி வை யுங்கள்.

Monday, August 23, 2010

கர்ப்பிணி மல்லாக்கப் படுக்கலாமா?

Hello sir,
i am 7 months pregnant now... 30 weeks completed.. my mom advised me to sleep only in sideways.. dont sleep straight..i am afraid to sleep now so can you let me know the sleeping position from 31st week.. Please advice..if i sleep straight .. will my baby get affected?

waiting for your next blog regarding this?


Thanks
Divya//


நல்லது திவ்யா !

உங்கள் அம்மா சொல்வது உண்மைதான்.நீங்கள் மல்லாக்கப் படுக்கும் போது கர்ப்பப் பை ரத்தக் குழாய்களை அழுத்துவதால் குழந்தைக்கு செல்லுகின்ற ரத்தத்தின் அளவு மற்றும் போசனைப் பொருட்களின் அளவு குறையலாம்.ஆகவே இடதுபுற பக்கவாட்டாக படுப்பது நல்லது.
இடுதுபக்க பக்கவாட்டாக படுக்கும் போது உங்களையறியாமலேயே மல்லாக்கத் திரும்பிவிட்டால் பெரிதாக கவலைப்படத் தேவை இல்லை , மீண்டும் பக்கச் சரிவாக படுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

Friday, August 20, 2010

குழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடலாம்?


இது பொதுவாக நிறையப் பேருக்கு இருக்கும் சந்தேகம். இது சம்பந்தமான சந்தேகங்களைக் கொண்ட ஏராளமான மெயில்களைப் பார்த்தபின்பு தனித்தனியாக பதில் அளிக்காமல் பொதுவான இடுகையாகவே இடுகின்றேன்.

குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று கால எல்லை இல்லை. எப்போது பெண்ணின் மனதும் உடலும் அதற்குத் தயாராகிறதோ அப்போது அவர்கள் உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும். 

சில பெண்கள் குழந்தை பிறந்து சில நாட்களிலே அதற்குரிய மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப்  பெற்றுக் கொள்வார்கள். சில பெண்கள் உடல் உறவுக்குத் தயாராவதற்கு சில மாதங்கள் கூடச் செல்லலாம்.
ஆகவே இது பற்றி கணவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆலோசித்து இருவரும் மனமற்றும் உடல் ரீதியாக உடலுறவுக்குத் தயாரான பிறகு உடலுறவை ஆரம்பித்துக் கொள்ள முடியும். 

முக்கியமாக உடலை உறவை ஆரம்பிக்கும் போது வைத்திய ஆலோசனை மூலம் தகுந்த குடும்பக் கட்டுப்பாட்டை தெரிவு செய்து கொள்வது அவசியமாகும்.

உடலுறவில் ஈடுபடுவதால் தாய்ப்பால் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

Monday, June 14, 2010

கர்ப்பம் கலைக்கும் உணவுகள்....



கேள்வி

டாக்டர் , நான் இப்போது கர்ப்பம் தரித்து ஒரு மாதம் ஆகிறது. எனது வீட்டிலேயே என்னை பப்பாசி, தக்காளி என்று நிறையச் சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம் என்று தடை போடுகிறார்கள்.சாப்பாடுகளால் என் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? தயவுசெய்துவிளக்கவும்.

பெயர்குறிப்பிட விரும்பாத பெண்.

பதில் 

 நல்லது தோழி இதுவெல்லாம் நம் சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள். நன்கு கனிந்த எந்தப் பழமும் நீங்கள் பயமில்லாமல் சாப்பிடலாம்.
அதே போல் எந்த மரக்கறி வகைகளையும், இறைச்சிகளையும், மீன்  முட்டை போன்றவை கூட பயமில்லாமல் சாப்பிடலாம்.

செயற்கையான இரசாயனப் பதார்த்தம் கொண்ட சந்தையில் கிடைக்கும் உணவுகளை வேண்டுமானால் தவிர்க்கலாம்.
செயற்கையான உணவுகளில் நமக்குத் தெரியாமல் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் சிலவேலைகளை குழந்தையைப் பாதிக்கலாம்.

இயற்கையான உணவுகள எதுவேண்டுமானாலும் பயமில்லாமல் உண்ணலாம்.
மரக்கறிகளை சமைக்கும் முன் நன்றாக அலசிக் கழுவிக்கொள்ள மறக்க வேண்டாம்.

அது தவிர முழுகுதல், ஊடுதல் படி ஏறுதல் போன்றவற்றாலும் கர்ப்பம் களையும் என்பதும் வெறும் மூட நம்பிக்கையே.

Monday, June 14, 2010

மாரடைப்பு

மாரடைப்பு - இடுகை 1
மாரடைப்பு - இடுகை  2

மாரடைப்பு - இடுகை 3

மாரடைப்பினால் ஏற்படுகின்ற நெஞ்சு வலியின் இயல்புகளை மேலே உள்ள இடுகைகளினை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள் .

உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ நெஞ்சு வலி ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் பதட்டமடையாமல் அவரின் நெஞ்சுவலியின் இயல்புகளை கேட்டறிந்து கொள்ளுங்கள்.

அது மாரடைப்பினால் ஏற்படும் வலியின் இயல்புகளைக் கொண்டிருந்தால் , அந்த நபருக்கு ஆறுதலாக மனத் தைரியம் கொடுப்பதோடு முடிந்தால் ஒரு அஸ்பிரின்(Aspirin)  மாத்திரையை விழுங்கக் கொடுத்து உடனடியாக வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

அந்த நேரத்தில் வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுவதை பிற்போட வேண்டாம்.

வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றவுடன் வைத்தியர் அது மாரடைப்பினால் ஏற்பட்ட வலி என்று சந்தேகித்தால் உடனடியாக மாரடைப்பின் தீவிரத்தைக் குறைப்பதற்கான சில மாத்திரைகள் மற்றும் ஒட்சிசன் என்பவற்றைக் கொடுத்த பின்பே அது மாரடைப்பு என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்.

மாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப் படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்படும் சில அடிப்படை பரிசோதனைகலாவன,
1..ஈ சி ஜி .(ECG)
2. எக்கோ பரிசோதனை.(Echo)
3.இரத்தத்தில் விடப்படும் சில இதயப் பதார்த்தங்களின் அளவுகள்.(Cardiac marker)

இது தவிர கொலஸ்ரோல் அளவு(Lipid profile), இரத்தத்தின் சீனியின் அளவு(bloodsugar level), இரத்தத்தில் ஹீமோ குலோபினின் அளவு(Hb) , சிறுநீரகத் தொழிற் பாட்டைக் குறிக்கும் பதார்த்தத்தின் அளவுகள்(Renal Function test) போன்றவையும்பரிசோதிக்கப்படும்.



தொடரும்...



Sunday, June 13, 2010

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..

கேள்வி

டாக்டர்  ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

 திருமதி கணேசன் .

பதில்


நல்லது !

இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.

இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

பி கு-

உங்கள் சந்தேகங்களை yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டுமென்றால் வாக்களித்துச் செல்லுங்கள்...

Sunday, March 28, 2010

குழந்தை பிறக்கும் திகதியை நீங்களாகவே கணித்துக் கொள்ளுங்கள்!

(மீள் பதிவு )

ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் , எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள்.

மருத்துவர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்?

இதில் எந்த தந்திரமும் இல்லை மந்திரமும் இல்லை. நீங்களும் இலகுவாக கணித்துவிடலாம்.
முதலில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட திகதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த திகதியோடு ஒன்பது மாதங்களையும் ஏழு நாட்களையும் கூட்டி விடுங்கள். அதுதான் உங்கள் குழந்தை பிறக்கும் நாளாகும்.
உதாரணத்திற்கு உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது ஜனவரி மாதம் முதலாம் திகதி என்றால் , முதலாம் மாதத்தோடு ஒன்பது மாதங்களைக் கூட்டுங்கள், பின்பு முதலாம் திகதியோடு ஏழைக்கூட்டுங்கள்.

உங்கள் கடைசி மாதவிடாய் திகதி - 01 / 01/ 2009
நீங்கள் கூட்ட வேண்டியது - 07/09/....

குழந்தை பிறக்கும் அனுமானித்த திகதி -08/10/2009

இந்த திகதியானது வெறுமனே ஒரு அனுமானித்த திகதிதான் , சரியாக இந்த திகதியில்தான் குழந்தை பிறக்கும் என்றில்லை சில நாட்கள் முந்தள்ளியோ பின் தள்ளியோ போகலாம். ஆனாலும் இந்த திகதியை அடிப்படையாக வைத்தே அந்த கர்ப்பிணிக்கான மருத்துவ முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

இப்படிக் கணிப்பது கூட கஷ்டம் என்பவர்கள் சும்மா ஜாலியா கீழே உள்ள லிங்கிலே போய் உங்களின் மாதவிடாய் திகதியை கொடுத்துவிடுங்கள் அங்கே உள்ள கணிப்பான் உங்கள் திகதியை கணித்துச் சொல்லி விடும்.
http://www.bestinfosite.com/edd.asp


பி.கு- தொடர்ச்சியாக கர்ப்பிணி மருத்துவம் என்ற லேபிலிலே கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்பந்தமான அடிப்படை கருத்துக்களை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ஆக்க பூர்வமான சந்தேகங்களையும் முன்வையுங்கள் பதிவிட்டு தீர்த்து வைக்கிறேன்.


பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness)




காலை நேர நோய்(morning sickness) எனப்படுவது கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படுகின்ற ஒரு நிலையாகும். அதாவது இது நோய் எனறு சொல்லப்பட்டாலும் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

morning sickness என்றால் என்ன?
இது கர்ப்பமான பெண்களில் ஏற்படுகின்ற வாந்தி மற்றும் வாந்தி எடுக்க வேண்டிய உணர்வு(nausea) என்பவற்றையே காலை நேர நோய் என்கின்றோம்.


இந்த காலை நேர நோயானது கர்ப்பமாகி முதல் மூன்று தொடக்கம் நான்கு மாதங்களுக்கே காணப்படும்.
அதாவது ஒரு கர்ப்பமான பெண் வாந்தியினால் அவதிப்படுவது முதல் மூன்று மாதங்களுக்கே.

இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

காலை நேர நோயின் ஆதிக்கத்தை குறைக்க சில வழிகள்,

1.எண்ணைத்தன்மையான, மற்றும் கொழுப்புத் தன்மையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.   (பொரித்த காரம் கூடிய  உணவுகள்)

2.ஒரேயடியாக நிறையச் சாப்பிடுவதைத் தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.
3.காபோகைட்றேட்டு(carbohydrate) நிறையக் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் (வெள்ளை அரிசி, அவித்த உருளைக் கிழங்கு, இனிப்புக் குறைவான மாவினால் செய்த பிஸ்கெட் போன்றவை)
4.நித்திரையால் எழுந்தவுடன் படுக்கையில் சற்று நேரம் அமர்ந்து இருந்து ஆறுதலாக சுவாசியுங்கள்
5.பழங்கள் மரக்கறி வகைகளை அதிகம் உட்கொள்ளுங்கள்
6.வயிறு முற்றாக வேருமையாவதைத் தவிருங்கள்

7.படுக்கையில் இருந்து எழுந்தவுடனேயே உங்கள் அன்றாட செய்கைகளில் ஈடுபடும் முன் சீனித்தன்மை குறைந்த பிஸ்கட் ஏதாவது சாப்பிடுங்கள் .



இது தவிர அளவுக்கதிகமான வாந்தி உங்களை வாட்டுமானால் வைத்தியரை நாடி வாந்தியைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம்.

உங்கள் நண்பன் துமிழ் .
மேலும் சந்தேகங்களைக் கேளுங்கள் !