Showing posts with label ஆணுறுப்பு. Show all posts
Showing posts with label ஆணுறுப்பு. Show all posts

Tuesday, November 16, 2010

ஆணுறுப்பின் அளவும் உடலுறவும்



கேள்வி 


வணக்கம் ஐயா. எனது ஆண் உறுப்பு மிகவும் சிறியதாக உள்ளதாக உணர்கிறேன். சில செக்ஸ் படங்கள் பார்த்த பின்தான் உண்மையில் எனது ஆணுறுப்பு மிகவும் சிறிதாக உள்ளதாக உணர்ந்தேன்.இப்போது எனது வீட்டிலேயே எனக்கு பொண்ணு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.எனக்கோ மிகவும் பயமாக உள்ளது. எனது ஆண் உறுப்பை பெரிதாக்க என்ன செய்யலாம் .தயவு செய்து விரைவாக பதில் சொல்லவும்.

பதில்

நல்லது நண்பரே இது பற்றி பலமுறை நான் விளக்கம் கூறியுள்ளேன் .
நீங்கள் மற்றவரின் ஆணுறுப்போடு உங்கள் ஆணுறுப்பை ஒப்பிடுவது மிகவும் தவறானதாகும்.

ஒவ்வொருவரின் உயரம் வேறு படுவது போலவே அவர்களின் ஆணுறுப்பின் அளவும் வேறுபடும்.

உயரம் குறைவானவர்கள் ஒன்றும் தாழ்வனவர்கள் அல்ல அதே போலத்தான் ஆணுறுப்பு சிறிதானவர்களும் ஆண்மை குறைந்தவர்கள் அல்ல.

நீங்கள் செக்ஸ் படங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம். அவை மற்றவர்களைக் கவர்வதற்காக கவர்ச்சியாவனவர்களை வைத்து எடுக்கப்படும் செயற்கையான படங்கள்.
அவற்றோடு உங்கள் நிஜத்தை ஒப்பிட வேண்டாம்.

ஆணுறுப்பின் அளவில் அல்ல ஆண்மை தங்கியுள்ளது.

ஆண்மைக்கு முக்கிய ஆணித்தரமே  மன உறுதிதான் . தேவை இல்லாத யோசனைகளை மூலம் உங்கள் மன உறுதியைத் தொலைத்து 
உங்கள் ஆண்மையை வீணாக்கி விடாதீர்கள்.
உங்கள் வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம்  செய்து .சந்தோசமாக வாழுங்கள்.

முந்திய இந்த இடுகையையும் வாசியுங்கள் .
ஆணுறுப்பின் அளவிலா ஆண்மை உள்ளது ?




உங்கள் சந்தேகங்களையும் என்ற yourdoubt@yahoo.com முகவரிக்கு அனுப்பி வை யுங்கள்.

Thursday, March 25, 2010

முத்துக் கட்டிகள் (பொது இடத்தில் வாசிப்பதை தவிர்க்கவும்)

Anonymous said...
Pearly penile papules பற்றி விவரமாக சொல்லவும் மற்றும் treatment முறை...


இந்த அனானி நண்பருக்காக இந்தப் பதிவு ..


இந்த ... .. எனப்படும் கட்டிகள் அநேகமான ஆண்களிலே ஏற்பட்டிருக்கும். இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள்
( படத்தைப் பாருங்கள்).                                                                                                                                                                                                                                                                                       முத்துக் கோர்வை போல வரிசையான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது.
  

இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமலும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.

உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விடயமா?
இல்லவே இல்லை!
இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இது பாலியல் மூலம் தொற்றுகிற நோயும் அல்ல.

இந்த பொதுவான பிரச்சினைக்காக எந்த ஆணும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இதற்கு எந்தவிதமான மருத்துவச் சிகிச்சையும் தேவையும் இல்லை.

அதையும் தாண்டி இவற்றை நீக்கத்தான் வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் ஒரு தோலியல் நிபூணரச் சந்தித்து காபனீர் ஒக்சைட்டு லேசர் மூலம் இலகுவாக அகற்றிக் கொள்ளலாம்.




இந்தக் கட்டிகள் நீக்கப் படும் முன்னும் பின்னும்