Showing posts with label சுய இன்பம். Show all posts
Showing posts with label சுய இன்பம். Show all posts

Sunday, November 14, 2010

சுய இன்பம்

நான் இந்தத் தளம் தொடங்கிய நாளில் இருந்து சாதாரணமாக சுய இன்பம் பற்றி சந்தேகமாக ஒருநாளைக்கு ஒரு மெயிலாவது வந்துகொண்டேதான்  இருக்கிறது.

எல்லா பிரச்சினைகளும் சுய இன்பம் பற்றி நம்மிடையே நிலவும் பிழையான சில கருத்துக்களினாலேயே ஏற்படுகின்றன.

சுய இன்பம் காரணமாக ஆண்மை குறைவடைகிறது, குழந்தைப் பாக்கியம் லாமல் போகும் என்ற எண்ணத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற 
சந்தேகங்களே மிகவும் அதிகமாக உள்ளன.
அதிலும் ஆண்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெறத் தொடங்கும் போதே இது ஒரு பிரச்சினையாக அவர்கள் மனதிலே உருவெடுக்கத் தொடங்குகின்றன.
தன் சுய இன்பப் பழக்கத்தால் தன்னால் தன் மனைவியை சந்தோஷப் படுத்துவதிலே சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

நேற்று ஒரு நண்பர் கேட்டிருந்தார் , அவர் நீண்ட நாட்களாக சுய இன்பத்தில் ஈடுபடுவதாகவும் இப்போது தனக்கு விரைவிலேயே விந்து வெளியேறி விடுவதாகவும் இதனால் தன் வருங்கால மனைவியைச் சந்தோஷப் படுத்த முடியுமா என்று சந்தேகமாக இருப்பதாகவும் அதைச் சோதித்துப் பார்க்க விலைமாதர் ஒருவரிடம் செல்லப் போவதாகவும் கேட்டு இரு ந்தார்.

சுய இன்பத்தில் விந்து வெளியேற எடுக்கும் நேரமும் உறவில் ஈடுபடும் போது விந்து வெளியேறும் நேரமும் ஒன்றாக இருக்கும்   என்ற பிழையான எண்ணத்திலாயே அந்த நண்பருக்கு விலை மாதரிடம் போய்ச் சோதிக்கும் அளவுக்கு மனது போயிருக்கிறது.

அவர் அப்படியே விலைமாதரிடம் சென்று முதற்தடவையாக உறவில் ஈடுபடும் போது மனப் பதட்டம் காரணமாக அவருக்கு விரைவாகவே விந்து வெளியேறி விட்டால் அதையே உண்மை என்று அவர் வாழ்க்கையே சீரழிந்து போய் விடலாம்.  

ஆகவே நண்பர்களே சுய இன்பம் காரணமாக உங்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படுகின்ற இந்தமாதிரி பாதிப்புக்களைத் தவிர வேறு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படும் என்று இதுவரை மருத்துவரீதியாக நிரூபிக்கப் படவில்லை.

ஆதலால் சுய இன்பம் காரணமாக தன் இல்லறம் பாதிக்கப்படும் என்று தேவை இல்லாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி 
உண்மையிலே உங்கள் இல்லறத்தை வீணாக்கி விடாதீர்கள்.

Sunday, May 30, 2010

சுய இன்பம் சில சந்தேகங்களும் பதில்களும் !

கேள்வி
ஹாய் வணக்கம், தங்களின் உபயோகரமான பதில்களுக்கு நன்றி .
நான் இதற்கு முன்பும் சுயஇன்பம் பற்றி சந்தேகம் கேட்டுள்ளேன். நான் தொடர்ந்து பத்து வருடம் சுய இன்பத்தில்  ஈடுபட்டிருந்தேன். சில நாட்களாக விறைப்பு குறைந்தது போல உணர்கிறேன். சுய இன்பத்தால் ஆண்மை போய் விடுமா? சற்று விளக்கவும். எனக்கு திருமணம் நிச்சயிக்க பட்டுள்ளது குழப்பத்தில் உள்ளேன்.
அரவிந்தன்//

பதில் 


நல்லது நண்பரே !
நீங்கள் முன்பு சுய இன்பம் பற்றி கேட்டது போல நானும் முன்பு சுய இன்பம் பற்றி இந்த இடுகையில் எழுதி இருந்த காரணாத்தால் பதில் அளிக்காமல் இருந்தேன். இருந்தாலும் மீண்டும் நீங்கள் கேட்ட காரணத்தால் சில விடயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

சுய இன்பம் என்பது மனித இனத்திலே காணப்படும் ஒரு பொதுவான செயன் முறையாகும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்விலே 99 வீதமான ஆண்களும் .. 85 வீதமான பெண்களும் சுய இன்பத்திலே ஈடுபடுவதாக தெரியவந்தது.
நமது சமூகத்திலே சுய இன்பம் என்பது ஏதோ குற்றமான செயல் என்பது போன்ற பிரமை ஏற்படுத்தப்பட்டதாலே இந்தப் பிரச்சினை உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அந்த ஆய்வின் படி 100  ஆண்களை எடுத்துக் கொண்டால் 99 பேர் சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள். சுய இன்பம் உண்மையில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமானால் அனேகமாக எல்லா ஆண்களும் ஆண்மை அற்றவர்களாகவே இருக்க வேண்டும்.

சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது முற்றிலும் ஒரு மூட நம்பிக்கை.

மேலும் சுய இன்பம் பற்றி அறிந்து கொள்ள இந்த இடுகையில் போய் வாசித்துப் பாருங்கள்.
மேலும்  நீங்கள் பத்து வருடமாக சுய இன்பத்தில் ஈடு படுவதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் நீங்கள் ஆண்மைக் குறைவு ,அதாவது ஆணுறுப்பில் விறைப்புத் தன்மை அடைவதில் குறை அற்றவர் என்பதாகும் .

வெறுமனே மூட நம்பிக்கை மூலம் உங்கள் ஆண்மையைக் குறைவாக மதிப்பிடாமல் நிச்சயிக்கப்பட பெண்ணோடு திருமண பந்தத்தில் இணைந்து  நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.


Friday, March 19, 2010

சுய இன்பம் (MASTUBATION)

Anonymous said...
நன்றி நண்பரே.. எனக்கு சில கேள்விகள் உண்டு. நான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தில் ஈடு பட்டுள்ளேன், தற்போது அதிலிருந்து வெளி வர வேண்டுமென்று நினைக்கிறேன், மேலும், இதனால் எனக்கு திருமணம் ஆகி குழந்தை பெறுவதில் ஏதும் பிரச்சனை இருக்குமா என விளக்கவும்.
இந்த நண்பருக்காக எனது முந்திய ஒரு இடுகையை மீள் பதிவிடுகிறேன்..
சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும். நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத்துக்களைச் சொல்வார்கள். வலைப் பூக்களில் கூட இது பற்றி எதிர்மறையான கருத்துக்கள்தான் நிறைய எழுதப்படுகின்றன.

எது எப்படியோ சில நிரூபிக்கப் பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன்.

ஒரு ஆய்விலே அறியப் பட்டது 95 வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள். ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் எத்தனையோ?

திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப் பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.
மற்றும் குழந்தை பிறப்பதிலும் எந்தச்  சிக்கலும் ஏற்படாது. ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்துகள் ஏற்கனவே உருவானவை. அவர் சுய இன்பத்தில் ஈடுபடா விட்டாலும் அவை தானாகவே வெளியேறிவிடும். இதனால் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண்மை குறைகிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை.