Showing posts with label கருத்தடை. Show all posts
Showing posts with label கருத்தடை. Show all posts

Saturday, April 14, 2012

இயற்கையான கருத்தடை முறைகள்




உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும்.

இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம்.

முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் .

அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது. 

அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல். 
இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது.

இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும். அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை 
பாவிப்பது கட்டாயமாகும். 



Thursday, April 12, 2012

குழந்தை பிறந்த பின்பு எப்போது கருத்தடை முறைகள் பாவிக்கப்பட வேண்டும்




குழந்தை பிறந்த பின்பு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது பல மாதங்களுக்கு பிற்போவதுடன் கருத்தரிக்கும் சந்தர்ப்பமும் குறைவடைகிறது.இதிலே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அவர்கள் கருத்தரிக்கும் சந்தர்ப்பம் 
குறைவடைகிறதே தவீர முற்றாக இல்லாமல் போகவில்லை .
ஆகவே ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பிறந்து ஆறு வார காலத்திலேயே ஏதாவது கருத்தடை மாத்திரையை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

Saturday, April 10, 2010

கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி நடைபெறுகிறது !

நிரந்தரமான கருத்தடை முறையாக பெண்களிலே LRT எனப்படும் சத்திர சிகிச்சை செய்யப்படுவதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

இந்த சத்திர சிகிச்சையின் போது பலோப்பியன் குழாய்  எனப்படும் இரண்டு குழாய்கள் வெட்டித் தைக்கப்படும். இந்தக் குழாயே பெண்ணின் முட்டை கருப்பையின் உள்புறம் நோக்கி நகர வழி செய்வது. இவ்வாறு நகரும் முட்டை ஆணின் விந்தைச் சந்தித்தால் இந்தக் குழாயின் உள்ளே கருக்கட்டல் நடந்து உருவாகும் சிசு கருப்பையை வந்து சேரும்.

இந்தக் குழாயை வெட்டி தைத்து விடுவதன் மூலம்  முட்டை விந்தனுவைச் சந்திப்பது தடைப்படுவதால் கருக்கடல் நடைபெறுவது தடுக்கப்படுகிறது.




                                                      பலோப்பியன் குழாய் வெட்டி அகற்றப்படும் முறை

இந்த சத்திர சிகிச்சை பெண்ணின் வயிற்றிலே சிறு வேட்டுக்கள் போடுவதன் மூலம் மேற்கொள்ளப் படலாம் அல்லது சிறிய கமராவை வயிற்றின் உள்ளே செலுத்தி அந்த கமராவினால் பார்த்தபடி சத்திர சிகிச்சையை முடிக்கலாம்.

ஒரு பெண் தனது குடும்பத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின்பே இந்த சத்திர சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின் குழந்தை பெறுவதென்பதுசாத்தியமற்றது.