Showing posts with label சிறுநீர்த் தொற்று. Show all posts
Showing posts with label சிறுநீர்த் தொற்று. Show all posts

Thursday, July 22, 2010

சிறுநீர்த் தொற்று

கேள்வி

டாக்டர்!
எனது வயது 35 . எனக்கு இரண்டு நாளாக சிறுநீர் கழிக்கும் போது எரிவு உள்ளதுடன் அடி வயிறும் நோகிறது. இது எதனால் ஏற்படுகிறது? நான் மருந்துகள் பா விக்க வேண்டுமா?
நன்றிகளுடன்
ரதி

பதில்

உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று சொல்ல வில்லை . இருந்தாலும் நீங்கள் சொல்லியவற்றை வைத்துப் பார்க்கும் போது இது சிறு நீர்த் தொற்றினால் ஏற்பட்டிருக்கலாம். அருகில் உள்ள வைத்தியரை சந்தித்து உங்கள் சிறுநீர்ப் பரிசோதனை செய்து பாருங்கள்.

சிறுநீர்த் தொற்று என்றால் அன்டிபயட்டிக்ஸ்(antibiotics) சில நாட்களுக்கு பாவிக்க வேண்டும்.

மேலும் நன்றாக நீர் அருந்தவும். உங்கள் பெண்ணுறுப்புப் பகுதியை சுத்தமாக வைத்திருங்கள்.

முக்கியமாக உங்களுக்கு நீரசிவு நோய் உள்ளதா என்று சோதித்து அறியவும்.ஏனெறால் இந்த வயதில் சிறுநீர்த் தொற்று ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் நீரழிவும் ஒன்று.




உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.