Tuesday, July 26, 2011

மாதவிடாய் பிற்போகுதல்

வணக்கம் மேடம்
    நான் திருமணமாகாத கல்லூரி மாணவி. நான் கடந்த எட்டு மாதங்களுக்கு
முன் ஒரு விபத்தில் சிக்கி எனது காலில் பலத்த அடி காரணமாக சதை
பிய்த்துவிட்டது நிறய ரத்தம் விபத்தில் சேதமாகிவிட்டது காலில் பிளாஸ்டிக்
அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அதோடு பெல்விஸ் எனப்படும் காலும்
இடுப்பு எலும்பும் இணையுமிடத்தில் எலும்பு முறிவு அது பெட் ரெஸ்டில்
சரியாகிவிட்டது. கடந்த 3 மாதங்களூக் முன்பு வரை மாதவிடாய் சரியாக வந்து
கொண்டிருந்தது ஆனால் கடந்த 3 மாதமாக மாதவிடாய் ஆகவில்லை இதே போல்
எப்பவாவது ஒரு முறை பிரச்சணை இருக்கும் 2மாதம் மாதவிடாய் ஆகாமல் இருந்து
மறுபடி ஆவேண் ஆணால் இந்த முறை 3 மாதங்களாகியும் ஆகவில்லை. என்ன காரணம்
என்று கொஞ்சம் விளக்குங்கள் . நான் எந்த தவறும் செய்யவில்லை . கடந்த ஆறு
மாதங்களாக நன்றாக நடக்க முடியாத நிலை விபத்தின் காரணமாக தற்பொது நன்றாக
நடக்கிரேண் . கொஞ்சம் எடை கூடியுள்ளது தயவுசெய்து என்ன செய்யட்டும் என்று
என் MAIL ID கு தமிழில் பதில் அளியுங்கள்.


பதில்

நல்லது சகோதரி. 
மாதவிடாய் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் பிந்திப்போவதற்கு 
பல்வேறு விதமான காரணங்கள் இருக்கலாம்.
அதிலே முக்கியமான ஒரு காரணி மன உளைச்சல் ஏற்படுவதாகும்.கடந்த மூன்று 
மாத காலமாக உடல் சுகவீனமுற்று இருந்த உங்களுக்கு ஏற்பட்டிருந்த மன உளைச்சல் காரணமாக மாதவிடாய் பிற்போகி இருக்கலாம்.
இது ஒரு சாதாரண நிகழ்வு உங்கள் உடல் நிலையும் மன நிலையும் பழைய நிலைக்குத் திரும்பும் போது மாதவிடாயும் சீராகும்.

ஆனாலும் உங்க்கள் உடல் நிறை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளதோடு முன்பும் 
ரெண்டு மாதமளவில் மாதவிடாய் பிந்திப் போவதாக கூறியுள்ளதால் உங்களுக்கு 
சூலக நீர்க்கட்டிகள் பிரச்சினை (PCOD)இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது.


நீங்கள் ஒரு பெண் நோயியல் மகப்பேற்று நிபுணரை சந்திப்பது நல்லது.

6 comments:

ஜீவன்பென்னி said...

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கீங்க.. தொடர்ந்து எழுதுங்க மருத்துவரே..

Anonymous said...

pithavedipu, kaal ani patium eluthalame athatkuriya treatement ena

dsfs said...

வணக்கம் சார். உங்கள் வலைப்பூ ஆனந்த விகடன் வரவேற்பறையில் வெளிவந்திருக்கிறது. வாழ்த்துகள் சார்.

uloveitall said...

உங்கள் தளம் மிகவும் நன்றாக உள்ளது தெடர்ந்து எழுதும்

uloveitall said...

உங்கள் தளம் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதும்

rishvan said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...www.rishvan.com