Friday, December 3, 2010

குழந்தைப் பிறப்புகளிடையேயான இடைவெளி.


கேள்வி 
டாக்டர் ! எனக்கு ஒரு வயதிலே ஒரு குழந்தை இருக்கிறது. இப்போது மீண்டும் நான் கருத்தரிக்கலாமா?

பதில் 
ஒரு குழந்தை பிறந்து அடுத்த குழந்தை பிறப்பதற்கு இடையில் இரண்டுவருட கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
இருந்தாலும் இது கட்டாயமானதல்ல. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு வருடம் வரை காத்திருக்காமல் விரைவாக அடுத்த ( ஒரு வருடமளவில்) குழந்தையைப் பெற்றெடுப்பது நல்லது. 
இவ்வாறு குறைந்த கால இடைவெளியில் குழந்தை பெற நினைப்பவர்கள் நன்கு போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவது அவசியம்.
கேள்வி கேட்ட சகோதரி இது    நீங்கள் உங்கள் வயது பொருளாதார வசதி என்பவற்றை வைத்து தீர்மானிக்க வேண்டிய விடயம். 
ஆனாலும் உங்க்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்ட படியால் விரும்பினால் நீங்கள் தாராளமாக கருத்தரிக்கலாம் என்பதே என் பதில்.   .

1 comment:

azhagu murugan said...

கருத்தடை குறித்த எனது கேள்வி

டியர் டாக்டர்,
உங்களது இணைய தள மருத்துவ சேவைக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும் .

இயற்கையான கருத்தடை முறை குறித்து கேள்விபட்டிருக்கிறேன் .இதுவே மிகவும் பாதுகாப்பானது என்றும் அறிந்தேன். ஆனால் இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று விளக்கவும் .
எனது மனைவிக்கு ஏற்கனவே ( போன வருடம் ) ஒரு முறை அபார்சன் செய்திருக்கிறோம்.
அதற்குப்பின் அவளது பீரியட்ஸ் இடைவெளி பதினெட்டு நாட்களாக குறைந்து விட்டது.அதற்கு முன்பு இருபத்தியிரண்டு நாட்களாக இருந்தது .

இந்த இயற்கையான கருத்தடை குறித்து தெளிவான விளக்கம் தரவும்.
எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது ( மூன்று வயது ). இப்போதைக்கு அடுத்த குழந்தை வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.

நன்றி.
அழகு முருகன்